நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதே தமிழகம் முழுவதும் முதலில் கண்டித்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தியது வழக்கறிஞர் சமுதாயம்.
அதன் விளைவாக பல்வேறு வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து , அவைகளெல்லாம் இன்னும் நடைபெற்று வருகிறது. இது மக்களை வாட்டி வதைக்கும், மாமூல் வாங்க காவல்துறைக்கு வழிவகுக்கும் என்றும் போராடப்பட்டது.
ஓரளவுக்கு கண்டித்தும், ஹெல்மெட் அணிய ஆலோசனை விழிப்புணர்வு ஏற்படுத்துவதை முன்னெடுத்திருக்க வேண்டும்.
அதைவிடுத்து தனியார் வசூல் நிறுவனம் நடத்தும் முதலாளி போல ஒவ்வொரு சுற்று (ரோந்து) காவலருக்கும் நிர்ணயிக்கப்பட்ட தொகை மற்றும் வழக்கு எண்ணம் அளித்து சேவை துறையை நிறுவனம் போல நடத்தினால் லஞ்சமும், அதிகார மீறலும் ஏற்படுவதை தடுக்க முடியாது.
நேர்மையான அதிகாரிகளால் சில காலம் மட்டும் ஹெல்மெட் அணிந்து செல்லவதால் விபத்துகள் குறைந்ததும் ,
இந்திய அளவில் விபத்தில் உயிரிழப்பு முதலிடம் உள்ள தமிழகத்தை ஆறுதல் படுத்தியதும் புள்ளி விவரங்கள் கூறும் மறுக்க முடியாத உண்மை.
No comments:
Post a Comment