Thursday, May 31, 2018

000063. Differences between Summon and Subpoena

01. Summon means the intimation which is sent at the start of a case to the defendant by the court. It is a document issued by the court  calling upon the person to whom it is directed to attend before a judge in a case.
On the otherhand, A subpoena  is a request for the production of documents, or a request to appear in court or other legal proceeding. It is court-ordered command that essentially requires on any person to do something, such as testify or present information that may help support the facts that are at issue in a pending case.

02. Summon is issued only against the defedant and witnesses related to the case.
Subpoena may  issued to any person as the court thinks fit to acquire evidence.

03. There are no classification of summon. On the otherhand, there are two types of subpoenas- subpoena ad testificandum and subpoena duces tecum

04.   Issue of summon is an essential stage of a civil suit.  Subpoena is need for finding of necessary information and evidences relating to a case.

05.  A summon is a legal document that requires someone to appear in court to respond to a charge or other violation. On the otherhand, a subpoena is a legal document that requires someone to testify or otherwise provide evidence for a case.

06.  Summons is always issued to appear someone personally before a judge. But beside person subpoenas can be used for the gathering of evidence also. For e.g. subpoenas may include requests for bringing Blood test information ,DNA samples etc. before the court.

Monday, May 28, 2018

000062. Differences between Hurt and Grievous Hurt

01.  Section 319 defines Hurt. Section 320 explains the eight categories of grievous hurt.
02.  Hurt does not endanger to life. It is not serious. Grievous Hurt may cause endanger to life.
03.  Hurt includes bodily pain, disease and infirmity. It may also include mental shock. On the other hand, emasculation, permanent privation of sight of either eye, or hearing of either ear, etc. are Grievous hurts. Grievous hurt is serious in its nature.
04.  Hurt is punishable, when it is accompanied with other offences, such as voluntarily causing hurt, etc.
Grievous hurt itself is punishable offence and  increases of punishment depending upon the nature of the Grievous Hurt.

Case References:

Injuries caused with burning fire wood do not endanger life, and therefore, do not fall within the injuries specified in Sec. 320.
(AIR 1979 SC 246)

 Where the knife injury though was on the vital part of the body, but the depth of the injury was not given. X-ray reports also did not show any bone cut. The injury was held simple hurt.                        (8 DLR 165) 

The accused stabbed with a sharp-edged weapon on abdomen of victim. The doctor said that the injury touched interior surface of the stomach, but did not touch any important organ or structure. He also stated that it could not endanger life. The injury was treated as a hurt.
( 42 DLR 207)

A disability for 20 days constitutes grievous hurt, if it is continued for a similar period,then the offence is hurt. 
[Bishnooram Sharma,(1864) 1 WR(Cr) 29]


The accused fired on the neck of the victim. It resulted in bleeding for three hours. It is a grievous hurt. The accused is punishable u/s 326.
(AIR 1987 SC 435)


The accused trusted a lathi into anus of the victim. The Court treated it as a grievous hurt.
 (AIR 1970  Cal 782) 

Saturday, May 26, 2018

000061. காவல் துனறயினரின் முக்கிய சுற்றறிக்கைகள்(2016)

1.  காவல்துறையினர் எப்போதெல்லாம் ஒரு வழக்கின் புலன் விசாரணையை மறுக்கலாம் என்பது குறித்து, அரசாணை எண். 332, நீதித்துறை 28, பிப்ரவரி, 1906 மற்றும் அரசாணை எண். 485 நீதித்துறை 14,மார்ச் 1911 என்ற அரசாணைகளை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாடு காவல்நிலை ஆணை எண். 562 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157(1)(b) யிலும் இதுகுறித்து கூறப்பட்டுள்ளது.

2.  கடித எண். வி1 - 24021/97/84/ஜிபிஏஎல், நாள் - 4.7.1978 மற்றும் 10.7.1985 ன்படி இந்திய அரசு, உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில், கண்டிப்பாக காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3.  காவல்நிலைய பொறுப்பு அலுவலர்கள் FIR நகலை புகார்தாரருக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க மறுப்பது மிகக் கடுமையான குற்றமாகும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் சி. எண். /165918/குற்றம் /(2)(1)/94, நாள் - 27.7.1994 ன்படி ஆணை பிறப்பித்துள்ளார்.

4.  காவல் நிலைய ஆய்வாளர் புகாரை பெற்றுக் கொண்டவுடன் அது பிடியாணை வேண்டா குற்றமாக இருந்தால் உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும். பிடியாணை வேண்டும் குற்றமாக இருந்தால் அந்த குற்றத்தை விசாரணை செய்ய, குற்றவியல் நடுவரின் அறிவுறுத்தலை பெற வேண்டும். சாதாரண மனுக்களை பெறும்போது, அவை உடனடியாக மனுக்கள் பதிவேட்டில் (CSR) பதிவு செய்யப்பட்டு, புகார்தாரருக்கு உடனடியாக CSR நகல் கொடுக்க வேண்டும். இவைகளை கடைபிடிக்காதது சட்ட விரோதமானதாக கருதப்பட்டு கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் RC. NO /62868/குற்றம் /1(2)/2001,நாள் - 31.3.2001 ன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் இது தொடர்பாக அரசாணை எண். 865, உள் (காவல் - 1) துறை, நாள் - 9.6.1997.என்ற அரசாணை உள்ளது. மேலும்  தலைமை அலுவலக நிலை ஆணை 133622/குற்றம் - 1(1)/97, நாள் - 17.6.1997 ம் உள்ளது.

5.  காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை உள்நோக்கத்துடன் பதிவு செய்யாமல் இருப்பதை கண்காணிக்கவும், தடுத்திடவும் என்ன விதிமுறைகளை காவல்துறையினர் பின்பற்ற வேண்டும் என்று RC. NO - 274292/குற்றம் - 1(1)/2004, நாள் - 3.2.2005 என்ற சுற்றறிக்கையின் கீழ் விதிமுறைகளை வகுத்துள்ளார்.

6.  வரதட்சணை மரணம் வழக்கில், கோட்டாட்சியர் பிரேத பரிசோதனை நடத்திய 15 நாட்களுக்குள் புலன் விசாரணை அதிகாரிக்கு அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை அனுப்பிட வேண்டும் என தமிழ்நாடு அரசு, உள்துறை, அரசு செயலாளர் கடிதம் (பல்வகை) எண். 1059,நாள் - 23.5.1990 ன் கீழ் ஆணை பிறப்பித்துள்ளார்.

7.  குடும்பத் தகராறு சம்பந்தப்பட்ட புகார்களிலும், சாதாரண பிரச்சினை சம்பந்தப்பட்ட புகார்களிலும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் வீட்டுக்கு நேரிடையாக சென்று அவர்கள் பிரச்சினையை விசாரித்து ஆலோசனை வழங்க வேண்டும். தேவையில்லாமல் இதுமாதிரியான பிரச்சினைகளில் கணவரை கைது செய்யக்கூடாது என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 134085/குற்றம் - 1(3)/2003 என்ற கடிதத்தின் வாயிலாக அனைத்து காவல் நிலையத்திற்கும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

8.  கைது செய்யப்பட்ட பெண்களிடம் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 15857/குற்றம் 1(1)/2004,நாள் - 21.7.2004 ம் தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக அறிவுரைகளை வழங்கியுள்ளார்

Friday, May 25, 2018

000060. வாரிசு சான்றிதழ் - கேள்விகள்-பதில்கள் - என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் இறந்த பின்பு அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்

வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?

ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும். இந்தச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திருமணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.

வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது?

நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத்தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெறவும் எனப் பலவிதங்களில் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசுப் பணிகளில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணிப் பலன்கள் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.

எங்கே விண்ணப்பிப்பது?

வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் மற்றும் ஜெராக்ஸ் கடைகளில்  கிடைக்கிறது.

வாரிசுச் சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் இருப்பிடச் சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படும்.


என்னென்ன ஆவணங்கள் தேவை?

இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் நகல்
வாரிசுகளின் இருப்பிடச் சான்றிதழ் நகல்


எவ்வளவு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்?

ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் இறப்பைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை உடனடியாக இறப்பைப் பதிவு செய்ய முடியாத நிலையில் அதற்கான காரணத்தைத் தெரிவித்து ஒருவருடத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

ஒருவர் இறந்து எத்தனை ஆண்டுகள் கழித்தும் வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம்.

ஆனால், அதற்கு அருகிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்திற்குச் சென்று விண்ணப்பித்து, வழக்கறிஞர் மூலமாக பிரபல தமிழ் நாளிதழில் வாரிசு சான்றிதழ் கோரியுள்ள விளம்பரத்தை வெளியிட்டு, 15 நாட்களுக்குள் ஆட்சேபணை யாரும் தெரிவிக்காத பட்சத்தில் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் அதனை வட்டாட்சியர் அவர்களிடம் சமர்ப்பித்து சான்றிதழ் பெறமுடியும்.


சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால்?

ஒருவேளை பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால் அவரின் இறப்புப் பதிவு செய்யப்பட்டிருக்காது. அப்படி இருக்கும்பட்சத்தில் அவரின் இறப்புப் பதிவு செய்யப்படவில்லை என்ற சான்றிதழைப் பதிவுத்துறையில் பெற்று நீதிமன்றத்தில் கொடுத்தால் நீதிமன்றம் இறப்புச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிடும்.


விண்ணப்பித்து எத்தனை நாட்களில் கொடுக்கப்படும்?

விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் தாமதமாவதற்கான அல்லது மறுப்பதற்கான காரணத்தை வட்டாட்சியர் அவர்கள் கூற வேண்டும்.


எப்போது மறுக்கப்படும்?

இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடையே பிரச்சினைகள் இருப்பது, தத்து எடுக்கப்பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவது, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம். நீதிமன்றத்தை அணுகி, யாருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம்.


இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate)

இறந்த நபரின் பெயரிலுள்ள முதலீடு /பங்குகள் மற்றும் அவருக்கு வரவேண்டிய கடன் போன்ற பணப் பலன்கள் பெற தனக்கு சட்டபூர்வமான உரிமை இருக்கிறது என்பதைக் காண்பிக்க ஒருவர் நீதிமன்றம் மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ்.

எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம். ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் இருக்கும். இந்த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குகள்/முதலீடுகள் முதலியவற்றில் உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட்டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்களா என்கிற பயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரலாம். இதற்காக இந்த ஐந்து பேரும் நீதி மன்றத்தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்களில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு/பங்குகள் உள்ளது என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தினால் நீதிமன்றம் அவர்களுக்கு இறங்குரிமை சான்றிதழ் வழங்கும்.

மாற்று வழி

இறங்குரிமை சான்றிதழ் பெறுவதற்கு 20 ரூபாய் பத்திரத்தாளில் ஒன்றில் இறந்தவருடைய வாரிசுகள் அனைவரும் தங்களுக்குள் ஒருவரை ஒரு மனதாக தேர்ந்தெடுத்து, அவரிடம் பண பலன்களை அல்லது வாரிசுக்கான வேலையை கொடுப்பதற்கு தங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று உறுதி செய்து கையொப்பம் இட்டு சம்பந்தப்பட்ட வட்டாட்சி அலுவலர் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பரிசீலணை செய்து அவர் சான்றிதழ் வழங்குவார்.


ஒருவர் காணாமல் போயிருந்தால்..?

வாரிசுதாரர்களில் ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர, அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து புகார் அளித்து, காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக, ‘அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்’ என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் பெற முடியும்.


எப்போதெல்லாம் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்?

குறிப்பிட்ட நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்து அவர்களுக்குள் வாரிசு குழப்பங்கள் ஏற்பட்டால் வட்டாட்சியர் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அதுபோல காலம் கடந்து வாரிசு சான்றிதழ் கேட்கிறபோதும், சொத்துக்கான உரிமையாளர் இறந்த தேதி தெரியாமல் இருந்தாலும் வட்டாட்சியர் வாரிசு சான்று விண்ணப்பித்தை நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 

இதுபோன்ற நிலைமைகளில் நீதிமன்ற உத்தரவு பெற்று வருபவருக்கு வாரிசு சான்றிதழை வட்டாட்சியர் வழங்குவார்.

குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளருக்கு பல வாரிசுகள் இருந்து அவர்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் போது ஒரே உத்தரவின் மூலமும் நீதிமன்றம் வாரிசுகளை அறிவிக்கச் செய்யும்.

குறிப்பாக முன்னுரிமை அடிப்படையில் குடும்பத்தின் மூத்த நபர் வாரிசாக அறிவிக்கப்படுவார். 

போலியான ஆவணங்கள் மூலம் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டிருப்பின் அந்த சொத்துக்களின் உண்மையான வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றதை அணுகி அந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யவும் முடியும்

000059. கருச்சிதைவு ஏற்படுத்துதல் (பிரிவு 312)

எந்த நபராவது தன்னிச்சையாக அந்த பெண்னைக் காக்கும் நல்லெண்ணமில்லாது கருச்சிதைவு செய்யத் தூண்டினால் அந்த நபருக்கு 3 வருடம் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

அப்பெண்ணின் 4வது அல்லது 5வது மாதத்தில் கருச்சிதைவு செய்தால் 7 வருடம் சிறை மற்றும் அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்.

ஒரு பெண் தானாக கருச்சிதைவு செய்து கொண்டாலும் இப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டலாம்.

மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின்படி, கருவை வளர அனுமதித்தால் அது அப்பெண்ணின் உயிருக்கு ஆபத்தோ அல்லது அத்தாயின் உடல் மற்றும் மன நிலைக்கு ஊறு விளையும் என்றாலோ அல்லது கருவில் உள்ள குழந்தை பிறந்தால் அதற்கு ஊறு விளையும் என்றாலோ, பதிவு செய்யப்பட்ட மருத்துவரால் அக்கருவை கலைத்து விடலாம் எனக் கூறப்பட்டுள்ளது...

கருச்சிதைவு செய்யும் நபர் மருத்துவராக இல்லாவிட்டால் அந்நபர் தண்டிக்கப்படுவார்.

000058. குற்றவியல் திருத்த சட்டம் 2013

 உலக நாடுகளின் முன் இந்தியாவை வெட்கி தலை குனிய வைத்த அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் நடந்தேறிய நாள் 2012 டிசம்பர் 16.  இந்தியத் தலைநகரான புதுடெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் தன் ஆண் நண்பருடன் இரவு வேளையில் திரைப்படம் பார்த்துவிட்டு வருகின்ற போது கயவர்கள் சிலரால் வஞ்சகமாக ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டு... அதன் பிறகு இருவருக்கும் நடந்த விஷயங்கள் உலகம் அறிந்த ஒரு செய்தி.  பெண்ணை  போற்றுகிறோம் என்று பறைசாற்றும் இந்த தேசத்தில் பெண்ணினத்துக்கு ஏற்பட்ட மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சி, அதனால் ஏற்பட்ட உயிர்பலி - ‘நிர்பயா’ என்று ஊடகங்களால் பெயரிடப்பட்ட அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட சம்பவம் - குற்றவியல் சட்டங்களின் திருத்தத்துக்கு வழிவகை செய்தது.  


நிர்பயா வழக்குக்கு முன்னரும் பின்னரும் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கும் அமில வீச்சுக்கும் பலியாகி தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். இதோடு, உடலளவிலும் மனதளவிலும் காயப்பட்டவர்கள் பலர் உண்டு. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பாலியல் வன்முறைகளும் தொடர் சம்பவமாகிவிட்ட நிலையில் நீதியரசர் வர்மா கமிஷனின் பரிந்துரையின் பேரில் திருத்தம் செய்யப்பட்டு, 2013 பிப்ரவரி 3 முதல் அமலுக்கு வந்திருக்கும் குற்றவியல் சட்டத்திலிருக்கும் சில முக்கிய திருத்தங்கள் என்னவெனப் பார்ப்போம்.

அமில வீச்சும் அதற்கான தண்டனையும்

அமில வீச்சினால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு இந்த சட்ட திருத்தம் வரும்வரை ஒரு குற்றமாக இந்திய தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.  புதிய திருத்தம் பிரிவு 326A யின் படி எவர் ஒருவர் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ அமில வீச்சினாலோ, அமிலத்தை புகட்டியதினாலோ, உடலுக்கோ அல்லது உடலின் ஒரு சில பாகங்களுக்கோ ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் எண்ணத்தில் இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தால் அவர்களுக்குத் தண்டனையாக 10 ஆண்டுகள் முதல் வாழ்நாள் சிறையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும். அந்த அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவச் செலவுக்காகவும் அவரின் நலனுக்காகவும்  நஷ்டஈடாக  கொடுக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.  

புதிய திருத்தம் 326B யின் படிஎவர் ஒருவர் மற்றொருவரின் உடலுக்கு நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ பாதிப்பு ஏற்படுத்தும் எண்ணத்தில் அவர் மீது அமிலத்தை வீசவோ, அமிலத்தை புகட்டவோ முயற்சி செய்யும் பட்சத்தில் அவருக்கு 5 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.  அமிலம் என்பது ஒருவரின் உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதோ, உடல் பாகத்தை அரித்தெடுப்பதோ, மாறாத வடுவை ஏற்படுத்தும் ஒரு திரவமே ஆகும். மத்திய, மாநில அரசாங்கங்கள் இந்த கொடிய அமிலத்தை எளிதாக விற்பனை செய்வதைத் தடை செய்யும் முயற்சியை வெறும் பெயரளவுக்கு இல்லாமல் செவ்வனே செய்ய வேண்டிய நேரம் இது.  

இந்திய தண்டனைச் சட்டம் 354வது பிரிவின்படி யார் ஒருவர் ஒரு பெண்ணின் பெண்மையை நிலைகுலைக்கும் எண்ணத்துடனோ, அவமானப்படுத்தும் தவறான எண்ணத்துடனோ, தங்களுடைய பலம் கொண்டு செயலாற்றுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்தப் பிரிவுடன் புதிய பிரிவுகளாக சேர்க்கப்பட்டுள்ளவை 

354A  பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் அதற்கான தண்டனை

(i)     உடல் ரீதியான தொடுதல், உரசுதல் அல்லது தவறான எண்ணத்துடன் பாலியல் ரீதியாக ஒரு பெண்ணின்  உடலைக் கையாளுதல்.
(ii)     தவறான எண்ணத்துடன் உடல் 
இச்சையை பூர்த்தி செய்ய அழைப்பது அல்லது கட்டாயப்படுத்துவது.
(iii)    பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக 
ஆபாசமான பாலியல்களை காட்சிக்கு வைத்தல்.
(iv)    ஆபாசமான கொச்சை வார்த்தைகளால் பெண்ணை கேலி செய்வது.

இவற்றை பாலியல் வன்முறையாக இந்தப் பிரிவு குறிப்பிடுகிறது.  முதல் மூன்று உட்பிரிவுகளுக்கு 3 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.  நான்காவது உட்பிரிவுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும். 

354B - ஒரு பெண்ணின் மீது தவறான எண்ணத்துடன் பலம் கொண்டு அவருடைய உடையை களைந்து கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்குவது குற்றமாகக் கருதப்படுகிறது. அதற்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும்  (வட இந்தியாவில் பெரும்பாலும் இவ்வாறான குற்றங்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்கள் மீது அவர்களை அவமானப்படுத்தவும், அவர்களை தன் சொற்படி நடக்கச் செய்யவும் நடத்தப்படுகிறது). 

354C  ஒரு ஆண், ஒரு பெண் அந்தரங்கமாக இருக்கும்போது தவறான எண்ணத்துடன் அவரைப் பார்ப்பது, அந்த அந்தரங்க நிலையை படம் பிடிப்பது ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாக சட்டம் வரையறைத்துள்ளது  (ஒரு பெண் உடை மாற்றும் போதோ, கழிப்பறை, குளியலறையை பயன்படுத்தும்போதா நிர்வாணமாகவோ, வெறும் உள்ளாடைகளுடன் இருக்கும் போது பார்ப்பதோ, படமெடுப்பதோ) முதன்முறையாக செய்யப்படும் இந்தக் குற்றத்துக்கு ஒன்றிலிருந்து 3 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும், தொடர்ந்து இதே குற்றத்தை செய்யும் பட்சத்தில் 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

354D - ஒரு ஆண், ஒரு பெண்ணை தொடர்புகொள்ள முயற்சித்து அவரை பின்தொடர்தல், இவரின் இந்த செய்கையை அந்தப் பெண் எதிர்த்தும் தொடர்வது, மேலும் மின்னஞ்சல் போன்ற விஞ்ஞான சாதனத்தின் மூலம் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ய முயற்சி செய்தல் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுகின்றன.  முதன்முறையாக செய்யப்படும் இந்தக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும், தொடர்ந்து இதே குற்றத்தை செய்யும் பட்சத்தில் 5 ஆண்டுகள் அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். இதற்கு விதிவிலக்காக எந்த ஒரு குற்றச்செயலை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் அல்லது சட்டத்தின் உதவியுடன் ஒருவர் ஒரு பெண்ணை பின்தொடர்வது குற்றமாக கருதப்படமாட்டாது.  

