Wednesday, April 11, 2018

000005. விபத்து நிவாரணத் திட்டம்

▪தமிழ்நாடு அரசு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய தொழிலாளர்கள் இறந்தால் அவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கிட பல்வேறு திட்டங்களை வெவ்வேறு கால கட்டங்களில் அமலாக்கம் செய்து வந்தது. பின்னர் மேற்குறித்த அரசு ஆணைகளின்படியான எல்லா நிவாரண திட்டங்களையும் ஒருங்கிணைத்து அரசாணை நிலை எண் 471 நிதி (முதலமைச்சர் பொது நிவாரணம் மற்றும் நிதித்துறை நாள்:23.5.89ல் விபத்து நிவாரணம் வழங்கிட ஒருங்கிணைந்த ஒரு திட்டமாக “விபத்து நிவாரண திட்டம்”என்ற திட்டத்தினை அரசு அறிவித்தது.

            இந்த விபத்து நிவாரண திட்டத்தின்படி ஒரு தொழிலாளி அவர் தன்னுடைய தொழிலில் ஈடுபட்டிருக்கும் போதோ அல்லது அத்தொழில் சார்ந்த இதர பணிகளில் ஈடுபட்டிருக்கும் போதோ விபத்துக்குள்ளாகி இறந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ கீழ்க்கண்டவாறு நிவாரண உதவித்தொகை வழங்கிடலாம். (அரசாணை நலை எண் 570 வருவாய் (என்.சி.1) துறை நாள்:27.10.1999)

1)            இறப்பு     ரூ.15,000/-

2)            தோலுக்கு கீழே இரண்டு கையும் இழப்பு     ரூ.15,000/-

3)            இடுப்பு அளவில் இரண்டு கால்களையும் இழத்தல்  ரூ.15,000/-

4)          இரண்டு கால்களும் / இரண்டு கைகளும் செயல்படாதிருத்தல்  ரூ.15,000/-

5)            இரண்டு கண்களையும் இழத்தல் ரூ.15,000/-

6)            ஒரு காலும் ஒரு கையும் முற்றிலும் செயல் இழந்தோருக்கு   ரூ.15,000/-

7)    தோள்பட்டைக்கு கீழே மணிக்கட்டிற்கு மேலே கையை இழத்தல்     ரூ.10,000/-

8)            இடுப்புக்கு கீழே கணுக்காலுக்கு மேல் கால்களை இழத்தல்     ரூ.10,000/-

9)              ஒரு கண்  இழப்பு ரூ.10,000/-

10)            மணிக்கட்டு அளவில் கை அல்லது கைகளை இழத்தல்  ரூ.7500/-

11)            கணுக்கால் பாதம் அல்லது பாதங்களை இழத்தல்   ரூ.7500/-

12)    ஒரு கால் அல்லது ஒரு கை முழுவதுமாக செயல்படாதிருத்தல்     ரூ.7500/-



  இத்திட்டத்தின் கீழே நிவாரணம் பெற தகுதியுடைய தொழிலாளர்கள் விவரம்: (44 இனங்கள்) அரசாணை எண்.471, நிதித்துறை, நாள் 23.5.1989- இல் உள்ளபடி கீழ்க்கண்ட 44 வகை ஏழை தொழிலாளர்களுக்கு விபத்து நிவாரணத் திட்டம் செயல்படுத்திடலாம்.

1. சலவைத் தொழிலாளி

2. காலணித் தொழிலாளி

3. தச்சர்கள், மரவண்டி கட்டுவோர்

4. விலங்குகள் இழுத்துச் செல்லும் வண்டியோட்டிகள்

5. கருமார், சுத்தியல் கருமார்

6. பொன் வேலை செய்வோர், வெள்ளி வேலை செய்வோர்

7. கூடை முடைவோர்

8. கல் தச்சர்கள், கல்லில் குடைவோர், கட்டிட தொழிலாளி

9. ஓடு தொழிலாளர்கள்

10. செங்கல் அடுக்குவோர்கள்

11. கிணறு தோண்டுவோர்கள்

12. கிணறு கட்டுவோர்கள்

13. வேளாண்மைத் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் மற்றும் குறு விவசாயிகள் (2.5 ஏக்கருக்கு குறைவாக நிலமுன்ளோர்)

