Sunday, April 8, 2018

000002. வழக்கறிஞர் இல்லாமல் சட்ட புத்தகத்தை கொண்டு வழக்கை நடத்தலாமா?

 கேள்வி:

வழக்கறிஞர் மற்றும் வழக்குரைஞர் வித்தியாசம் என்ன? வேலைகள் என்ன? தனி மனிதன் ஒருவனே சட்ட புத்தகத்தை கொண்டு வழக்கை நடத்தலாமா வழக்கறிஞர் இல்லாமல்? தமிழ் படங்களில் வரும்படி தான் நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறுமா? நீதிபதியின் உரை தமிழில் இருக்குமா இல்லை ஆங்கிலத்தில் இருக்குமா?

பதில் :

தனி மனிதர் வழக்கு நடத்தலாம், உங்களுக்கு நீதிமன்ற நடைமுறை, சட்டம் தெரிந்திருந்தால்.
 
தமிழ் படத்தில் வருவது போல இருக்காது. நேரில் ஒரு முறை போய் பாருங்கள். வழக்கறிஞர் நீதிபதிக்கு கேட்பது போல மட்டுமே பேசுவார். ஒவ்வொருவர் சத்தமாக பேசுவார்கள்.

நீதிபதி பேசாமல்தான் அமர்ந்திருப்பார். தேவைப்படும்போது தமிழில், சில நேரம் ஆங்கிலத்தில் பேசுவார்.
 
குற்றவியல் நீதிமன்றம், சிவில் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், இன்னும் பல நீதிமன்றங்கள் ஒவ்வொரு விதமாக இருக்கும். நேரில் நீங்கள் சென்று பார்க்கலாம், கிரிமினல் நீதிமன்றம் தவிர

கிரிமினல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அங்கி அல்லது சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவர்

 கேள்வி:

நீதிமன்ற நடைமுறை சட்டம் தெரிந்திருந்தால் ஒவொரு தனிமனிதனும் வாதாட முடியும் என்றால், எந்த தனிமனிதனாவது தன்னுடைய பிரச்சினைக்கு உண்டான வழக்கை தானே நடத்திய சரித்திரம் உண்டா? வழக்கறிஞர் படிப்புக்காக நேரத்தை வீனடிக்காமல், நீதிமன்ற நடைமுறை சட்டத்தை பொதுமக்கள் ...See More

பதில் :

நமது நாட்டு சட்டப்படி, வழ்க்கு தொடுப்பவர் ( Petitioner / Complainant) மற்றும் எதிர் தரப்பினர் ( Opposite Party ) -தான் வழக்கு நடவடிக்கையில் நேரடியாக ப்ங்கேற்க வேண்டும். அது சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமை. இதில் வழ்க்கு தொடுப்பவருக்கோ அல்லது எதிர் தரப்பினருக்கோ போதுமான சட்ட அறிவு இல்லாத நிலையில் வழ்க்கறிஞர் மூலமாக செய்ய வேண்டும்.

நீதிமன்றத்தில் வாதட கல்வித் தகுதி தேவை இல்லை. நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம். சட்டம் தெரிந்து இருக்க வேண்டியது அவசியமாகும். இப்போது சட்டப் புத்தகங்கள் தமிழிலேயே கிடைகிறது. திரு நடராசன் M.A. M.Com. B.L அவர்களின் புத்தககங்கள் எளிமையாக உள்ளது.

தேவையான புத்தகங்கள்.
1. இந்திய தண்டனைச் சட்டம்
2. குற்ற விசாரணை முறைச் சட்டம்
3. இந்திய சாட்சிய சட்டம்
4. இந்திய அரசியல் சாசனம்
5. தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005.
6. உரிமையியல் விசாரணை முறைச் சட்டம்.

அனைத்து சட்டங்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு எது பற்றிய சட்டம் தேவையோ ? அதை மட்டும் படியுங்கள்.

No comments:

Post a Comment