Wednesday, October 4, 2023

0082. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தவறான சட்டப் பிரிவுகளின் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறி மனுக்களை தள்ளுபடி செய்யக்கூடாது

 தவறான சட்டப் பிரிவை போட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதற்காக அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ய முடியுமா? 


நடைமுறைகள் அல்லது விதிகள் (The Procedures or Rules)  என்பவை நீதிப் பரிபாலனம் செய்வதற்கு உதவி செய்கிற உதவியாளர்களே தவிர நீதி பரிபாலணத்தின் எஜமானர்கள் அல்ல என உச்சநீதிமன்றம் "ஜெனரல் இன்ஸ்ட்ரூமென்ட் கம்பெனி Vs மத்திய அரசு (2008-2-SCC-775)"  என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. எப்பொழுதெல்லாம் ஒரு மனு தாக்கல் செய்யப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் மனுவை பெறுகிற பிரிவில், இந்த மனு எந்தப் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படுகிறது என்கிற வினா தவறாமல் கேட்கப்படுகிற ஒன்றாக இருக்கிறது. எந்தச் சட்டப் பிரிவு அல்லது நிபந்தனையின்படி அந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடப்பட்டிருந்தால் தான் அந்த வழக்கிற்கு அது ஒரு கலங்கரை விளக்கு போல் வழிகாட்டும் என்பது போல் அந்த கேள்வி கேட்கப்படுகிறது. 


அதேபோல் ஒரு மனு திருப்பப்படுகின்ற பொழுது அந்த மனுவை தாக்கல் செய்தவர்கள் தரப்பில் எந்த சட்டப் பிரிவின் கீழ் இந்த மனு திருப்பப்படுகிறது என்கிற கேள்வியும் தவறாமல் கேட்கப்படுகிறது. இதுபோல் ஒரு மனு திருப்பப்படுவதும், திரும்ப தாக்கல் செய்யப்படுவதும் போன்ற நடவடிக்கைகளால் வழக்காடிகளின் நேரமும், சக்தியும் விரையமாக்கப்படுகிறது. நீதிமன்றம் ஒரு சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு பதிலாக வேறு மாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதை ஊக்குவிப்பதாக இச்செயல் அமைகிறது. 


எப்பொழுதெல்லாம் ஒரு மனு தாக்கல் செய்யப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அந்த மனுவை ஏற்றுக்கொள்வதற்கு சட்டப்படி முடியுமா என்கிற வினா நீதிமன்றத்தின் மனதில் எழுகிறது. 


நீதிமன்றத்தின் அதிகாரத்திற்குள் ஒரு உத்தரவு அளிப்பதற்கு தடை எதுவும் இல்லாத நிலையில், ஒரு நீதிமன்றத்தில் ஒரு உத்தரவினை பிறப்பிப்பதற்கு நீதிமன்றத்தால் எந்த தடையும் இல்லாதிருக்கும் போது அதுகுறித்து தெளிவான நிலை இல்லாதபோதும், அத்தகைய உத்தரவு நீதியின் பால் அல்லது நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக ஒரு நீதிமன்றம் பிறப்பிக்கலாம் என " ராஜ் நாராயண் சக்சேனா Vs வின்சென்ட் மற்றும் பலர் (AIR-1966-ALL-84)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. 


அதேபோல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு " நர்சிங் தாஸ் Vs மங்கல் துபே (1882-ILR-5-ALL-163-FB) என்ற வழக்கில், நீதிமன்றங்கள் உரிமையியல் நடைமுறைச் சட்டத்தில் கூறப்படாத ஒரு விஷயம் தடை செய்யப்பட்டதாக கருதக்கூடாது. ஆனால் சட்டத்தின் படி தடை செய்யப்படாத வரை அந்த நெறிமுறை அனுமதிக்கப்பட்ட ஒன்று என்று கருத வேண்டும். பொதுவான நெறிமுறை என்னவென்றால் தடை செய்யப்பட்டுள்ளது என அனுமானிக்கக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. 


அதேபோல் " சாமா பட்டர் Vs அப்துல் கதிர் ரவுத்தன்" என்ற வழக்கில், உரிமையியல் நடைமுறைச் சட்டத்தில் ஒரு விஷயம் குறித்து தெளிவாக, விவரமாக கூறப்படாத நிலையில் நீதிமன்றங்கள் நீதியின் பால் அல்லது நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக எந்த வகையான உத்தரவுகளையும் பிறப்பிக்கலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது. 


