நமது நாட்டில் தண்டணைக்குரிய தப்பை செய்துவிட்டு ”பணம் படைத்தவர்களும், அரசியல்வாதிகளும், ரௌடிகளும்” தைரியமாக, உலாவிக் கொண்டு இருப்பதற்குக் காரணமான சட்டப் பிரிவு என்று ஒன்று உண்டென்றால் அது இந்திய தண்டணைச் சட்டம் 192 வது பிரிவு தான்.
தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் முயற்சி செய்து முனையும் போது அவர்களை காவல் துறையினர் தடம் மாற, தடுமாற வைப்பது இந்தப் பிரிவின் மூலமாகத்தான். இந்தப் பிரிவை நாம் தெரிந்து கொண்டு பயன்படுத்தாமல், சட்ட விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதுதான், நாட்டில் குற்றங்கள் பெருக வழி வகுக்கிறது. பொதுவாக காவல் நிலையத்தில் நாம், கடும் தண்டணைக்குரிய ஒரு குற்றம் சம்பந்தமாக ஆதாரங்களுடன் புகார் அளித்தால், முதலில் அதனை வாங்கவே மாட்டார்கள். அப்படியே வாங்கினாலும் அதற்குரிய ஒப்புதல் ரசீது (CSR) தரமாட்டார்கள். ரசீது தந்தாலும் விசாரணை செய்ய மாட்டார்கள். ஒருவேளை விசாரணை நடத்தினாலும், முதல் தகவல் அறிக்கை (F.I.R) பதிவு செய்ய மாட்டார்கள். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை (Police Report) தாக்கல் செய்ய மாட்டார்கள். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தாலும், எத்தனை ஆதாரங்களை நாம் அளித்திருந்தாலும் எதிரி குற்றமே செய்யாதது போல் பொய் சாட்சியங்களை புனைந்து அந்த வழக்கை முடித்து வைத்து விடுவார்கள்.
இதனைக் கடந்து போவதற்கு சட்டம் நமக்கு வழி வகுத்திருந்தாலும், இந்தப்பிரிவானது காவல்துறையினர் மூலம் நமக்கு தடங்கலை ஏற்படுத்தி விடுகிறது. பலர் துவங்கி விடுகிறார்கள். அதற்கு அடுத்துச் செல்ல தயங்குகிறார்கள். இதனைக் கடந்து சென்று எதிரிக்கு தண்டணை வாங்கித் தருகின்ற போராளிகளும் கூட, பொய்சாட்சியம் புனைந்த காவல் துறையினர்க்கு தண்டணை வாங்கித்தர வாய்ப்புகள் இருந்தும், ஏனோ அதுபோன்ற நடவடிக்கை எதுவும் எடுக்காமல், எதிரிக்கு தண்டணை வாங்கித்தந்த திருப்தியில் பேசாமல் இருந்து விடுகிறார்கள்.
பொய் சாட்சியம் புனைந்த காவல் துறையினருக்கு சட்டப்போராளிகள் இந்தப் பிரிவின் மூலம் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு கடுமையான தண்டணை பெற்றுத் தரலாம். அவ்வாறு சிலர் செய்தாலே போதும். பொய்சாட்சியம் புனைவதற்கு காவல் துறையினர் பயப்படுவார்கள். நமது நாட்டில் குற்றங்கள் குறையும். நீதி தழைக்கும்.
அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பிரிவில்? வாருங்கள் பார்க்கலாம்!
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-192
புத்தகம் அல்லது பதிவேடு (Document) அல்லது மின்னணுப் பதிவுறு (Online Certificates) ஆகியவற்றில் சூழ்நிலை அல்லது பொய்யான பதிவு எதையேனும் அல்லது பொய்யுரையைக் கொண்ட பத்திரங்கள் எதையேனும் ஒரு நீதிமன்ற நடவடிக்கையில் ஒரு பொது ஊழியர் என்ற முறையில் ஒரு சாட்சியத்தின்படி தீர்ப்பு வழங்க வேண்டியிருக்கும் போது, அந்த சாட்சியத்தில் தவறான எண்ணம் கொள்ளுமாறு உட்கருத்துடன் பொய்யான கருத்துக்களை புனைந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்ற எவர் ஒருவரும் பொய் சாட்சியம் புனைபவர் ஆவார்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-193
ஒரு நீதிமன்ற நடவடிக்கைகளின் எந்தக் கட்டத்திலும், உட்கருத்தோடு பொய் சாட்சியம் தருகின்ற அல்லது ஒரு நீதிமன்ற நடவடிக்கைகளின் எந்தக் கட்டத்திலும் பொய் சாட்சியம் புனைகின்றவர் யாராக இருந்தாலும், அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கப்படுவார்கள். மேலும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.
No comments:
Post a Comment