370 இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வியாபார நோக்கில் ஆட்கடத்தல் செய்வது குற்றமாகக் கருதப்படுகிறது. அதனை இந்த புதிய சட்ட திருத்தத்தின் மூலம் சற்று விரிவுபடுத்தியுள்ளார்கள்.  எவர் ஒருவர் மற்றொரு நபரையோ அல்லது நபர்களையோ தவறாக பயன்படுத்துவதற்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ப்பது, யார் கண்ணிலும் தெரியாமல் மறைத்து வைப்பது, தவறான நோக்கில் வேறொருவரிடமிருந்து தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, இவற்றை மிரட்டல் மூலமாகவோ, கட்டாயத்தின் மூலமாகவோ, ஆட்கடத்தலின் மூலமாகவோ, தன்னுடைய அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து தன்வசப்படுத்துவதோ, வியாபார நோக்கில் செய்யப்படும் ஆட்கடத்தல் குற்றமாக கருதப்படுகிறது. பெரும்பாலும் இந்த ஆட்கடத்தல் குற்றம் பாலியல் தொழிலுக்காகவோ, கடுமையான வேலை செய்ய கொத்தடிமைகளாக பயன்படுத்துவதற்காகவோ, உடல் உறுப்புகளை திருடுவதற்காகவோ நடைபெறுகிறது.  கடத்தப்படும் நபர் தன்னுடைய ஒப்புதலை கொடுத்தாரா என்பதை சட்டம் பார்க்காது.  

யாரொருவர் வியாபாரத்துக்காக ஆட்கடத்தல் குற்றம் செய்கிறாரோ, அவருக்கு 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். யாரொருவர், ஒருவருக்கு மேற்பட்ட நபர்களை வியாபார ரீதியான நோக்கத்தில் ஆட்கடத்தல் செய்யும் பட்சத்தில் அந்தக் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். யாரொருவர் வயது வராத சிறுவனையோ, சிறுமியையோ வியாபார ரீதியாக ஆட்கடத்தல் குற்றம் செய்ததற்கு 10 ஆண்டுகள் வரையிலான 
அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.  யாரொருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்களை வியாபார ரீதியாக ஆட்கடத்தல் குற்றம் செய்யும் பட்சத்தில் அவருக்கு 14 ஆண்டுகள் அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

யாரொருவர் ஒரு சிறுவனை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வியாபார ரீதியாக ஆட்கடத்தல் செய்கிறாரோ அவருக்கு அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஒரு காவல் துறை அதிகாரியோ, பொது அலுவலரோ வியாபார ரீதியாக ஆட்கடத்தலில் ஈடுபடும்போது அவருக்கு தன் வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிப்பதற்கான தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

பிரிவு 370A - யாரொருவர் பாலியல் ரீதியாக பயன்படுத்துவதற்காக சிறார்கள் மீது ஆட்கடத்தல் குற்றம் செய்கிறாரோ அவர்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். யாரொருவர் ஆட்கடத்தல் மூலம் தாங்கள் வசப்படுத்திய ஒரு நபரை பாலியல் ரீதியாக பயன்படுத்தினால் அதற்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.

பாலியல் வன்புணர்ச்சி

பிரிவு 375 -ஒரு ஆண் மகன் தவறான நோக்கில் ஒரு பெண்ணின்  மீது  பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு அவருடைய அந்தரங்க பாகங்களை தொடுவது, காயப்படுத்துவது அல்லது வேறு ஏதேனும் முறையில் அந்தப் பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுப்பது, அதுவும் அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக அவளின் அனுமதியின்றி, மேலும் அவளிடம் அனுமதி பெற்றாலும் அந்த அனுமதி அவள் பிரியப்பட்ட ஒரு நபரை பணயம் வைத்து அவளை பயமுறுத்தி பெற்ற அனுமதியாக இருப்பினும், மேலும் கணவரல்லாத ஒரு நபர் கணவர் என்ற போர்வையில் உறவு வைத்துக்கொள்வதும், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அல்லது நடக்கும் செய்கையை புரிந்துகொள்ள இயலாத நிலையிலிருக்கும் ஒரு பெண் அல்லது 18 வயதுக்குட்பட்ட ஒரு பெண் ஆகியோருடன் வைத்துக் கொண்டிருக்கும் பாலியல் உறவுகள் பாலியல் வன்புணர்ச்சி குற்றத்துக்குச் சமம். 

பிரிவு 376ன் கீழ் இதற்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத் தண்டனை உண்டு. 

ஒரு காவல் துறை அதிகாரி தான் பணிபுரியும் காவல் நிலையத்திலேயோ அல்லது அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண்ணிடமோ பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது... 

ஒரு பொது அலுவலர் தன்னுடைய பாதுகாப்பில் இருக்கும் ஒரு பெண்ணிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ராணுவத்தில் பணிபுரிபவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் ஒரு பெண்ணுடன் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

சிறைக் காவலர் அல்லது சிறை அதிகாரி அல்லது பெண்களும் குழந்தைகளும் தங்கும் பாதுகாப்பு இல்லங்களின் பொறுப்பாளர் மற்றும் 
விடுதியிலிருப்பவர் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

மருத்துவமனையின் பராமரிப்பில் இருப்பவர் அல்லது அதில் பணிபுரிபவர் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ஒரு பெண்ணின் உறவினரோ, காப்பாளரோ, ஆசிரியரோ அவர் பாதுகாப்புக்கு நம்பிக்கையானவரோ பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ஜாதிக் கலவரத்தின் போது ஏற்படுத்தும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது...

கர்ப்பிணி என்று தெரிந்தும் ஒரு பெண்ணின் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடுவது...

16 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ஒப்புதல் கொடுக்க இயலாத நிலையிலிருக்கும் ஒரு பெண்ணுடன் வல்லுறவு கொள்வது...

மனநலம் அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் மாற்றுத்திறனாளியின் மீது பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ஒரே பெண்ணின் மீது மீண்டும் மீண்டும் வல்லுறவு வைத்துக்கொள்வது...

ஒரு பெண்ணின் மீது பாலியல் உறவின் போது அவள் உடலைக் காயப்படுத்துவதோ, அவள் உயிருக்கு பங்கம் விளைவிப்பதோ... 

இவையனைத்துக்கும் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனையும், அதிக பட்சமாக 
வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிப்பதற்கான அபராதத்துடன் கூடிய தண்டனையும் விதிக்கப்படும்.  

பிரிவு 376 A  யாரொருவரின்  பாலியல் வன்புணர்ச்சி செய்கையினால் ஒரு பெண்ணுக்கு மரணம் ஏற்படின் அல்லது மரக்கட்டை போன்ற ஒரு நிலை ஏற்படின்... குற்றம் இழைத்த அந்த நபருக்கு 20 ஆண்டுகள் வரை அல்லது சாகும் வரை வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்கும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 376 B  யாரொருவர் நீதிமன்ற அனுமதியுடனோ, தன்னிச்சையாகவோ பிரிந்து வாழும் தன் மனைவியின் முன் அனுமதி இல்லாமல்  பாலியல் உறவில் ஈடுபடுகிறாரோ அவருக்கு குறைந்த பட்சம்  2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய  சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 376 C- யாரொருவர் தன் பதவி மற்றும் அதிகாரத்தின் மூலம் தனக்கு அடங்கி இருப்பவர் மீது  பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுகிறாரோ  அந்த நபருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான  அபராதத்துடன் கூடிய  சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 376 D - ஒரு பெண்ணின் மீது கூட்டு பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொரு வருக்கும் 20 ஆண்டுகளிலிருந்து ஆயுட்காலம் வரை அபராதத்துடன் கூடிய  வாழ்நாள்  சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 376E - யாரொருவர் ஏற்கனவே குற்றவாளியாக நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் அதே பாலியல் வன்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபடுவாராயின் அவருக்கு, வாழ்நாள் சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். இதுவரை இந்திய தண்டனைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சில சட்ட திருத்தங்களைப் பற்றி பார்த்தோம். 

இனி, குற்றவியல் நடைமுறை சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தங்களைப் பற்றி பார்ப்போம்.

பிரிவு 54 A -  இந்தப் புதிய திருத்தத்தின் கீழ் ஒருவர் குற்றம் சாட்டப்பட்ட நபரை அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில், மன நலமோ, உடல் நலமோ பாதிக்கப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும் பட்சத்தில் அவரை அடையாளம் காண்பது குற்றவியல் நீதிபதி முன்னர் நடைபெற வேண்டும். 

குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காணும் நபர் மனநலமோ, உடல்நலமோ பாதிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் அந்த அடையாள அணிவகுப்பை படப்பதிவு செய்வது அவசியம். 

பிரிவு 154 - இந்தச் சட்ட திருத்தத்தின் கீழ் அமில வீச்சு, பாலியல் வன்முறை, கற்பழிப்பு போன்ற பெரும் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணை செய்ய ஒரு பெண் காவலரையே நியமிக்க வேண்டும்.

தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ, மனதளவிலோ, உடலளவிலோ பாதிக்கப்பட்டிருக்கும் நபரை அவருடைய இல்லத்திலோ,  அவருக்கு சௌகர்யமான இடத்திலோ, அவருடைய செய்கை மொழியை மொழிமாற்றம் செய்யத் தெரிந்தவர் முன்னிலையிலேயோ அல்லது சிறப்புக் கல்வியாளர் முன்னிலையிலேயோ விசாரணை மேற்கொள்வது அவசியம்.  மேலும் அவ்விசாரணையை படப்பதிவு செய்வது நன்மை பயக்கும்.