மேலே சொல்லப்பட்ட தீர்ப்புகளில் ஒவ்வொரு நடைமுறையும் அனுமதிக்கப்பட்ட ஒன்று என கருத வேண்டுமேயொழிய தடை செய்யப்பட்டவை என்று கருதக்கூடாது எனவும், தடை செய்யப்பட்டுள்ளது என்று அனுமானிக்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. நடைமுறைகள் என்பவற்றை பொதுவான வழிகாட்டும் முறைகளாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டுமேயொழிய வழக்காடிகளின் உரிமைகளை பாதிக்கும் வகையில் அவற்றை பயன்படுத்தக்கூடாது. நடவடிக்கைகளில் ஒரு ஒழுங்கை, ஒரு முறையை ஏற்படுத்தியிருப்பது நீதிமன்றம் வழக்குகளை எளிதாக நடத்துவதற்கு உதவுகிற நோக்கத்தில் தானேயொழிய வழக்காடிகளுக்குள்ள உரிமைகளை தடுப்பதற்கான நோக்கத்தில் அல்ல. 


எனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தவறான சட்டப் பிரிவுகளின் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறி மனுக்களை தள்ளுபடி செய்யக்கூடாது. ஒரு மனுவில் தவறான சட்டப் பிரிவு குறிப்பிடப்பட்டிருந்தாலும் நீதிமன்றம் சரியான சட்டப் பிரிவை குறிப்பிட்டு அந்த மனுவை விசாரித்து தீர்மானிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. 


CRP. NO - 30/2012, 


சஹார்பந்த்பீவி Vs S. மும்தாஜ் 


2013-2-CTC-394

0081. போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது!

முக்கியச் செய்தி

போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது!

பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு இழந்த சொத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கலாம்! நிலத் தகராறு, 

பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்.


நீங்கள் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 


எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு, 

உங்கள் நண்பர்களுக்கு தகவலை தெரிவிக்கவும்.


(Land Disputes)


1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது 

பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.


நில நிர்வாக ஆணையர் - கடித எண் - K3/27160/2018, dt - 13.3.2018


சென்னை உயர்நீதிமன்றம் - W. P. No - 24839/2014, dt - 16.7.2018

W. P. No - 491/2012, dt - 4.6.2014

W. P. No - 16294/2012, dt - 4.4.2014


2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால், 

அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும். 

மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.


S. A. No - 313 & 314/2008, dt - 11.2.2019


3. விஏஓக்கள் திருட்டுத்தனம் குறித்து ஆய்வு செய்ய,

ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். 

தவறு செய்யும் விஏஓக்களை 

பணி நீக்கம் செய்ய வேண்டும்.


W. P. No - 13916/2019, dt - 1.7.2019


4. சொத்தின் உரிமையாளர் யார் என்பதை 

வருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது. 

உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.


W. P. No - 18489/2009, dt - 1.7.2011


5. பட்டா உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. 

பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.


S. A. No - 84/2006, dt - 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்


6. பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. 

பட்டாவை வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.


S. A. No - 2060/2001, dt - 2.11.2012

S. A. No - 1715/1989, dt - 25.6.2002

W. P. No - 16294/2012, dt - 3.4.2014


7. கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. 

நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு 

பட்டா வழங்க வேண்டும்.


Madras High Court

W. P. No - 18754, 20304, 2613/2005

DT - 4.11.2013

 A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 - 3 - CTC - 270)

The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 - 2 - CTC - 315)


8. பட்டா பெயர் மாற்றம் செய்ய 

நீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும். 

W. P. No - 19428/2020, dt - 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others) 


9. போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை

பணி நீக்கம் செய்ய வேண்டும். 


W. P. No - 11279/2015, dt - 22.3.2019, madurai high court 


10. பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியா் 

பட்டா மாற்றம் செய்ய முடியாது. ஆனால், கோட்ட ஆட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.


T. R. தினகரன் Vs RDO (2012 - 3 - CTC - 823)

அம்சவேணி Vs DRO மதுரை. W. P No - 16294/2012...


கடந்த பல ஆண்டுகளாக, சென்னை உயர்நீதிமன்றம், தில்லி உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் வழங்கிய, இதுபோன்ற தீர்ப்புகளை,  பதிவுகளை

 

மக்களுக்கு விழிப்பு உணர்வு

ஏற்படுத்துங்கள்

இந்திய வழக்கறிஞர் சங்கம் 

Tuesday, September 12, 2023

0080. பிரிட்டிஷார் Vs. பிராமணர்கள்

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும்,*


 *சத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும்,*


 *வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும்,*


 *சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த,*

* *பிராமணர்களின் மனுதர்மச் சட்டத்தை,** 


 * பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,*


*சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்,*


 *1773 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசு,  பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.*


*சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை,*


*1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை,*

 *வெள்ளையர்களால்  வழங்கப்பட்டது.*


*1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை,*

* வெள்ளையரால்  வெளியிடப்பட்டது.*


*1813 ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம்,*

* வெள்ளையரால்  கொண்டுவரப்பட்டது.*


*பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன்  கொல்லப்பட வேண்டும் என்ற* 

 *பிராமணர்கள் மனுசாஸ்திர  சட்டம் VII 374, 375),** 

*வெள்ளையர்களால் நீக்கப்பட்டது.*


*ஒரு பிராமணன்,  காம ஆசை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம்.*


 ஆனால், 

*அதன் *விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால்,*

*அது பிணம் போன்றதே ஆகும்.*

*( பிராமணர்  மனுசாஸ்திர சட்டம்*

*IX 178). **இந்த மனுசாஸ்திர சட்டத்தையும்* ,

 *வெள்ளையர்களே நீக்கினர்.** 


*பிராமணன் தப்பு செய்தால் தண்டனை இல்லாமல் இருந்த நிலையில்,*

*பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின்,** 

 *அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை,*

*1817 ஆம் ஆண்டு  பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது*


*சூத்தரப் பெண் திருமணம் முடிந்த அன்றே,*

 * *பிராமணருக்கு பணிவிடைகள் செய்ய** 

*7 நாள்கள் கோவிலில்?*


 *இருக்க வேண்டும் என்ற கொடுமை,*

 * பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம்*

*1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.*


*பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த பிராமண இனவெறி மனு சாஸ்திர  சட்டத்தை,*

*1835 ஆம் ஆண்டு  Lord மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக,*

 *சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.*


*சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டுக் கொலைசெய்ய  வேண்டும் என்ற கங்காதானம் என்ற பயங்கரவாதம்,*

 *1835-ல்  பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.*


*1835 ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை  வெள்ளையர்களால் கொண்டு வரப்பட்டது.*


*1868 ஆம் ஆண்டு  பிரிட்டிஷ் அரசாங்கம்,*

*பிராமண மனுசாஸ்திர  சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது* .*





முலை வரி கொடுமை, மீசை வரி கொடுமை , துண்டு வரி கொடுமை, தங்கதாலி வரி கொடுமை, தெய்வகுற்ற நரபலி கொடுமை, பனை வரி கொடுமை, உடன்கட்டை ஏறுதல் என்ற பல பெண் வன் கொடுமைகளை நீக்கி சட்டம் இயற்றி பிராமணர் அல்லாதோர்க்கு  ஆங்கில அரசின்  முயற்சியால் பிற்காலத்தில் 19 ஆம் நூற்றாண்டு இறுதியில் இவை எல்லாம்  தடை செய்யப்பட்டது. அங்கு ஆண்களுக்கு மீசை வரியும் உயர் சாதியினர் தவிர எல்லோரிடமும் வசூலிக்கப்பட்டது. ... இதனால் தான் சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுதும் சுற்றுப்பிராயணம் செய்த பின்னர், இந்தியாவை  "Mad asylum of caste " என கண்டித்தார்.

இந்தியாவை மட்டும் *பிரிட்டிஷார்கள் ஆளவில்லை என்றால்,*  திராவிடர் தமிழர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருக்கும்.


அப்படி

போயிருந்தால்,

 "ஜோதிராவ் புலே"வுக்கு கல்வி கிடைத்திருக்காது.

இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது.


அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவப் பணியும் கிடைத்திருக்காது,

இவையெல்லாம் இல்லாமல் போயிருந்தால் அம்பேத்கர் இல்லை.


 அம்பேத்கர் இல்லை என்றால் BC,MBC & SC ஆகிய நாம் இல்லை.


சூத்திர பஞ்சமனின் அடிமைச் சங்கிலியை உடைத்த *பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகள் பாராட்டுதலுக்குரியதே!!!* 


*(ஆதாரம்:*


*தினமணி 25-2-2007)*

Tuesday, February 7, 2023

000079. Confession letter before suicide attempt is not a ground to punish the lover u/s. 306 of IPC

 ⚫ *எனது தற்கொலைக்கு இவர்தான் காரணம் என்று கூறி ஒருவர் எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபருக்கு தண்டனை அளிக்கமுடியுமா?*


▪ *மணிகண்டன் என்பவரும் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர்.*


▪ சில நாட்களில் மணிகண்டனின் காதல் மீது ரேகாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 


▪அதனால் ரேகா, மணிகண்டனை தவிர்த்து வந்துள்ளார். 


▪இந்நிலையில் 9.12.2011 ஆம் தேதி ரேகா தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 


▪அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 


▪ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மறுநாள் இறந்து விட்டார். உடனடியாக ரேகாவின் தந்தை ஒரு புகாரை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174 ன் கீழ் "சந்தேக மரணம்" என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.