14. பதனீர் இறக்குவோர்

15. கழிவுநீர் அகற்றும் தொழிலாளிகள் 

16. பூச்சி மருந்து தெளிப்பவர்கள்

17. பனை மரம் / தென்னை மரம் ஏறுவோர்

18. மீனவர்கள் (கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக அல்லாதவர்)

19. கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள்

20. டிரக் ஒட்டுபவர்கள்

21. ஆட்டோ, ரிக்ஷா ஒட்டுனர்கள்

22. தனியார் கார், வாடகை கார் மற்றும் பஸ் ஓட்டுபவர்கள்
( வாகனங்கள் சொந்தமாக இல்லாதவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள்)

23. முடி திருத்துபவர்

24. கை வண்டி இழுப்போர்

25. மிதி வண்டி ஒட்டுநர்

26. தனியார் துறையிலுள்ள கைத்தறி நெசவாளர்கள்

27. மண்பாண்டம், மற்றும் மண்பொம்மைகள் செய்யும் குயவர், குலாளர் மற்றும் வேளாளர் 

28. வீடுகளில் பணிபுரிவோர்

29. பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபடுவோர்

30. சினிமா படப்பிடிப்பின்போது சம்பந்தப்பட்ட சினிமா தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்கள் என்ற வகையில் அமையும் சினிமா நடிகர்கள்

31. தினக்கூலி பெறும் செங்கல் தொழிலாளர்கள்

32. லாரிகளில் பாரம் ஏற்றி இறக்கும் ஏழைத் தொழிலாளர்கள் 

33. ஏழைத் தையல் தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது

34. வெள்ளை அடிப்போர், வண்ணம் பூசுபவர் மற்றும் மின் வினைஞர்கள் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது

35. கிராமிய நடனக் கலைஞர்கள்

36. சமையல் தொழில் செய்பவர்கள்

37. மாவு மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்கள்

38. தனியார் பேருந்தில் பணிபுரியும் நடத்துனர்கள்

39. பந்தல் மேடை, மண்டபம் மாநாடு, திருமணப்பந்தல்,uu அலங்காரவளைவுகள் அமைக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஒளி,ஒலி அமைக்கும் தொழிலாளர்கள்.

40. மலைகளிலுள்ள மரங்கள் மற்றும் பாறைகளில் ஏறி கல்பாசம், கடுக்காய் மற்றும் தேன் போன்ற வனப்பொருட்களைச் சேகரம் செய்யும் தொழிலாளர்கள் (கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர் மட்டும்.)

41. தனியாருக்குச் சொந்தமான கார், லாரி, டிரக் வேன்களில் வேலை பார்க்கும் டிரைவர் மற்றும் கிளீனர்கள் 

42. பிளம்பர்

43. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள்

44. முழுநேர ஒவியர்கள்

விபத்து குறித்தான விளக்கம்:

1.விபத்து என்பது இறப்பு அல்லது முற்றிலும் நேரிடை வெளித்தாக்குதலினால் ஏற்படும் நிகழ்வின் விளைவாக பார்வைக்கு புலப்படும் எந்த ஒரு உடற் காயம் என்றும் பொருள்படும்.

2.மது போதை, அணுக்கதிர் வீச்சு, யுத்தம் இயற்கை சீற்றங்கள், வாகன விபத்து, கலகங்களினால் ஏற்படும் விபத்து நீங்கலாக ஏனைய விபத்துகளில் ஏற்படும் மரணம் அல்லது இடல் ஊனம் விபத்து எனக் கருதப்படும்.

3.மது அல்லது மருந்துU அருந்தி சித்தம் கலங்கிய நிலையில் விபத்திற்கு உள்ளாதல் அல்லது தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளல், தற்கொலை செய்து கொள்ளல் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் பொருந்தாதவை ஆகும்.