பிரிவு 161 - இந்தப் பிரிவின் கீழ் அமில வீச்சு, பாலியல் வன்முறை, கற்பழிப்பு போன்ற பெரும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து வாக்குமூலம் கோரும்போது அவ்வாறான வாக்குமூலத்தை ஒரு பெண் காவல் அதிகாரி பதிவு செய்வது அவசியம்.  

பிரிவு 357 B  இந்தப் பிரிவின் கீழ் பெரும் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் நஷ்ட ஈடு, இந்திய தண்டனைச் சட்டம் 

பிரிவு 326 அல்லது 376ன் கீழ் கொடுக்கப்படும் நஷ்டஈடுக்கு கூடுதலாக கொடுக்கப்படுவதேயாகும்.   

பிரிவு 357 C -  மத்திய, மாநில மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமில வீச்சு, கற்பழிப்பு போன்ற குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு இலவச முதல் உதவியோ, மருத்துவ உதவியோ செய்யத் தவறும் பட்சத்தில் அதைப் பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். இந்திய சாட்சிய சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட திருத்தங்களைப் பற்றி பார்ப்போம்

பிரிவு 53A -  பாலியல் வன்முறை அல்லது கற்பழிப்பு குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்ணின் நன்னடத்தை பற்றியோ, அதற்கு முன்னர் இருக்கும் பாலியல் அனுபவம் பற்றி கேட்பது சாட்சி விசாரணையின்போது அவசியமானதல்ல. 

பிரிவு 114A -  கொடுமையான பாலியல் வன்முறை அல்லது பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண், தான் அந்த பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் நீதிமன்றம் அதனை அவ்வாறே ஏற்றுக் கொள்ளும். 

பிரிவு 119 -  ஒரு வழக்கின் சாட்சி பேச முடியாதவராயிருப்பின் அவர் நீதிமன்றத்தின் முன் எழுத்து மூலமாகவோ, சைகை மூலமாகவோ  மற்றவருக்குப் புரியும் வண்ணம் கொடுக்கும் சாட்சியம் வாய்மொழி சாட்சியத்துக்கு ஒப்பாக ஏற்றுக் கொள்ளப்படும்

000057. நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி?

நோக்கம்:

பிடிப்பாணை வழக்குகளில், பிடிப்பாணையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்த்து, அதற்கேற்ப பிணையாளிகளுடன் பிணைமுறி எழுதித்தர வேண்டும் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71).

சுமத்தப்பட்டுள்ள குற்றம் பிணையில் விடுவிக்கப்படக் கூடியதாகவும், பிடிப்பாணை இல்லாமல் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணைமுறி எழுதிக்கொடுத்த பின்பு உங்களை பிணையில் விடுவிக்கும் படி காவல் நிலையப் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரியிடம் கேட்கலாம்.

ஒரு நபரிடம் பிணையாளிகள் இல்லாமல் பிணைமுறிவு எழுதி வாங்கிக் கொண்டு, பிணையில் விடுவிப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு தன் விருப்புரிமை அதிகாரம் உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 436).

உடனடியாக உங்களை பிணையில் விடுவிக்காவிட்டால் உங்களது வழக்கறிஞருக்கோ, நண்பர் அல்லது உறவினருக்கோ தொலைபேசியில் தகவல் கூற உங்களுக்கு உரிமை உண்டு. உங்களது வழக்கறிஞரிடம் பிணையாளிகளாக வரக்கூடிய நபர்களின் பெயர், முகவரிகளைத் தரவும், உங்களுக்கு வழக்கறிஞர் இல்லாவிட்டால், நண்பர் அல்லது உறவினருக்கு கீழ்கண்ட விவரங்களைத் தெரிவிக்கவும்.

நீங்கள் ஆஜராகப் போகும் குற்றவியல் நீதிமன்றம்.

நீதிமன்றம் துவங்கும் நேரம்.

உங்களுக்காக பிணையாளிகளாக வரத் தயாராக உள்ளவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரச்செய்வது.

முடிந்தால், ஒரு வழக்கறிஞரை தொடர்பு கொள்ளச் சொல்வது.

நீதிமன்றத்திற்குச் செல்லும் முன்பாக, இத்தகையவற்றைக் கவனித்துக் கொண்டால், தேவையில்லாமல் காவலில் வைக்கப்படுவதிலிருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.

குற்றவியல் நீதித்துறை நடுவரால் பிணையில் விடுவிக்கப்படல்:

பிணையில் விடுவிக்கப்பட முடியாத குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் குற்றம் புரிந்திருக்கக் கூடும் என்பதற்கு நியாயமான காரணங்களிருந்தால் காவல்துறை அதிகாரி அவரை பிணையில் விடுவிக்க மறுத்துவிடலாம். அவ்வாறான நிலைமையில், பிணையில் விடுவிக்கும் படி நீதிமன்றத்தில் எழுத்து மூலமான மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்களாக இருந்தாலன்றி, நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும். அவ்வாறான குற்றங்களுக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதி மன்றம் மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும்.

பிணையில் விடுவிப்பதை எதிர்த்து காவல் துறையினர் கூறும் பொதுவான காரணங்கள்

குற்றவாளி, விசாரணையின் போது ஆஜராகமாட்டார்.

சாட்சிகள் அல்லது முக்கிய சாட்சியங்களில் அவர் குறுக்கிடுவார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு, மேலும் குற்றம் புரிவார்.

காவல்துறையினரின் புலன் விசாரணை முடியவில்லை.

மேலும் குற்றச்சாட்டுகள் தொடர வேண்டியுள்ளது.

களவு போன பொருட்கள் கைப்பற்றப்படவில்லை.

சக குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர்.

குற்றம் புரிவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப் படவில்லை.

பொதுவாக, குற்றவாளியை காவலில் வைக்கும்படி, காவல் துறையினர் மனுச் செய்வார்கள். அத்தகைய மனுவில், குற்றவாளியை மேலும் காவலில் வைக்க வேண்டியதற்கான காரணங்களை அவர்கள் அளித்திருப்பார்கள். கூடுமான அளவிற்கு, காவல் துறையினர் கூறும் காரணங்களை மறுத்துரைக்க வேண்டும்.

பிணையில் விடுவிக்க மனு

குற்றவாளியால் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள முடியுமென்றால், அவர் நீதிபதியின் முன்பாக குற்றவாளிக்காக மனுக் கொடுத்து ஆஜராகலாம்.

வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள இயலாதென்றால், குற்றவாளியே நீதிபதிக்கு மனுச் செய்து கொள்ளலாம். இதற்காக சிறை அலுவலரிடமிருந்து மனுவைப்பெற்று, பூர்த்தி செய்து, நீதிபதியைத் திருப்திப்படுத்தும் வகையில், தான் பிணையில் விடுவிக்கப்பட வேண்டியதற்கு தகுந்த காரணங்களைக் கூற வேண்டும்.

அம்மனுவில், தாம் விடுவிக்கப்படுவதற்காக, கீழ்க்கண்ட சிறப்பு காரணங்களைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

நிபந்தனையும் தங்குமிடத்தின் நிலைமையும் பிணையில் விடுவிக்கப்படாவிட்டால் வெளியேற்றபட நேரிடுமா?

பணியை இழக்க நேரிடுமா

பிணையில் விடுவிக்க மறுக்கப்பட்டால், தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு எத்தகைய துன்பம் ஏற்படும்?

காவலில் வைத்திருப்பதால் நலிவுற்ற உடல் நிலையும், சிகிச்சையும் எவ்வாறு பாதிக்கப்படும்?

குற்றவியல் நீதித்துறை நடுவர் பிணையில் விடுவிக்க மறுத்தல் :

பிணையில் விடுவிக்க மறுத்தால், குற்றவியல் நீதித்துறை நடுவர், அதற்கான காரணங்களைப் பதிவு செய்ய வேண்டும். உயர்நீதி மன்றங்களில் மேல் முறையீடு செய்வதற்கு அத்தகைய பதிவுக் குறிப்பு அவசியமாகும்.

மேல் முறையீடு :

பிணையில் விடுவிக்கக் கோரும் மனுவானது குற்றவியல் நீதித்துறை நடுவரால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டால், குற்றவாளி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். பிணையில் விடுவிப்பதற்கு மறுப்பு அல்லது நீதிமன்றத்தில் ஆட்சேபணை தெரிவிக்கப்படவில்லை என்பதையும் பிணை விடுவிப்பு மனுவில் குறிப்பிட வேண்டும். ஒருவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டால், மீண்டும் அடுத்த முறை மனுச் செய்து முயற்சிக்கலாம்.

பிணையில் விடுவிப்பதற்கான நிபந்தனைகள் :

குற்றவியல் நீதித்துறை நடுவர், நிபந்தனை எதுவும் இல்லாமல் அல்லது சிறப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பிணையாளிகளுடன் அல்லது பிணையாளிகளின்றி பிணை முறி எழுதிக் கொடுத்தால் பிணையில் விடுவிக்கலாம்.

சிறப்பு நிபந்தனைகளில், குறிப்பிட்ட நேரங்களில் காவல் நிலையத்தில் குற்றவாளி ஆஜராக வேண்டும் அல்லது அவரது பாஸ் போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது போன்று கூறப்பட்டிருக்கும். குற்றவியல் நீதித்துறை நடுவரால் விதிக்கப்பட்டுள்ள நியாயமற்ற நிபந்தனைகள் நீதிமன்றத்தில் ஆட்சேபிக்கலாம். நிபந்தனைகளை மாற்ற நீதிமன்றம் மறுத்தால், குற்றவாளி அதை மறுத்துவிடலாம். ஆனால் அவ்வாறான நிலைமையில், மேல் முறையீடு விசாரிக்கப்பட்டு அவருக்குச் சாதகமான முடிவு செய்யப்படும் வரையில் அவர் விடுதலை செய்யப்படமாட்டார்.

பிணை முறிவும், பிணையாளிகளும் :

பிணையாளிகளுடனோ அல்லது பிணையாளிகள் இல்லாமலோ சொந்தப் பிணையில் ஒரு குற்றவாளியை விடுவிக்கலாம்.

குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், நீதிமன்றத்தில் குற்றவாளி ஆஜராவதற்கு, குறிப்பிட்ட தொகையைப் பிணையாக உத்திரவாதம் அளிக்கும் நபர்களே பிணையாளிகள் ஆவர்.

பிணையாளிகளாக உள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். கேட்கப்பட்டால் பிணையாளியாக இருக்கத் தயார் என்பதையும் போதிய நிதி வசதி உண்டு என்பதையும் பிரமாணத்தின் பேரில் நீதி மன்றத்திற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும்.

அவர்களுக்குப் பிணை அளிப்பதற்குப் போதிய நிதி வசதி உள்ளது என்பதோடு வேறு வகையிலும் பிணையாளிகளாக இருக்கத் தகுதியுடையவர்கள் என்பதை எடுத்துக்காட்டி, நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யலாம்.

எந்தவிதக் காரணமும் கூறாமல். பிணையாளியை ஏற்க மறுத்துவிடக் குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு அதிகாரம் உண்டு. பிணையாளிகள் நீதிமன்றத்தில் இல்லாவிட்டால், காவல் துறையினர் அவர்களை விசாரித்து, ஏற்றுக் கொள்ளத்தக்கவர்கள் எனத் தீர்மானிக்கும் வரை, கைது செய்யப்பட்ட நபர் காவலில் வைக்கப்பட்டிருப்பார்.

பிணையாளிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், நிரந்தர முகவரியும், பிணையளிப்பதற்கு அவர்களது கடன்கள் நீக்கி, போதுமான அளவிற்கு நிதி வசதியும் இருக்க வேண்டும். பிணையாளிகள் தங்களது ரேஷன் கார்டு, வாடகை ரசீது, வைப்பீட்டு நிதி அட்டை, சம்பளப் பட்டியல். வருமான வரி ரசீது போன்ற ஆவணங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

தொழில் முறையில் பிணையாளிகளாக இருந்தாலன்றி, அவர்களது தனிப்பட்ட குண இயல்பு, அரசியல் கருத்துக்கள், பழைய குற்றவாளியா, ஆணா, பெண்ணா என்பதைக் காரணங்காட்டி பிணையாளிகளைத் தள்ளுபடி செய்யும் அதிகாரம் காவல் துறைக்கும், குற்றவியல் நீதித்துறை நடுவருக்கும் இல்லை.

000056. பல்வேறு வகையான சாட்சிகள் - (DIFFERENT TYPES OF WITNESS)

  
  சாட்சி (Witness) என்பதற்குப் பொருள் என்ன என்பதை பற்றி இந்திய சாட்சியச் சட்டம் கூறவில்லை. ஆனால் ஊமை சாட்சிகளைப் பற்றியும் பிறழ் சாட்சிகளைப் பற்றியும் கூறுகிறது.

நீதிமன்றத்தில் குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரையிலும் யார் வேண்டுமானாலும் சாட்சியம் அளிக்கலாம்.

சாட்சிகளின் வகைகளை அறிந்து சட்டம் தெளிவோம் :


1. பொய் சாட்சி (Lying Witness) .

2. அதிகம் பேசும் சாட்சி ( Flippant Witness).

3. பிடிவாதம் பிடிக்கும் சாட்சி (Dogged Witness).

4. தயக்கம் காட்டும் சாட்சி ( Hesitation Witness).

5. பயத்தால் உடல் நடுங்கும் சாட்சி( Nervous Witness) .

6.சிரிப்பூட்டுகின்ற சாட்சி ( Humorous Witness).

7. வஞ்சகச் சாட்சி ( Cunning Witness).

8. கபட சாட்சி ( Canting hypocrite).

9. பாதி உண்மையும் பாதி பொய்யும் சொல்லும் சாட்சி (The Witness Who Speaks partly true and partly false).

10. தொழில் வழியான சாட்சி.( Professional Witness).

11.அலுவல் சார்ந்த சாட்சி . (Official Witness).

12. காவல்துறை சாட்சி. (Police Witness).

13. மருத்துவ சாட்சி.( Medical Witness).

14. நாகரீகமான சாட்சி ( Cultural Witness).

15. நேர்மையான சாட்சி. ( Honest Witness).

16. தனிப்பட்ட சாட்சி.(Independent Witness).

17. பெண் சாட்சி.(Women Witness).

18. குழந்தை சாட்சி. (Child Witness).

19. அயலிடவாத சாட்சி.(Alibi Witness).

20.நேரில் பார்த்த சாட்சி.( Eye Witness).

21. கல்வி அறிவில்லாத சாட்சி.(illiterate Witness).

22. உறவு நிலை சாட்சி ( Relation Witness)

23. தற்செயலாக பார்த்த சாட்சி . (Chance Witness).

24. பிறழ் சாட்சி . (Hostile Witness).

25. குற்றமேற்ற சாட்சி.(Approver Witness).

26. காவல்துறையினரால் தயாரிக்கப்பட்ட சாட்சி . (Trap Witness).

என  பல்வேறு வகையான சாட்சிகள் உள்ளன.

Tuesday, May 22, 2018

000055. பிரிவு 26 முதல் 52 - இந்திய தண்டனைச் சட்டம் 1860

26 - நம்பத்தகுந்த காரணம்

27 – மனைவி, எழுத்தர், வேலையாட்களிடம் உள்ள சொத்து

28 – கள்ளத் தயாரிப்பு

29 – பத்திரம் – ஆவணம்

29 A – மின்னணுப் பதிவுரு

30 – மதிப்பாவணம்

31 – உயில்

32 – செய்கைகளைக் குறிக்கின்ற சொல் சட்டத்திற்கு மாறாக விடுகைகளை உள்ளடக்கும்.

33 – செய்கை அல்லது விடுகை

34 – பொதுவான உட்கருத்தை மேல்நடத்தும் வகையில் பல்வேறு ஆட்களால் செய்யப்பட்ட செய்கை

35 – அத்தகைய செய்கை குற்றமுறு அறிவுடன் அல்லது உட்கருத்துடன் செய்யப்படுகின்ற காரணத்தால் அது குற்ற செய்கையாக இருக்கும்போது

36 – பகுதி செய்கையாலும் பகுதி விடுகையாலும் உண்டாக்கப்பட்ட விளைவு

37 – பல்வேறு செய்கைகளில் ஒன்றை செய்வதன்மூலம் ஒத்துழைத்தலானது ஒரு குற்றமாக அமைகிறது.

38 – குற்ற செய்கையில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் வெவ்வேறு குற்றங்களை செய்தவர்களாகலாம்.

39 – தன்னிச்சையாக - என்பதன் விளக்கம்

 40 – குற்றம் - என்பதன் விளக்கம்

41 – சிறப்பு சட்டம் - என்பதன் விளக்கம்

42 – வட்டார சட்டம் - என்பதன் விளக்கம்

43 – சட்டத்திற்கு மாறாக செய்ய சட்டப்படி கடமைப்பட்டவர்

44 – கேடு (அ) ஊறு (அ) துன்பம்

 45 – உயிர் என்பது மனித உயிரையே குறிக்கும். வேறு பொருள் கொள்ள வேண்டிய இடங்களில் அதற்கான விளக்கம் தனியே தரப்பட்டிருக்கிறது.

46 – மரணம் என்பது இந்த சட்டப்படி மனிதருடைய மரணத்தையே குறிக்கிறது. வேறு பொருள் கொள்ள வேண்டிய இடங்களில் அதற்கான விளக்கம் தனியே தரப்பட்டிருக்கிறது.

47 – மிருகம் என்பது மனித உயிர் தவிர மற்ற உயிர் வாழும் ஜந்துக்களைக் குறிக்கிறது.

48 – கப்பல்

49 – ஆண்டு, மாதம் என்பது ஆங்கில ஆண்டு மற்றும் ஆங்கில மாதத்தினைக் குறிக்கும்.

50 – பிரிவு – எண்களிட்டு காட்டப்பட்டிருக்கும் இந்த சட்டத் தொகுப்பின் பகுதியைக் குறிக்கும்.

51 – பிரமாணம்

52 – நல்லெண்ணம்

52 A – புகலிடம் தருதல்

000054. கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.

2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.

3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.

5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,

• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.

• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.

• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.

7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்டையும் வரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.

8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.

1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை

.போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்

1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.

11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம், புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதியிருக்க வேண்டும்.

12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .

13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.

15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுக்கப்பட்டுள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல், ஆவணம் தயாரித்தவர் என்று அனைவரும் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

Monday, May 21, 2018

000053. தகவல் அறியும் உரிமைச்சட்டம் (RTI)

 1. “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலை அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.

3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்திரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.

7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்த வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட  எந்த கேள்விகளையும் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம்? எடுத்துக்காட்டாக:

1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில்  (5 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (2 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும்?

4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘பசுமை வீடுகள் திட்டம்’, இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் ( முந்தைய ஆட்சியில் ‘நமக்கு நாமே திட்டம்' ), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது? என்னென்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலத்திட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் (தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள்) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்னென்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்?

6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச் சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்னென்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஊண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன? பாதுகாப்பானவையா? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா?

8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ?

10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா?

11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா?

12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும்? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும்? இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.

மாநில அரசு தகவல்கள் பெற :-

திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )

மாநில தலைமை தகவல் ஆணையர்,
காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம்,
முதல் மாடி, ( வானவில் அருகில் )
பழைய எண் : 273, புதிய எண் : 378 , அண்ணா சாலை,
( தபால் பெட்டி எண் : 6405 ) தேனாம்பேட்டை,
சென்னை – 600 018
தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580

Email : sic@tn.nic.in

http://www.tnsic.gov.in/contacts.html

மத்திய அரசு தகவல்கள் பெற :-

Shri Satyananda Mishra Chief Information Commissioner,
Room No.306, II Floor, August Kranti Bhavan, Bhikaji Cama Place,
New Delhi – 110 066. Phone:- 011 – 26717355
E-mail :- s.mishra@nic.in

http://cic.gov.in/

குறிப்பு :- மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அந்தந்த தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல் செய்யலாம். சகோதரர்களே! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது

000052. புரோ நோட்டு எனப்படும் கடன் உறுதிச் சீட்டு

ஒருவர் மற்றொருவரிடம் கடன் வாங்கியதற்கு அத்தாட்சியாக எழுத்து மூலம் உறுதி செய்துகொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற தாளையே,  PROMISSORY NOTE  என்று  கூறுகிறோம்.  தமிழில் சுருக்கமாக “புரோநோட்” என்று சொல்கிறோம்.