வழக்கை இன்ஸ்பெக்டர் விசாரித்து சம்பவ இடத்தில் பிளாஸ்டிக் கேன் மற்றும் சில முக்கிய பொருட்களை கைப்பற்றினார். ரேகாவின் உடலை பிரேத ப‌ரிசோதனை‌ செய்து, அந்த அறிக்கையையும், மருத்துவர்களின் வாக்குமூலங்களையும் பெற்றார். இந்நிலையில் ரேகாவின் தந்தை தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது பெண் ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளார் என்று கூறி ஒரு கடிதத்தை இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். அதனை பரிசீலித்த இன்ஸ்பெக்டர் சட்டப்பிரிவை மாற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 ன் கீழ் FIR பதிவு செய்தார். மேலும் ரேகாவின் கையெழுத்துகள் மற்றும் நோட்டுப் புத்தகங்களை பெற்று அவைகளை கடிதத்துடன் ஒப்பிட்டு பார்க்க கையெழுத்து நிபுணருக்கு அனுப்பி வைத்தார். அவைகளை பரிசோதித்த கையெழுத்து நிபுணர் கடிதத்தில் உள்ள கையெழுத்து ரேகாவுடையதுதான் என்று ஒரு அறிக்கையை இன்ஸ்பெக்டரிடம் அளித்தார். இறுதியாக மணிகண்டன் ரேகாவை தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டு இறுதியறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.


வழக்கு விசாரணையின் போது ரேகாவின் தந்தை, தாய், சகோதரி மற்றும் அவரது கணவர் ஆகியோர்கள் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டனர். அவர்கள் ரேகா வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் சாட்சி கூறினர். ஆனாலும் அரசு ரேகா எழுதிய கடிதத்தை முக்கிய ஆதாரமாக வைத்து வாதாடியது.


இறுதியாக விசாரணை நீதிமன்றம் ரேகாவின் கடிதத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.


அந்த தீர்ப்பை எதிர்த்து மணிகண்டன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.


வழக்கை நீதிபதி திரு. P. தேவதாஸ் விசாரித்தார்.


இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 ஆனது தற்கொலைக்கு உடந்தையாக இருக்கிற எவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று கூறுகிறது. ஆனால் இந்த சட்டப் பிரிவின் கீழ் ஒருவருக்கு தண்டனை அளிப்பதற்கு முன்பாக கீழ்கண்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.


1. ஒருவர் தற்கொலை செய்திருக்க வேண்டும்


2. தற்கொலைக்கு ஒருவர் உடந்தையாக இருக்க வேண்டும்


இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 107 ல் உடந்தையாக இருத்தல் என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரிவு 306 ல் உடந்தைக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை.


"உடந்தையாயிருத்தல் " என்கிற குற்றச் செயலில் ஈடுபட்டதற்கு குற்றமனம் இருக்க வேண்டும். மற்றொருவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு, அந்த செயலை செய்வதற்கு உடந்தையாக இருக்க வேண்டும். பொதுவாக பேச்சுவாக்கில் கூறப்படும் வார்த்தைகளையும், உடந்தையாயிருத்தல் என்கிற பொருளில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. தற்கொலை செய்து கொள்கிற நபர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதப்பட்ட கடிதத்தில் ஒருவருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிற காரணத்தால் அந்த நபர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 ன் கீழான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்கிற முடிவிற்கு உடனடியாக வந்து விடக் கூடாது.


கடிதத்தில் கூறப்பட்டுள்ளவற்றையும் அந்த சம்பவம் நடைபெற்றுள்ள சூழ்நிலைகளையும் ஒப்பிட்டு பார்த்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 மற்றும் பிரிவு 107 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவாறு "உடந்தையாயிருத்தல் " என்கிற செயல் நடைபெற்றுள்ளதா? என்பதை ஆராய வேண்டும். தான் தற்கொலை செய்து கொள்வதற்கு இவர்தான் காரணமாய் இருந்தார் என்று தற்கொலை செய்து கொண்டவரால் எழுதி வைக்கப்பட்டிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்த வழக்கை முறையாக ஆராய்ந்து பார்த்தால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 ன் கீழான குற்றச் செயல் நடைபெற்றிருப்பதாக முடிவு செய்ய இயலாது.