4. மேலும் அணு தாக்குதலான யுத்தத்தினாலோ அல்லது வேறு இடற்பாடுகளாலோ ஒரு மொத்த பிரிவினர் பாதிக்கப்பட்டாலும் இத்திட்டத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

5. மரணமடைந்த தொழிலாளியை பிரேத பரிசோதனை செய்யாமல் புதைத்தாலோ அல்லது எரித்தாலோ அவரது குடும்பத்திற்கு இத்திட்டத்தின் கீழ் நிவாரண உதவித் தொகை வழங்கிட இயலாது.

நிதி உதவி கோர தகுதி பெற்றவர்கள்:

1. இறந்து போனவரின் மனைவி / கணவன்

2. இறந்தவரின் திருமணமாகாத மூத்த மகன் அல்லது மூத்த மகள்

(மைனராக இருப்பின் அவர்களது பாதுகாவலர்)

3. இறந்தவரின் பராமரிப்பில் இருந்த தாய் / தந்தை

4. இறந்தவரின் பராமரிப்பில் இருந்த மூத்த பேரன் அல்லது மூத்த பேத்தி

5. இறந்துபோனவரைச் சார்ந்து அவருடன் வாழ்ந்தவர்களில் வயதில் மூத்தவர் வாரிசுதாரர்களை பொருத்தவரையில் அவர்கள் சிறுவர்களாகவோ, சிறுமியர்களாகவோ இருந்தால் அத்தொகையை அவர்களது பெயரில் உரிய வயது நிரம்பும் வரை (18 வயதாகும்வரை) சேமிப்பு கணக்கில் வைக்க வேண்டும்.

(அரசு கடித எண் 27512 / எஸ்1/90-2/ வருவாய்த்துறை நாள்:9.3.90)
விண்ணப்பிக்க வேண்டிய முறை

1. மரணமடைந்த நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள் உரிய படிவத்தில் விண்ணப்பத்தினை நேரடியகாக தனி வட்டாட்சியருக்கு அனுப்பிட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களோ சரக வருவாய் ஆய்வர்களோ விண்ணப்பத்தினை பெறக்கூடாது.

2.மரணமடைந்த நாளில் இருந்து 6 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறினால் மேலும் ஓராண்டுக்குள் காலதாமதமாக விண்ணப்பித்தால் காலதாமதத்திற்கான காரணம் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தால் தாமதத்தை மாவட்ட ஆட்சியர் பிழை பொறுத்து ஆணையிடலாம்.

3.விபத்து நிவாரண திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. (அரசு கடித எண் 45042/ எஸ்1/92-3 வருவாய்த்துறை நாள்:9.7.92)

4.வெளிமாநிலங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்து தொழில் செய்யும் போது விபத்துக்குள்ளாகும் போது இம்மாநிலத்தில் விபத்து நிவாரண திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கக் கூடாது.(அரசு கடித எண் 6375 / எஸ்1/ 91-6 வருவாய்த்துறை நாள்:6.2.92)

5. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுபவர்களுக்கு ஆண்டு வருமானத்திற்கு வரைமுறை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. (அரசு கடித எண் 81266 நிதி முதலமைச்சர் பொது நிவாரண நிதித்துறை நாள்:12.7.89)

விண்ணப்பத்துடன் கீழ்க்காணும் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

1.அசல் இறப்பு சான்று

2.குடும்ப அட்டை செராக்ஸ் நகல்

3.வருமான சான்று

4.பாஸ்போர்ட் அளவு விண்ணப்பதாரரின் போட்டோ -3

5.பிரேத பரிசோதனை அறிக்கை

6.முதல் தகவல் அறிக்கை 

7.விபத்தினால் பாதிக்கப்பட்டதற்கான அரசு சிறப்பு மருத்துவரால் அளிக்கப்பட்ட ஊனச்சான்று.

விசாரணை செய்ய வேண்டிய முறை:

1) விண்ணப்பம் பெறப்பட்டவுடன் தாலுக்கா பதிவேட்டில் பதிந்து விசாரணைக்கு சரக வருவாய் ஆய்வருக்கு அனுப்ப வேண்டும்.

