தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் - பிரிவு:26
பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு ஒரு முறையாவது பொதுக்குழுக் கூட்டத்தை கூட்ட வேண்டும். கூட்டத்தைக் கூட்டுவதற்கு முன்னர் 21 நாட்களுக்கு முன்னதாக அந்த பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்படுவது குறித்து பதிவு செய்யப்பட்ட சங்கமானது தனது உறுப்பினர்களுக்கு அறிவிப்பு கொடுத்தல் வேண்டும். அந்த அறிவிப்பில் கூட்டம் நடக்கும் நாள், நேரம், இடம் ஆகியவற்றையும், கூட்டத்தின் குறிக்கோளையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மேலும் பைலாவில் அடங்கியுள்ள துணை விதிகளுக்கு அல்லது குறிக்கோளுக்கு திருத்தம் ஏதாவது கொண்டுவர மேற்படி சங்க நிர்வாகிகள் நினைத்தால், அத்தகைய திருத்தத்தின் நகல் ஒன்றையும் இணைத்து தெரிவிக்க வேண்டும். மாவட்டப் பதிவாளர் அந்த பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னிலையாக தமக்கு கீழுள்ள ஒரு அலுவலரை நியமிக்கலாம்.
தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் - விதி எண்:25
பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் பிரிவு:26ன் கீழ் கூட்டப்படுகின்ற பொதுக்குழுக் கூட்ட அறிவிப்பை அநதக் கூட்டம் நடைபெற உள்ள நாளுக்கு குறைந்தது 21 நாட்களுக்கு முன்னர் உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டும். கீழ்காணும் முறைகளில் ஒன்றால் அல்லது பலவற்றால் உறுப்பினர்களுக்கு அந்த அறிவிப்பை அனுப்ப வேண்டும்.
உள்ளூர் தபால் சேர்ப்பிப்பு வழியாக; அல்லது தபால் மூலமாக; அல்லது உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை வழியாக; அல்லது அரசு இதழ் விளம்பரம் வழியாக
No comments:
Post a Comment