சென்னை உயர்நீதிமன்றம் " இராஜமன்னார் Vs ஆய்வாளர், செவ்வாய் பேட்டை காவல் நிலையம், திருவள்ளூர் மாவட்டம் (CRL. OP. NO - 8230/2014 என்ற வழக்கில் 3.4.2014 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 ன் கீழான குற்றச் செயலுக்கு இரண்டு காரணிகள் இருக்க வேண்டும். அவை தற்கொலைக்கு உடந்தையாக ஒருவர் இருந்திருக்க வேண்டும். ஒருவர் தற்கொலை செய்திருக்க வேண்டும். தற்கொலை என்றால் என்ன என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் "உடந்தையாயிருத்தல்" குறித்து தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நபரை சில செயல்களை செய்யும்படியோ அல்லது செய்யாமல் இருக்கும்படியோ தூண்டி விடுவதுதான் உடந்தையாயிருத்தல் என்பதற்கான விளக்கம் ஆகும். அவ்வாறு ஒருவரை தூண்டி விடும் செயலானது வார்த்தைகள், செயல்கள் அல்லது எழுத்துக்கள் மூலமாகவும் இருக்கலாம். மற்றவர்கள் முன்பு ஒருவரை அவமானப்படுத்தியதாகவும் கூட இருக்கலாம். எனவே ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கான முடிவினை எடுப்பதற்கு எதிரி முக்கிய பங்கை ஆற்றியிருக்க வேண்டும்.


காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வது, பரிட்சை சரியாக எழுதாததால் தற்கொலை செய்து கொள்வது, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் கட்சிக்காரர தற்கொலை செய்து கொள்வது போன்ற தற்கொலை சம்பவங்களில் காதலித்த பெண், தேர்வாளர், வழக்கறிஞர் போன்ற நபர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு உடந்தையாக இருந்ததாக கருத முடியாது. ஒரு நபர் கோழைத்தனமாக, முட்டாள்தனமாக, பலவீனமான மனநிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டால் அதற்காக மற்றொரு நபர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சுமத்த முடியாது. என்று தீர்ப்பு கூறியுள்ளது.


இறந்து போன ரேகாவுக்கும், மணிகண்டனுக்கும் இடையில் காதல் பிரச்சினை இருந்துள்ளது. அந்த காதல் ஒருதலை காதலாகும். மணிகண்டன் ரேகா மீது ஏற்பட்ட காதலை புதுப்பித்துக் கொள்வதற்காக தொடர்ந்து போன் செய்துள்ளார். ரேகாவை நிம்மதியாக மணிகண்டன் வாழ விட மாட்டார் என்று கருதி வாழ்க்கையை முடித்துக் கொள்ள தீர்மானித்ததாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த முடிவை தான் எடுக்க மணிகண்டன் தான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.


தற்கொலை செய்து கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் படி ஒரு குற்றம் இல்லை. ஆனால் தற்கொலைக்கு தூண்டுவது பிரிவு 306 ன்படி குற்றமாகும். ஆனால் தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல் என்ற செயலை நிரூபிக்க தற்கொலை நடந்திருக்க வேண்டும். மேலு‌ம் அந்த தற்கொலைக்கு எதிரி உடந்தையாக இருந்ததாகவும் நிரூபிக்க வேண்டும். தற்கொலை செய்து கொள்வது, தற்கொலை செய்து கொண்ட நபரின் விருப்பமாக இல்லாமல், அந்த நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது எதிரியின் விருப்பமாக இருக்க வேண்டும். ஒரு நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு எதிரி செயல்பட்டிருக்க வேண்டும். அந்த செயல் வார்த்தைகளாகவோ, கடிதம் மூலமாகவோ நடைபெற்றிருக்கலாம். அதேசமயம் மிகவும் பலவீனமான மனநிலை கொண்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அதனை அவர் தூண்டி விட்டதாக கருதுவது தவறு. ஒருவருடைய முட்டாள்தனமான செயலுக்காக மற்றொரு நபரை பொறுப்பாளியாக ஆக்க முடியாது.


இதே கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் " மணி Vs ஆய்வாளர், கிண்டி காவல் நிலையம், சென்னை (2014-3-MLJ-CRL-18)" என்ற வழக்கில் தீர்ப்பாக கூறியுள்ளது.


மேற்கண்ட தீர்ப்புகளின் அடிப்படையில் ரேகா எழுதிய கடிதத்தை உண்மை என்று வைத்துக் கொண்டாலும் கூட மணிகண்டன் ரேகா தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டும் என்று நினைக்கவில்லை, அவருக்கு குற்ற மனம் இல்லை எனவே மணிகண்டனை தண்டிக்க முடியாது என்று கூறி அவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.