கடன் கொடுத்தவர் கடனை கேட்டவுடன் கடன் வாங்கியவர் எந்தவித நிபந்தனையும் இன்றி வாங்கிய கடனை அவருக்கு திருப்பிக் கொடுக்க  வேண்டும். இதுவே இந்த புரோ நோட்டின் சாராம்சம் ஆகும்.

மாற்றுமுறை ஆவணச் சட்டம், நான்காவது விதியில் புரோ நோட்டு பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.

புரோ நோட்டின் சிறப்பு

இதனை முத்திரைத் தாளில் எழுத வேண்டியதில்லை.

எங்கும் பதிவு செய்ய வேண்டும் என்பதில்லை.

சாட்சிகளிடம் முதலிலேயே கையெழுத்து வாங்க வேண்டியதில்லை.

ரூ.50,000/- வரை கடைசி நேரத்தில் நிரப்பிக் கொள்ளலாம்.  

சாதாரணத் தாளில் எழுதி, ஒரு ரூபாய் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால் போதுமானது.

கடன் கொடுப்பவர் நிபந்தனைகள் விதிக்க வேண்டியதில்லை.

முக்கிய விதிகள்

கடன் வாங்கியவர் எந்தவித நிபந்தனையும் இன்றி, வாங்கிய  கடனை, கேட்டவுடன்  கடன் கொடுத்தவருக்கு திருப்பிக் கொடுக்க  வேண்டும். 

ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டாமல், கடன் வாங்கியவர் புரோ நோட்டில் கையெழுத்து போட்டால் அந்த புரோ நோட்டு செல்லாது.

நிபந்தனைகள் விதிக்கப்பட்ட புரோ நோட்டுகள் செல்லாது.

புரோ நோட்டு எழுதப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு பிறகு செல்லாது.

கடன் வாங்கியவர் வட்டியோ அல்லது அசலோ கடன் பெற்றவரிடம் கொடுக்கும் போது புரோ நோட்டின் பின்புறத்தில் எழுதி அவரது கையெழுத்தை வாங்கிக்கொள்ள வேண்டும்.

அசலும் வட்டியுமாக மொத்தத் தொகையையும் கடன் வாங்கியவர் செலுத்திவிட்டால், புரோநோட்டில் கடன் கொடுத்தவரிடம் எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.

முழுப்பணமும் செலுத்திய பிறகு, எக்காரணத்தை முன்னிட்டும் புரோ நோட்டை வாங்க மறக்கக் கூடாது.

 புரோநோட்டை வாங்காமல் விட்டுவிட்டால், கடன் கொடுத்தவர், அதனை வேறு ஒருவருக்கு ”மேடோவர்” முறையில் எழுதிக் கொடுத்துவிட வாய்ப்பு உண்டு.

வட்டி மற்றும் அசல் கடன் வாங்கியவர் செலுத்தும்போது, அதனை பெற்றுக்கொண்டு கடன் கொடுத்தவர் தருகின்ற ரசீது செல்லாது.

கடன் வாங்கியவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடியாது. சிவில் வழக்கு தான் போடவேண்டும்.

000051. பொதுக்குழுக் கூட்டம் - சட்டம் என்ன சொல்கிறது?

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் - பிரிவு:26

பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு ஒரு முறையாவது பொதுக்குழுக் கூட்டத்தை கூட்ட வேண்டும். கூட்டத்தைக் கூட்டுவதற்கு முன்னர் 21 நாட்களுக்கு முன்னதாக அந்த பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்படுவது குறித்து பதிவு செய்யப்பட்ட சங்கமானது தனது உறுப்பினர்களுக்கு அறிவிப்பு கொடுத்தல் வேண்டும். அந்த அறிவிப்பில் கூட்டம் நடக்கும் நாள், நேரம், இடம் ஆகியவற்றையும், கூட்டத்தின் குறிக்கோளையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மேலும் பைலாவில் அடங்கியுள்ள துணை விதிகளுக்கு அல்லது குறிக்கோளுக்கு திருத்தம் ஏதாவது கொண்டுவர  மேற்படி சங்க நிர்வாகிகள் நினைத்தால், அத்தகைய திருத்தத்தின் நகல் ஒன்றையும் இணைத்து தெரிவிக்க வேண்டும். மாவட்டப் பதிவாளர் அந்த பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னிலையாக தமக்கு கீழுள்ள ஒரு அலுவலரை நியமிக்கலாம். 

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் - விதி எண்:25

பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் பிரிவு:26ன் கீழ் கூட்டப்படுகின்ற பொதுக்குழுக் கூட்ட அறிவிப்பை அநதக் கூட்டம் நடைபெற உள்ள நாளுக்கு குறைந்தது 21 நாட்களுக்கு முன்னர் உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டும். கீழ்காணும் முறைகளில் ஒன்றால் அல்லது பலவற்றால் உறுப்பினர்களுக்கு அந்த அறிவிப்பை அனுப்ப வேண்டும்.
உள்ளூர் தபால் சேர்ப்பிப்பு வழியாக; அல்லது தபால் மூலமாக; அல்லது உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை வழியாக; அல்லது அரசு இதழ் விளம்பரம் வழியாக

Sunday, May 20, 2018

000050. பொய் சாட்சியம் புனைதல்

நமது நாட்டில் தண்டணைக்குரிய தப்பை செய்துவிட்டு   ”பணம் படைத்தவர்களும், அரசியல்வாதிகளும், ரௌடிகளும்” தைரியமாக, உலாவிக் கொண்டு இருப்பதற்குக் காரணமான சட்டப் பிரிவு என்று ஒன்று உண்டென்றால் அது இந்திய தண்டணைச் சட்டம் 192 வது பிரிவு தான். 

தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் முயற்சி செய்து முனையும் போது அவர்களை காவல் துறையினர் தடம் மாற, தடுமாற வைப்பது இந்தப்  பிரிவின் மூலமாகத்தான். இந்தப் பிரிவை நாம் தெரிந்து கொண்டு பயன்படுத்தாமல், சட்ட விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதுதான், நாட்டில் குற்றங்கள் பெருக வழி வகுக்கிறது. பொதுவாக காவல் நிலையத்தில் நாம், கடும் தண்டணைக்குரிய ஒரு குற்றம் சம்பந்தமாக ஆதாரங்களுடன் புகார் அளித்தால், முதலில் அதனை வாங்கவே மாட்டார்கள். அப்படியே வாங்கினாலும் அதற்குரிய ஒப்புதல் ரசீது (CSR) தரமாட்டார்கள். ரசீது தந்தாலும் விசாரணை செய்ய மாட்டார்கள். ஒருவேளை விசாரணை நடத்தினாலும், முதல் தகவல் அறிக்கை (F.I.R) பதிவு செய்ய மாட்டார்கள். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை (Police Report) தாக்கல் செய்ய மாட்டார்கள். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தாலும், எத்தனை ஆதாரங்களை நாம் அளித்திருந்தாலும் எதிரி குற்றமே செய்யாதது போல் பொய் சாட்சியங்களை புனைந்து அந்த வழக்கை முடித்து வைத்து விடுவார்கள்.

இதனைக் கடந்து  போவதற்கு  சட்டம் நமக்கு வழி வகுத்திருந்தாலும், இந்தப்பிரிவானது காவல்துறையினர் மூலம் நமக்கு தடங்கலை ஏற்படுத்தி விடுகிறது. பலர் துவங்கி விடுகிறார்கள். அதற்கு அடுத்துச் செல்ல தயங்குகிறார்கள். இதனைக் கடந்து சென்று எதிரிக்கு தண்டணை வாங்கித் தருகின்ற போராளிகளும் கூட, பொய்சாட்சியம் புனைந்த காவல் துறையினர்க்கு தண்டணை வாங்கித்தர வாய்ப்புகள் இருந்தும், ஏனோ அதுபோன்ற  நடவடிக்கை எதுவும் எடுக்காமல், எதிரிக்கு தண்டணை வாங்கித்தந்த திருப்தியில் பேசாமல் இருந்து விடுகிறார்கள். 

பொய்  சாட்சியம் புனைந்த காவல் துறையினருக்கு சட்டப்போராளிகள் இந்தப் பிரிவின் மூலம் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு கடுமையான தண்டணை பெற்றுத் தரலாம். அவ்வாறு சிலர் செய்தாலே போதும். பொய்சாட்சியம் புனைவதற்கு காவல் துறையினர் பயப்படுவார்கள். நமது நாட்டில் குற்றங்கள் குறையும். நீதி தழைக்கும்.

 அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பிரிவில்? வாருங்கள் பார்க்கலாம்!

இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-192

புத்தகம் அல்லது பதிவேடு (Document)  அல்லது மின்னணுப் பதிவுறு (Online Certificates) ஆகியவற்றில் சூழ்நிலை அல்லது பொய்யான பதிவு எதையேனும் அல்லது  பொய்யுரையைக் கொண்ட பத்திரங்கள் எதையேனும் ஒரு நீதிமன்ற நடவடிக்கையில் ஒரு பொது ஊழியர் என்ற முறையில் ஒரு சாட்சியத்தின்படி தீர்ப்பு வழங்க வேண்டியிருக்கும் போது, அந்த சாட்சியத்தில் தவறான எண்ணம் கொள்ளுமாறு உட்கருத்துடன் பொய்யான கருத்துக்களை புனைந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்ற எவர் ஒருவரும் பொய் சாட்சியம் புனைபவர் ஆவார்.

இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-193

ஒரு நீதிமன்ற நடவடிக்கைகளின் எந்தக் கட்டத்திலும், உட்கருத்தோடு பொய் சாட்சியம் தருகின்ற அல்லது ஒரு நீதிமன்ற நடவடிக்கைகளின் எந்தக் கட்டத்திலும் பொய் சாட்சியம் புனைகின்றவர் யாராக இருந்தாலும், அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கப்படுவார்கள். மேலும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.