2) விண்ணப்பத்தின் முதுநிலை வரிசை எண் விவரம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

3) சரக வருவாய் ஆய்வர் விண்ணப்பத்தினை 30 நாட்களுக்குள் விசாரணை செய்து அறிக்கையினை அனுப்பிட வேண்டும். விண்ணப்பதாரர், கிராம நிர்வாக  அலுவலர், விபத்துக்குள்ளான நபர் குடியிருந்து வரும் இடத்திலுள்ள இருநபர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்/ உறுப்பினர் ஆகியோரிடம் விசாரணை செய்து வாக்கு மூலம் பெறப்பட வேண்டும். இறந்துபோனவர் தொழிலில் ஈடுபட்டிருந்தது குறித்தும் விபத்து நேர்ந்த விதம் குறித்தும் இந்த விபத்தின் போது உடனிருந்தவர்கள் அல்லது பார்த்துவர்களிடம் வாக்கு மூலம் பெறப்பட வேண்டும். யாருக்கு உதவித்தொகை வழங்கப்பட வேண்டுமென்பதற்கு தெளிவான குறிப்புரையுடன் பரிந்துரை செய்திட வேண்டும்.

4) சரக வருவாய் ஆய்வர்களிடமிருந்து வரப்பெற்ற விசாரணை மனுக்களில் 10 சதவிகித மனுக்களை நலிந்தோர் நலத்திட்ட தனி வட்டாட்சியர் நேரடியாக தல விசாரணை செய்ய வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுக்களை முடிவு செய்தலில் இதற்கென நியமிக்கப்பட்ட நலிந்தோர் நல உதவி திட்ட தனி வட்டாட்சியர்களின் தீர்வே இறுதியானது. இது தொடர்பான மேல் முறையீடுகள் எதுவும் ஏற்க முடியாது.

(அரசு கடித எண்.104043/எஸ்1/91-5 வருவாய்த்துறை நாள்:18.5.92)

இடி,மின்னல் தாக்கி இறப்பவர்களுடைய வாரிசு தாரர்களுக்கு விபத்து நிவாரண திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கிட இயலாது.(அரசு கடித எண்.55109/90-4 வருவாய்த்துறை)

ரயில்மோதி இறந்து போனதற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கிட இயலாது. (அரசு கடித எண்1099/99-4 வருவாய்த்துறை நாள்:7.12.99)

அரசாணை எண் 139 வருவாய்த்துறை நாள்:29.1.91ல் தெரிவிக்கப்பட்டவாறு பணியில் இருக்கும் போது பாம்பு போன்ற விஷமுள்ள பிராணிகள் கடித்தும், நீரில் முழ்குதல், தீ விபத்து இவற்றால் மரணமுறும் இனங்களுக்கு 29.1.91 முதல் விபத்து நிவாரண திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கிடலாம், ஆனால் தானே காணம் உண்டாக்கி கொள்ளுதல் / தற்கொலை மூலம் மரணம் ஆகியவை இவ்வினத்தின் கீழ் பொருந்தாது.

பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் கடித்து மரணமடைந்தவர்கள் விபத்து நிவாரண திட்டத்தின் கீழ் நிவாரணம் பெறுவதற்கு காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையும் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் தவறாது தாக்கல் செய்ய வேண்டும். (அரசாணை நிலை எண் 673 வருவாய்த்துறை நாள்:2.12.99)

பதிவு செய்யப்பட்ட கட்டிட தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாகும் போது, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல திட்டம் 1994ன் படி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திலிருந்து நிதி உதவிப்பெற வழிவகை இருப்பதனால் பதிவு செய்து கொண்டுள்ள கட்டிட தொழிலாளர்களுக்கு விபதது நிவாரண திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கிட தேவையில்லை. (அரசு கடித எண் 58845/ ஐ /99-13 தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை நாள்:20.6.2000

No comments:

Post a Comment