மதுரை உயர்நீதிமன்றம்


CRL. A. NO - 142/2016


DT - 16.6.2016


Manikandan Vs Inspector, Tirunellakkudi police station, Thanjavur District


2016-4-MLJ-CRL-240

2016-3-CRIMES-143

Tuesday, January 24, 2023

000078. NDPS Act பிரிவு 37 இன் விளக்கம்

NDPS (என்.டி.பி.எஸ்)

1985 ஆம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம் பிரிவு 37 இன் விளக்கம்:


போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம், 1985 (NDPS சட்டம்) நாட்டில் மருந்துகள் தொடர்பான விதிகளை நிர்வகிக்கிறது. 


இந்தச் சட்டம் 83 பிரிவுகள் மற்றும் ஆறு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இது தண்டனை தொடர்பான விதிகளை வகுக்கிறது மற்றும் மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வழங்குகிறது.


 சமீபத்தில், என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் ஜாமீன் வழங்கும்போது தாராளவாத அணுகுமுறையைக் கடைப்பிடிக்க முடியாது என்று மாண்புமிகு உச்ச நீதிமன்றம் கூறியபோது இந்தச் சட்டத்தின் பிரிவு 37 வெளிச்சத்துக்கு வந்தது . 

இந்த பகுதியை இன்னும் விரிவாக ஆராய்ந்து அதை விளக்குவோம். 


NDPS சட்டத்தின் பிரிவு 37

என்டிபிஎஸ் சட்டத்தின் பிரிவு 37 இந்த சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கான விதிகளை வகுத்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் அறியக்கூடியவை மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாதவை. இந்த சட்டத்தின் கீழ், பின்வரும் விதிகள் வகுக்கப்பட்டன-



இந்தச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்கள் அறியக்கூடியவை, அதாவது, காவல்துறை எந்த உத்தரவும் இல்லாமல் கைது செய்யக்கூடிய குற்றமாகும். 

இந்தச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்கள் ஜாமீனில் வெளிவர முடியாதவை, அரசு வழக்கறிஞர் விண்ணப்பத்தை எதிர்க்க அனுமதிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுவார் என்று நீதிமன்றம் திருப்தி அடையும் வரை.

இந்த குறிப்பிட்ட பிரிவில் ஜாமீன் தொடர்பான விதிகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC),1973 இன் கீழ் விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு கூடுதலாக உள்ளன .

நீதிமன்றங்கள் மூலம் விளக்கம்


கேரள மாநிலம் மற்றும் Ors. v. ராஜேஷ் மற்றும் ஓர்ஸ். (2020)

இந்த வழக்கில் , ஹஷிஷ் ஆயில் கடத்திய குற்றவாளி ஒருவரை கலால் வட்ட ஆய்வாளர் கைது செய்தார். குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரியிருந்தார். விசாரணை நீதிமன்றம் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்தது மற்றும் NDPS சட்டத்தின் பிரிவு 37 இன் கீழ், அவர் குற்றவாளி என்பதற்கு முதன்மையான ஆதாரம் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறியது. உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்து, என்டிபிஎஸ் சட்டத்தின் 37வது பிரிவை கவனிக்காமல், அவருக்கு ஜாமீன் வழங்கியது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வு தவறானது என்று கூறியது. 'நியாயமான காரணங்கள்' என்ற வார்த்தையின் அர்த்தம் 'முதன்மையான காரணங்களை விட அதிகம்' என்று நீதிமன்றம் கூறியது. உயர் நீதிமன்றம் மிகவும் தாராளவாத அணுகுமுறையை எடுத்துள்ளது என்றும் என்டிபிஎஸ் சட்டத்தின் பிரிவு 37 ஐ கவனிக்கவில்லை என்றும் அது கூறியது. 


யூனியன் ஆஃப் இந்தியா v. தாமிசரசி அண்ட் ஆர்ஸ்., (1995) 

இந்த வழக்கில் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (சிஆர்பிசி) பிரிவு 167 மற்றும் என்டிபிஎஸ் சட்டத்தின் பிரிவு 37 ஆகியவை ஒன்றுக்கொன்று முரண்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது . சிஆர்பிசியின் 167வது பிரிவின் கீழ் ஜாமீன் வழங்குவது தானாகவே இருக்கும் போது, ​​அதாவது, புகார் பொதுவாகப் பதிவு செய்யப்பட வேண்டிய அதிகபட்ச காலத்திற்குள் புகார் செய்யப்படாதபோது, ​​என்டிபிஎஸ் சட்டத்தின் பிரிவு 37 இன் கீழ் வரம்புகள் ஈர்க்கப்படாது. இந்த வழக்கு பிரிவு 143 க்கு இடையிலான வேறுபாட்டையும் வெளிப்படுத்தியதுCrPC மற்றும் NDPS சட்டத்தின் பிரிவு 37. பிந்தையது மிகவும் கடுமையான விதி என்று அது கூறியது. பிரிவு 37ன் கீழ், CrPC-யின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்கும் பொறுப்பு, குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையாகவே குற்றவாளி என்பதை நிரூபிக்கும் பொறுப்பு வழக்கறிஞரின் மீது உள்ளது, எனவே அவருக்கு ஜாமீன் வழங்கப்படக்கூடாது. 