000049. அரசு அலுவலங்களில் தகவல் அறியும் உரினமச்சட்டத்தின் ஆவணங்கனள ஆய்வு செய்தல் மற்றும் தகவல்கனள குறிப்பு எடுத்தல் நகல் எடுத்தல்

சம்மந்தமான மாதிரி மனு அமைப்பு : 

2 (ஒ) (1)-ன் கீழ் ஆய்வு செய்ய வேண்டி விண்ணப்பம்

நேரில் சார்பு செய்யும்

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2 (ஒ) (1)-ன் கீழ் ஆய்வு செய்ய வேண்டி விண்ணப்பம்

அனுப்புநர் :                         கடித எண். _ /  _, நாள். 
                                                        
பெறுநர் :

திரு. பொது தகவல் அலுவலர் அவர்கள்,

(தகவல் அறியும் உரிமை சட்டம் 2005)

பொருள் :     தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2 (ஒ) (1)-ன் கீழ் ஆய்வு செய்ய வேண்டி விண்ணப்பம்

மதிப்பிற்குரிய ஐயா / அம்மா அவர்களுக்கு,

பார்வை  :   
…………………………………..

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.

மேற்படி பார்வையில் சொல்லப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2 (ஒ) (1)-ன் கீழ் ஆய்வு செய்ய வேண்டி, ரூ. 10/-க்கான நீதிமன்ற கட்டண வில்லையுடன், தங்களுடைய அரசு  அலுவலக வேலை நேரமான, இன்று _-_-_, காலை ____-க்கு நேரில் தாக்கல் செய்கிறேன்.

ஆகவே, இவ்-விண்ணப்பத்தினை ஏற்றுக் கொண்டு, மேற்சொன்ன பார்வை 1-ல் சொல்லப்பட்ட அறிவிப்பில் தொடர்புடைய கோப்பில் உள்ள அனைத்து ஆவணங்களை ஆய்வு செய்து, தேவைப்படும் ஆவணங்களை, சட்டப்பிரிவு  2 (ஒ) (2)-ன் படி எனது சொந்த செலவில் நகலெடுத்து, அதனை தாங்கள், சான்றொப்பமிட்டு வழங்க வேண்டுகிறேன்.

மேற்படி விண்ணப்பம் மறுக்கப்பட்டாலோ / நிராகரிக்கப்பட்டாலோ, மனுதாரர் ஆகிய எனது உரிமை மறுக்கப்படுகிறது / தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2 (ஒ) (1)-யினை தாங்கள் ஏற்கவில்லை என பொருள் கொண்டு, உரிய நிவாரணம் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாக கருதுகிறேன்.

நன்றி ஐயா, வணக்கம்.

இடம் :    

நாள் :                                               மனுதாரர்.

குறிப்பு : மனுதாரரின் / புகார்தாரரின்கடித எண், மற்றும் நாள் போன்றவற்றினை குறிப்பிட்டு பதில் தரவும்.

000048. இந்திய தண்டணைச் சட்டத்தின் கீழ் குற்றம்!

குற்றம் குற்றமே!

நினைப்பது எல்லாம் நடப்பதில்லை. செய்வது எல்லாம் ஜெயிப்பதில்லை. இது குற்றம் புரிபவர்களுக்கும் பொருந்தும். அதனால், அவர் குற்றம் செய்யவில்லை, குற்றம் செய்வதற்கு முயற்சிதான் செய்தார்! இதனால், யாருக்கும் எந்தவித இழப்பும் இல்லை!, எந்தவித நஷ்டமும் இல்லை! என்று யாரையும் சட்டம் தண்டிக்காமல் விடாது. அப்படிச் செய்தால் அவர்கள் கண்டிப்பாக மீண்டும் அந்தக் குற்றத்தைச் செய்ய முயற்சி செய்வார்கள். ஆகையால், குற்றம் செய்வதற்கு முயல்வதையும் ஒரு தனிக்குற்றமாக இந்திய தண்டணைச் சட்டம் எடுத்துக் கொள்கிறது. 

”சரி, சரி விடுப்பா. ஏதோ தெரிஞ்சோ, தெரியாமயோ நடந்திருச்சி, ஒனக்கு ஒண்ணும் ஆகலல்ல! அவன் இனிமே அப்படிச் செய்யமாட்டான்!” ன்னு கிராம பஞ்சாயத்துகளில் நாட்டாண்மை என்பவர் பேசுவதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். 

இந்திய தண்டணைச் சட்டமானது ஒரு குற்றச் செயலுக்கான முயற்சியைக் கூட சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. அதற்கும் தண்டணை உண்டு. திருடுவது குற்றம் என்றால், கொலை செய்வது குற்றம் என்றால், திருடுவதற்கு, கொலை செய்வதற்கு முயற்சி செய்வதும் குற்றம்தான்.

பொதுவாக ஒரு குற்றச்செயலை அரங்கேற்ற வேண்டுமென்றால், நான்கு விதமான நிலைகளை குற்றம் செய்பவர் கடக்க வேண்டியதிருக்கும்.

1. கருத்து:
ஒருவரின் எந்த ஒரு செயலுக்கும் முதல் காரணமாக இருப்பது அவரது எண்ணங்களே ஆகும். ஆனால், செயல் எதுவுமே நடைபெறாமல், ஒருவர் குற்றம் செய்ய நினைத்தார்! என்பதை மட்டும் வைத்து அவரை சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது. 

2. முன்னேற்பாடு:
ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்வதற்கு திட்டமிடுவதோ, நடவடிக்கை எதனையும் மேற்கொள்வதோ முன்னேற்பாடு என்கிறோம். இந்த முன்னேற்பாடுகளால் பொது மக்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாத காரணத்தால், சட்டத்தின் கீழ் இதனை தண்டிக்க முடியாது.

3. முயற்சி:
ஒருவர் ஒரு குற்றச்செயலை செய்வதற்கு இது மிகவும் அவசியம். தனது எண்ணத்தின்படி திட்டமிட்டு, ஒரு குற்றச் செயலை ஒருவர் செய்வதற்கு முயற்சி செய்கிறார். அது வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை. தோற்றாலும் கூட அது சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். இந்த முயற்சியின் காரணமாக தனிப்பட்ட ஒருவருக்கோ அல்லது பலருக்கோ அல்லது பொது மக்களின் உடலுக்கும், உடைமைக்கும் ஏதோ ஒரு வகையில் தீங்கு, அழிவு ஏற்படுகிறது. எனவே இந்திய தண்டணைச் சட்டமானது பல்வேறு பிரிவுகளின் கீழ், இதனை தண்டிக்கிறது.

4. செயல்:
முதலில் மனதில் நினைக்கப்பட்டு, அதற்காக சில முன்னேற்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, அதனை முடிப்பதற்கு முயற்சி செய்யப்பட்டு, இறுதியில் ஒரு குற்றச் செயலானது ஒருவரால் அல்லது பலரால் முடிக்கப்பட்டுகிறது. குற்ற முயற்சியையே தண்டிக்கும் சட்டமானது குற்றச் செயலை தண்டிக்காமல் எப்படி விட முடியும்? இந்திய தண்டணைச் சட்டமானது பல்வேறு பிரிவுகளின் மூலமாக அந்தக் குற்றங்களுக்கு ஏற்றாற்போல கடுமையான தண்டணைகளை வழங்குகிறது

000047. U. D. R - பட்டா என்றால் என்ன?

யூ. டி. ஆர் பட்டா ஆங்கிலத்தில் - Updating Registry Scheme என்று அழைக்கப்படுகிறது. தமிழில் "நில உடைமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டம்" ஆகும். 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நில உடைமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டம்  01.06.1979 - ல் துவக்கப்பட்டது  தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகாவில் உள்ள மாசார்பட்டியில் முதன்முறையாக செயல்பட ஆரம்பித்தது. இந்தமுதல் முயற்சிக்கு பிறகு மெல்ல தமிழகம் முழுவதும் 30.4.1987 வரை நில உடைமையில் பல மாற்றங்கள் நடந்தன.

உலகம் தோன்றியது முதல் நிலங்கள் இருக்கிறது. மன்னராட்சி காலத்தில் நிலங்கள்அனைத்தும் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பிறகு நிலங்கள் மக்களுக்கு சொந்தமாச்சு. இந்த நிலங்களை அரசு 30 வருடங்களுக்கு ஒருமுறை வரையறை செய்ய வேண்டும் என்பது சட்ட விதியாகும். ஆனால் அரசு ஆள் பற்றாக்குறையை காரணமாக காட்டி நிலங்களை ஆய்வு செய்யாமல் இருந்தது. அதன் பிறகே 1979 ம் ஆண்டு இந்த யூ. டி. ஆர் பட்டா திட்டத்தை அரசு கொண்டு வந்தது.

இந்த திட்டத்தின்படி அரசு அலுவலர்கள் ஒவ்வொரு கிராமமாக  சென்று விசாரணை நடத்தி "இன்னார் நிலம்" என வரையறை செய்து பட்டா வழங்கினார்கள். அதற்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர், பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள், நிலத்துக்கு சொந்தக்காரர்கள் என அனைவருக்கும் இந்த யூ. டி. ஆர் திட்டத்தை பற்றி நில அளவையர் விளக்கம் கொடுப்பார். இந்த திட்டத்தின்படி பட்டாவை அவரவர்  வீட்டுக்கு சென்று அதிகாரிகள் வழங்கினார்கள். இந்த பட்டாக்கள் உடன் தோராய வரைபடமும் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே கூட்டுப்பட்டாக்களாக இல்லாமல் தனிநபர் பட்டாவாக மாற்றப்பட்டது தான். பட்டா புத்தகத்தில் புகைப்படம் ஒட்டப்பட்டது.

ஆனால் இந்த திட்டத்தால் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டது. நிறைய  நில உரிமையாளர்களின் பெயர்கள் விடுபட்டு போனது. பெயர்கள் மாற்றி எழுதப்பட்டது. நிறைய உரிமையாளர் பெயர்கள் எழுதாமலே விடப்பட்டது. கோவில் நிலங்களும் தவறாக பட்டா போடப்பட்டது.

