Sunday, April 8, 2018

000003. சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பிரிவு 114A –  கொடுமையான பாலியல் வன்முறை அல்லது பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண், தான் அந்த பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் நீதிமன்றம் அதனை அவ்வாறே ஏற்றுக்கொள்ளும்.

பிரிவு 119 -  ஒரு வழக்கின் சாட்சி பேச முடியாதவராயிருப்பின் அவர் நீதிமன்றத்தின் முன் எழுத்து மூலமாகவோ, சைகை மூலமாகவோ  மற்றவருக்குப் புரியும் வண்ணம் கொடுக்கும் சாட்சியம் வாய்மொழி சாட்சியத்துக்கு ஒப்பாக ஏற்றுக் கொள்ளப்படும்.

 கேள்வி:

சாதாரண வழக்குகளில் புகாரைப் பெற காவல் துறையினர் மறுக்கலாமா?

பதில்:

எவ்வகையான புகாரையும் காவல்துறையினர் பெற்றுக்கொள்ள மறுக்கக் கூடாது.  புகாரைப் பெற்று அதனை சமூக பதிவேட்டில் பதிவு செய்து அதன் நகலை புகார்தாரருக்குத் தரவேண்டும். பின் புலனாய்வில் குற்றம் நிகழ்ந்ததாக தெரியவந்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம் இல்லை எனில் வழக்கை முடித்துவிடலாம்.

கேள்வி:
கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளை - நிஜத்தில் காவல் துறை செய்கிறதா? அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

பதில்:

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும். இவற்றில் சில முக்கிய விஷயங்கள், அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம். நடைமுறைகளை பின்பற்றாவிட்டால், அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.

SC & ST (Prevention of Atrocities) Act, படி, ஒரு புகார் மீது ஒரு காவல் அதிகாரி வழக்கு பதிய செய்ய தவறினால், இந்த சட்டப்படி, அவரும் இந்த நடவடிக்கைக்கு ஆளாவார். குற்றவியல் விசாரணை முறை சட்டத்தில் 2013 இல் ஏற்பட்ட amendment படி, புலனாய்வு அதிகாரி, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 166-A இன் படியும் தண்டிக்கப்பட கூடியவர் ஆகிறார்.

166A. ஒரு பொது ஊழியராக இருந்து கொண்டு, சட்டத்தின் உத்தரவுக்கு கீழ்படியாதிருக்கின்ற பொது ஊழியர்:—
ஒரு பொது ஊழியராக இருந்து கொண்டு சட்டத்தின் உத்தரவுக்கு கீழ்படியாமளிருப்பதால், எவருக்கேனும் கேடு விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது அநேகமாக கேடு விளைவிக்கக்கூடும் என்ற அறிவுடன் அத்தகைய பொது ஊழியர் என்ற முறையில் தாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிமுறைக்கான சட்டத்தின் ஆணை எதற்கும் அறிந்தே கீழ்படியாமலிருந்தால்….அவர் மீது நீதி மன்றதில் வழக்கு தொடரலாம்..!!

No comments:

Post a Comment