சத்பால் சிங் எதிராக பஞ்சாப் மாநிலம், (2018)

இந்த வழக்கில் , மாண்புமிகு உச்சநீதிமன்றம், போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில், என்டிபிஎஸ் சட்டத்தின் 37-வது பிரிவைக் கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியது. பிரிவு 37 ஐப் புறக்கணிப்பதன் மூலம் CrPC இன் கீழ் தொடர்புடைய விதிகளைப் பயன்படுத்த முடியாது. இந்த வழக்கில், CrPC இன் பிரிவு 438 மற்றும் 439 ஐ மனதில் வைத்து மாண்புமிகு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது . என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் வழக்குகளைக் கையாளும் போது உரிய விடாமுயற்சியையும் விழிப்பையும் காட்ட வேண்டும் என்று காவல்துறை மற்றும் வழக்கறிஞருக்கு நீதிமன்றம் நினைவூட்டியது.


தி ஸ்டேட் (ஜிஎன்சிடி) தில்லி எதிர் லோகேஷ் சாதா,(2021)

இந்த நிலையில் , ஒரு அலுவலகத்தில் இருந்து குறிப்பிட்ட சில பார்சல்களில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருந்ததால் பறிமுதல் செய்யப்பட்டது. பிரதிவாதி கைது செய்யப்பட்டார். விசாரணை நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது, ஆனால் உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. ஜாமீன் வழங்குவதற்கு வலுவான வலுவான காரணங்கள் இருக்க வேண்டும் என்றும், அத்தகைய காரணம் எதுவும் இல்லாததால், இந்த வழக்கில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 


பிரிவு 37 செயல்படுத்தப்படும் குற்றங்கள்

NDPS சட்டத்தின் V அத்தியாயம் குற்றங்கள் மற்றும் தண்டனைகளுக்கான ஏற்பாடுகளை வழங்குகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் அனைத்து குற்றங்களும் அதே சட்டத்தின் 37வது பிரிவின் கீழ் அடையாளம் காண முடியாத குற்றங்களாக இருக்கும். இந்த சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்கள் பின்வருமாறு-


சட்டத்தின் பிரிவு 25, கிடங்கு கசகசா (ஒரு மருந்து) பயன்பாடு, கொள்முதல், விற்பனை, போக்குவரத்து, இறக்குமதி அல்லது ஏற்றுமதி ஆகியவற்றிற்கான தண்டனைகளை வழங்குகிறது. இந்த சட்டத்தின் கீழ் தண்டனைகள் கசகசா வைக்கோலின் அளவைப் பொறுத்து மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.


சட்டத்தின் பிரிவு 16, கோகோ இலைகளின் பயன்பாடு, கொள்முதல், விற்பனை, போக்குவரத்து, இறக்குமதி அல்லது ஏற்றுமதிக்கான தண்டனை நோக்கங்களை வழங்குகிறது. 


பிரிவு 17 தயாரிக்கப்பட்ட அபின் தொடர்பான குற்றங்களுக்கான தண்டனைக்கான விதிகளை வகுக்கிறது,


 பிரிவு 18 அபின் மற்றும் கசகசாவிற்கு தண்டனை விதிகளை வழங்குகிறது.


 சட்டத்தின் பிரிவு 19 அபின் தொடர்பான குற்றங்களுக்கான விதிகளையும் வகுத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பயிரிடுபவர்கள் யாரேனும் சட்டவிரோதமாக அபின் வியாபாரம் செய்தால், அவருக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாத மற்றும் 20 ஆண்டுகளுக்கு மிகாமல் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.


பிரிவு 20 கஞ்சா தொடர்பான குற்றங்களைச் செய்பவர்களை தண்டிக்க முயன்றது. இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் அவர்கள் கையாளும் அளவு அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்தின் பிரிவு 21 உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகளை கையாள்பவர்களுக்கு தண்டனை விதிகளை வழங்குகிறது. தயாரிக்கப்பட்ட மருந்துகள் அல்லது அதைக் கொண்ட வேறு ஏதேனும் பொருளைக் கையாள்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

பிரிவு 22 மற்றும் பிரிவு 23 போதைப்பொருள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் தொடர்பான குற்றங்களைக் கையாளுகின்றன. பிரிவு 22 சைக்கோட்ரோபிக் பொருட்களுடன் தொடர்புடைய பிற குற்றங்களுக்கு தண்டிக்கும் அதே வேளையில், பிரிவு 23 குறிப்பாக அத்தகைய மருந்துகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான தண்டனையை வழங்குகிறது.