மொத்தத்தில் யூ. டி. ஆர் திட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து விட்டது என்று கூறலாம்

000046. கிராம நிர்வாகம் அடிப்படைகள்

1. FMB என்பதன் விரிவாக்கம்?
★Field Measurement Book

2. S.T (Scheduled Tribes) வகுப்பினர்க்கு சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் படைத்தவர் யார்?
★கோட்டாட்சியர்

3. பிறப்பிடச் சான்று வேண்டுமாயின் மனுதாரர் தொடர்ந்து .........................மேல் அந்த இடத்தில் வசித்திருக்க வேண்டும்
★ஐந்தாண்டு

4. மாவட்ட நிர்வாகம் மக்கள் குறைகளை நேரிடையாக பெற்று விரைந்து தீர்ப்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம்? 
★மனுநீதித் திட்டம்

5. நில அளவர் இல்லாத பட்சத்தில் கீழ்க்கண்டவற்றில் யார் நில புலங்களை அளவு செய்யலாம்?
★கிராம நிர்வாக அதிகாரி

6. பட்டாவில் உள்ளடங்காத விவரமானது
★குத்தகைத் தீர்வை

7. "பசலி ஜாஸ்தி" என்பது எதனைக் குறிக்கும்?
★தண்ணீர் தீர்வை

8. கிராம கணக்கு 2-ல் இந்த வகைப்பாட்டை எழுத வேண்டும்
★நஞ்சை, புஞ்சை
★மானாவரி, தீர்வை ஏற்பட்ட தரிசு
★தீர்வை ஏற்படாத தரிசு, புறம்போக்கு

9. இருப்பிடச் சான்று வேண்டுமாயின் மனுதாரர் தொடர்ந்து .........................மேல் அந்த இடத்தில் வசித்திருக்க வேண்டும்
★ ஓராண்டு

10. 6-ஆம் நம்பர் நோட்டீஸ் இவரின் ஆணையாகும்
★வட்டாட்சியர்

11. கொடிய காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து விட்டால் அது பற்றி உடனே யாருக்கு தகவலளிக்க வேண்டும்?
★காவல்துறை
★வட்டாட்சியர்
★வனத்துறை

12. K.D ரிஜிஸ்டரில் உள்ள நபர்களின் நடமாட்டம் பற்றி விஏஓ, காவல் துறைக்கு தகவல் அறிக்கை அளிக்கலாம். இங்கு K.D என்பது
★ Known Depradator

13. கிராம நிர்வாக அலுவலர் பதவிகள் என்று முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை குழுமத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டது?
★ 12-12-1980

14. தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஆண்டு?
★1963

15. நீண்டகாலக் குத்தகை என்பது
★ 5 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்

16. 'ஆ' பதிவேடு என்பது
★இனாம்களின் நிலைப்புல பதிவேடு

17. தற்போது 'அ' பதிவேடு பராமரிக்கப்படுவது
★விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடு
★கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடு
★ஒரு வருவாய் கிராமத்திற்கு இரண்டு அ பதிவேடுகள்

18. கிராம நிர்வாக அலுவலரால் வசூலிக்கப்படும் வரிகள்
★நிலவரி அபிவிருத்தி வரி

19. இவற்றில் எது குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களைப் பற்றிய நிலைப் பதிவேடாகும்
★பதிவேடு C

Saturday, May 5, 2018

000045. ஆய்வு அறிக்கை பற்றி காவல் நிலை ஆணை

காவல் துறையில் கைது செய்யக்கூடிய குற்றம் குறித்து, தக்க ஆதாரங்களுடன் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்காத காரணத்தினால், ஒருவர் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 156(3)ன் கீழ் நீதிமன்றம் சென்று வழக்குத் தொடுக்கிறார். குற்றவியல் நீதிமன்ற நடுவர் அவர்கள், மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை பார்வையிட்டு, அந்த மனு ஏற்றுக் கொள்ளத் தக்கதா? இல்லையா? என்பதை முடிவு செய்கிறார். ஏற்றுக் கொள்ளத் தக்கது இல்லை என்றால், உடனே நடுவர் அவர்கள் தள்ளுபடி செய்து விடுவார்.

மனு ஏற்று கொள்ளத் தக்கது என்றால்?

மனு ஏற்று கொள்ளத் தக்கது என்றால், விசாரணை செய்து அறிக்கை தருமாறு அந்தப் பகுதி காவல் நிலையத்திலுள்ள காவல் ஆய்வாளர் அவர்களுக்கு நடுவர் அவர்கள் உத்தரவு இடுவார்.  அந்த காவல்நிலையத்தில் இருந்து நீதிமன்ற பணிக்கு  வந்துள்ள காவலர் மூலம், நீங்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து ஆவணங்களும் அந்தக் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு அனுப்பப்படும். சில நடுவர்கள் இத்தனை நாட்களுக்குள் அறிக்கை வேண்டும் என்று உத்தரவில் சொல்கிறார்கள். சிலர் அதனை குறிப்பிடுவதில்லை. அப்படி குறிப்பிடாத பட்சத்தில், விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்ய, மூன்று மாதங்கள் கூட ஆகிறது. ஆனால், இது போன்ற புலனாய்வுகள் ஒவ்வொன்றும் அனாவசியமான தாமதம் இல்லாமல் முடிக்கப்பட வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173 கூறுகிறது. 

இறுதி அறிக்கையினை நடுவரிடம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு கூட அந்தக் குற்றத்தைப் பற்றி புலனாய்வு செய்ய தடை இல்லை என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173(8) கூறுகிறது.  இந்த இறுதி அறிக்கைகள் குறித்து காவல் நிலை ஆணைகளில் கூறப்பட்டுள்ளதைப் பற்றிக் காண்போம்.

Tamilnadu Police Standing Orders

காவல் நிலை ஆணை எண்:658

இறுதி அறிக்கையானது படிவம் எண்:89ல் அதிகார வரம்புள்ள குற்றவியல் துறை நடுவர் அவர்களுக்கு, காவல் ஆய்வாளர் அவர்களால் அல்லது புலன் விசாரணை அதிகாரி அவர்களால்  குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173 ன் கீழ் அனுப்பப்பட வேண்டிய அறிக்கையாகும். 

படிவம் எண்:89 என்பது விசாரணை செய்கின்ற வழக்குகளை பொய் வழக்கு என்று கூறி அனுப்புவதற்கும், துப்பறிய முடியாத வழக்கு என்று கூறி அனுப்புவதற்கும் காவல்துறையினரால் பயன்படுத்தப்படுகின்ற படிவம் ஆகும்.

காவல் நிலை ஆணை எண்:659

விசாரணை செய்கின்ற வழக்குகளை, அவைகள் பொய்யாக இருந்தால் மட்டுமே, பொய் வழக்கு என்று அறிக்கை செய்ய வேண்டும். அந்த வழக்குகளை பொய்யென்று நம்புவதற்கு தகுந்த  ஆதாரங்கள்  விசாரணை அதிகாரிக்கு கிடைத்தால் ஒழிய, அந்த வழக்குகளை பொய் வழக்கு என்று சொல்லக்கூடாது. பொய் வழக்காக பெரும்பாலும் இருக்கலாம் என்று விசாரணை அதிகாரி எண்ணுவதை ஏற்க முடியாது. பொய் வழக்கு என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றாலோ, குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்றாலோ விசாரணை அதிகாரியானவர், அந்த வழக்கை துப்பு துலக்க முடியாத வழக்கு என்று திருப்பி அனுப்பிவிட வேண்டும். 

காவல் நிலை ஆணை எண்:660

விசாரணை செய்கின்ற வழக்குகளில் எடுக்கின்ற முடிவை, படிவம் எண்:90ல் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157(ஆ) ன் கீழ் புகார் அளித்தவருக்கு அனுப்பிட வேண்டும். அதன் நகலை இறுதி அறிக்கையோடு சேர்த்து சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் அவர்களுக்கு அனுப்பிவிட வேண்டும்.

காவல் நிலை ஆணை எண்:661

நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படுகின்ற ஆய்வு அறிக்கைகள் காவல் வட்ட ஆய்வாளர் மூலமாகவே அனுப்ப வேண்டும். வேறு ஒரு காவல் அலுவலர் மூலம் விசாரணை செய்யப்பட்ட வழக்கின் முடிவு மீது  சந்தேகம் வந்தால், அந்த வழக்கை மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிட காவல் வட்ட ஆய்வாளர் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. அல்லது அவரே அந்த வழக்கை  விசாரணை செய்யலாம்.

காவல் நிலை ஆணை எண்:662

விசாரணை செய்கின்ற வழக்கு திட்டமிட்ட பொய் வழக்கு என்று ஆய்வு அறிக்கையின் மூலம் காவல் வட்ட ஆய்வாளர் அவர்கள் முடிவு செய்தால், அந்த வழக்கைத் தொடுத்த மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க எண்ணுகிறாரா? இல்லையா? என்பதை  அந்த அறிக்கையில் முடிவில் தெரிவிக்க வேண்டும். அப்படி முடிவெடுக்காவிட்டால், ஏன் நடவடிக்கை எடுக்க எண்ணவில்லை? என்ற காரணங்களை தெரிவிக்க வேண்டும்.

காவல் நிலை ஆணை எண்:663

”பொய்யான தகவல்களைக் கொடுத்து ஒருவர் மீது வழக்குத் தொடுப்பது” இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 182 மற்றும் பிரிவு 211 ன் கீழ் தண்டணைக்குரிய குற்றமாகும்.  இந்தப் பிரிவுகளின் கீழ் காவல் வட்ட ஆய்வாளர் அவர்கள் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் அல்லது மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரின் உத்தரவு இல்லாமல், ஒருவர் மீது வழக்குத் தொடுக்கக் கூடாது.

காவல் நிலை ஆணை எண்:664

கொடுக்கப்பட்ட பணியில் செய்த குற்றங்களுக்காக, ஊரகப் பகுதியிலுள்ள  அரசுப் பணியாளர்களின் மீது  வழக்குத் தொடுப்பதாக இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். சென்னை மாநகராக இருந்தால், அந்தத் துறைத் தலைவரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.

காவல் நிலை ஆணை எண்:668

விசாரணை செய்கின்ற வழக்குகளை, பொய் வழக்கு என்று காவல்துறை ஆய்வாளர் அவர்களால் அறிக்கை செய்யப்பட்டிருந்து, அந்த அறிக்கையானது நடுவருக்கு மனநிறைவை கொடுக்காவிட்டால்,     குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 190 ன் கீழ், தானாகவே நடவடிக்கை எடுக்க நடுவருக்கு அதிகாரம் உண்டு.