எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு
நீதிமன்ற வளாகத்தில் எக்ஸ்பார்ட்டி என்றவார்த்தை மிகவும் பிரபலமானது. சிலர் சூழ்நிலை காரணமாக தங்கள் பக்கம் நியாயம் இருந்தும் அதனை நீதிமன்றத்தில் சொல்ல முடியாமல், வலுவான ஆதாரங்கள் இருந்தும் அவற்றை நீதிமன்றத்தில் அளிக்க முடியாமல் பாதகமான தீர்ப்பை பெற்று விடுவார்கள். சில நேரங்களில் நேரமின்மை, திட்டமின்மை இல்லாமல், அவர்களுடைய வழக்குரைஞரே அதற்கு காரணமாகிவிடுவதும் உண்டு.
இது எந்தெந்த சூழ்நிலைகளில் நிகழ்கிறது?
நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுப்பவரை வாதி (Plaintiff) என்கிறோம். அவர் யார் மீது வழக்கு தொடுக்கிறாரோ அவரை பிரதிவாதி (Defendant) என்கிறோம்.
சிவில் வழக்குகளில் வாதியானவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவுடன், அங்கிருந்து பிரதிவாதிக்கு சம்மன் அமீனா மூலமாகவோ, தபால் துறை மூலமாகவோ அனுப்பப்படும்.
இது போன்று வரும் கடிதங்களையோ, சம்மன்களையோ அதற்கு உரியவர்கள் வாங்க மறுக்கக் கூடாது. Refused என்று எழுதி அனுப்பப்பட்டிருந்தாலும் அந்த கடிதத்திலுள்ள அல்லது அந்த சம்மனில் உள்ள விஷயங்களை நீங்கள் முழுமையாக அறிந்து கொண்டதாகத்தான் நீதிமன்றம் முடிவு செய்யும்.
அதனால், Refused என்று எழுதி அனுப்பப்பட்ட சம்மன்களினால்கூட அந்த வழக்குகளில் உங்களுக்கு எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு வரும்.
நல்ல வழக்கறிஞரிடம் வழக்கை நீங்கள் ஒப்படைத்து இருந்தாலும், குறிப்பிட்ட நாளில், உரிய நேரத்தில் அவர் நீதிமன்றத்தில் ஏதோ ஒருகாரணத்தால் ஆஜராகவில்லை என்றால், அந்தவழக்குகளில் உங்களுக்கு எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு வரும்.
ஒருவர் ஆஜராகாத அன்றே எந்த நீதிமன்றமும் தீர்ப்பு வழங்குவதில்லை. சில மாதங்கள் கழித்துதான் தனது தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும். ஆஜராகாதவர்கள் அதற்குள் இதற்கு பரிகாரம் தேடிக்கொள்லலாம்.
ஆஜராகாத சூழ்நிலையில் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
எந்த நாளில் ஆஜராகவில்லையோ, அந்த நாளில் இருந்து முப்பது நாட்களுக்குள், ஆஜராக முடியாத உண்மையான நிலை குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். அது பற்றி வாதியிடம் கருத்து கருத்து கேட்ட பின்னர் நீதிமன்றம் முடிவு செய்யும்.
அந்த முப்பது நாட்களுக்குள் தங்கள் சூழ்நிலையை நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியாத நிலையிலும் சிலர் இருப்பார்கள். அவர்கள் condone delay application என்றவிண்ணப்பத்தை கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்.
தங்கள் கோரிக்கை உண்மையாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும். அதற்கு சில வகைகளில் செலவுத்தொகையினை செலுத்த கோர்ட் உத்தரவிடும்
No comments:
Post a Comment