சுதந்திர உரிமை (சரத்து 19 - 22)
சுதந்திர உரிமை - இது 6 வகையான சுதந்திரங்களை அளிக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டபிரிவு 19-ல் சுதந்திர உரிமைக்கு உத்திரவாதம் அதன் குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது அதன்படி...
1. பேச்சு மற்றும் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம் (சரத்து -19 (1) (ய) இந்த சுதந்திரம் இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பொது அமைதியின் நலனுக்குட்பட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தில் பத்திரிக்கைச் சுதந்திரமும் அடங்கும். பேசாமல் அமைதியாக இருக்கும் உரிமையும் அடங்கும்.
2. ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் (சரத்து -19 (1) (b) இது அரசின் பாதுகாப்பு , அண்டை நாட்டுடன் நட்புறவு பொது அமைதி ஒழுக்கம்,நீதிமன்ற அவமதிப்பு அவதூறு குற்றம் செய்யதூண்டுதல், இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை போன்ற நலன்களுக்காக கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
3. கழகங்கள் /சங்கங்கள் அமைக்க சுதந்திரம் ( சரத்து -19 (1 ) (உ) இது பொது அமைதி அல்லது அறநெறியின் நலனுக்குட்பட்டும் ,இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமையின் நலனுக்குட்பட்டும் கட்டுப்பாடு விதிக்கலாம்.
4. இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம் (சரத்து -19 (1) (ன) இது பொதுமக்களின் நலன் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
5. இந்தியாவின் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம் (சரத்து -19 (1) (ந) இது பொதுமக்களின் நலன் மற்றும் 6. பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். தொழில், பணி மற்றும் வணிகங்கள் செய்யும் சுதந்திரம் ( சரத்த -19 (1) (ப) இதன் மீது நியாயமான தடையாகவும், பொதுமக்களின் நலனிற்குட்பட்டதாகவும் இருக்க வேண்டும். இந்த 6 வகையான சுதந்திரங்கள் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமைகள்(சரத்து -20). இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 20 -ன் படி ஒருவரைத் தகுந்த காரணமின்றி கைது செய்வதற்கு தடை விதிக்கிறது. · குற்றஞ்சாட்டப்பட்ட செயல் ,செய்யப்பட்ட காலத்தில் அமலில் இருக்கும் சட்டத்தால் மட்டுமே தண்டிக்கப்பட கூடாது. குற்றம் சாட்டப்பட்ட நபர் தனக்கே எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்தக் கூடாது. யாரையும் சுயவிருப்பமின்றி சாட்சியாக்க கட்டாயப்படுத்தக் கூடாது.
வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான பாதுகாப்பு (சரத்து -21)
தனி மனித வாழ்வு மற்றும் தனி மனித சுதந்திரத்தை உறுதி செய்கிறது. தனது சுதந்திரத்தினை, மற்றவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் அனுபவிக்க வேண்டும். · ஒரு நபரின் வாழ்க்கையும்,தனிநபர் சுதந்திரத்தையும் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளை தவிர வேறு வழிகளில் மீறக் கூடாது. · ஹ.மு. கோபாலன் - எதிர் - சென்னை (1950) என்ற வழக்கில் சரத்து 21 ல் கூறப்பட்டுள்ள சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் இயற்கை நீதிக் கோட்பாடுகளை உள்ளடக்காது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது. மேனகா காந்தி - எதிர் - இந்திய அரசு (1978) என்ற வழக்கில் தனிப்பட்ட சுதந்திரம் என்கிற பதத்திற்கு பரந்த பொருள் விளக்கத்தையும், சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளுள் இயற்கை நிதிக் கோட்பாடுகளும் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. · வாழும் உரிமை, தனிமனித உரிமை மற்றும் பல அடங்கும். வாழ்வுரிமை என்பது மாண்புடனும் மரியாதையுடனும் வாழ்வது. பிழைப்புத் தொழில், சுகாதார மற்றும் மாசற்ற சூழலில் வாழும் உரிமையும் அடங்கும். தனித்திருப்பு உரிமை என்பதும் தனிப்பட்ட சுதந்திரத்தில் அடங்கும். வாழும் உரிமை சாவதற்கான உரிமையை உள்ளடக்காது.
கல்வி உரிமை (சரத்து 21 -அ)
· 2002 - 86 வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது. 2009 இல் இலவச கட்டாயக் கல்வி ஆறு வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு அளிக்க சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
கைது செய்தல் (ம) சிறை வைத்தலுக்கு எதிரான பாதுகாப்பு (சரத்து 22)
· இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 22 -ன் படி எவரையும் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது. · மேலும் மக்களை விசாரணையின்றி கைது செய்யப்படும் போது, பாதுகாப்பு அளிப்பதோடல்லமால் கைது செய்வதற்கான காரணத்தைக் தெரிவிக்கும்படி கேட்கவும் உரிமையை அளிக்கிறது. · சட்ட வல்லுநர்களை கலந்தாலோசிக்கவும், கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் கிரிமினல் வழக்குகளில் நீதிபதி முன் ஆஜர் படுத்தவும் பாதுகாப்பு அளிக்கிறது. · ஒருவரை கைது செய்யும் போது கைதுக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும், மேலும் வழக்கரைஞரை அமர்த்துவதற்கும் உரிமை உண்டு. · தடுப்புக் காவல் சட்டத்தின் படி சிறைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு சரத்து 14 ,19, 21 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள உரிமைகளை மீறக் கூடாது. · தடுப்புக் காவலில் 3 மாதங்களுக்கு சிறைப்படுத்தும் வகையில் இருந்ததை 1978 ம் ஆண்டின் 44 வது சட்டத் திருத்தத்திற்கு பிறகு 2 மாதங்களாக குறைக்கப்பட்டது
No comments:
Post a Comment