போதைப்பொருள் உட்கொள்பவர்களை தண்டிக்கவும் சட்டம் தீர்மானிக்கிறது. சட்டத்தின் பிரிவு 27 தண்டனைக்கான விதிகளை வகுத்துள்ளது. உட்கொண்ட போதைப்பொருள் கோகோயின், மார்பின், டயசிடைல்-மார்ஃபின் அல்லது வேறு ஏதேனும் போதைப்பொருள் அல்லது சைக்கோட்ரோபிக் பொருளாக இருந்தால், 1 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது 2000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இந்த பொருட்களைத் தவிர வேறு உட்கொண்ட பொருள் இருந்தால், 6 மாத சிறைத் தண்டனை அல்லது பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். மேலும், போதைப்பொருளில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் நிதியுதவி அல்லது அடைக்கலம் கொடுப்பவர் பிரிவு 27-A இன் கீழ் தண்டிக்கப்படுவார் . 

இதேபோல், என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் முயற்சி, தூண்டுதல், குற்றச் சதி மற்றும் குற்றத்தைச் செய்யத் தயாரானதற்கு தண்டனைகள் உள்ளன. குற்றத்திற்கு ஐந்தாண்டுகள் தண்டனை அல்லது ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய தண்டனையாக இருந்தால் மட்டுமே சட்டத்தின் பிரிவு 37 ஈர்க்கப்படுகிறது என்று நீதிமன்றங்கள் கருதுகின்றன. ஏ.வி.தர்ம் சிங் எதிராக கர்நாடகா மாநிலம், (1992) மாண்புமிகு கர்நாடகா உயர்நீதிமன்றம், சட்டமியற்றும் நோக்கமானது குற்றங்களுக்கு பிரிவு 37ஐ ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையுடன் செயல்படுத்துவதாகும், எனவே அதையே பின்பற்ற வேண்டும். விதிகளில் ஒரு தெளிவின்மை உள்ளது மற்றும் ஐந்து ஆண்டுகள் தண்டனை என்பது குறைந்தபட்சம் ஐந்தாண்டு தண்டனையா அல்லது ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய தண்டனையா என்ற கேள்வியை நீதிமன்றங்கள் சமாளிக்க வேண்டியிருந்தது. இல்பீட்டர் எதிராக கேரளா மாநிலம், (1993) கேரள உயர் நீதிமன்றம், பிரிவு 37 (பி) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையை குறைந்தபட்ச தண்டனையாக ஐந்து ஆண்டுகள் படிக்க முடியாது என்று கூறியது. 


புதிய சட்ட வரைவு

பிரிவு 37ன் கீழ் ஜாமீன் வழங்குவதற்கான கோட்பாடுகள் 

NDPS ACT, 1985 இன் பிரிவு 37 இன் படி, குற்றம் சாட்டப்பட்டவர் திருப்தி அடையும் வரையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது:


குற்றம் சாட்டப்பட்டவர் அத்தகைய குற்றத்தில் குற்றவாளி அல்ல என்று நம்புவதற்கான நியாயமான காரணம். 

குற்றம் சாட்டப்பட்டவர் மீதான கூடுதல் சுமை என்னவென்றால், ஜாமீன் வழங்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்யமாட்டார் அல்லது குற்றம் செய்ய வாய்ப்பில்லை.

மாண்புமிகு உச்ச நீதிமன்றம் , இந்திய யூனியன் எதிர் சிவ சங்கர் கேசரி,(2007) வழக்கில் NDPS சட்டத்தின் 37வது பிரிவின் கீழ் ஜாமீன் வழங்கும் போது பின்பற்ற வேண்டிய ஒரு அணுகுமுறையை வகுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி இல்லை என்று கூறும் பதிவுகளை நீதிமன்றம் பார்க்காமல், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி அல்ல என்பதைச் சுட்டிக்காட்டும் நியாயமான காரணங்களைக் கண்டறிந்து ஜாமீன் வழங்குவதற்கான முடிவை எடுக்க வேண்டும். எனவே, ஒரு நீதிமன்றம் விதிகளை கவனித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை முடிவு செய்ய வேண்டும். 


NDPS சட்டத்தின் பிரிவு 37 மற்றும் பிற இந்திய சட்டங்களுக்கு இடையிலான முரண்பாடு

மற்ற இந்திய சட்டங்களின் கீழ் ஜாமீன் என்பது விதியாக இருந்தாலும், என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் ஜாமீன் என்பது விதிவிலக்கு. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19 சுதந்திரம் மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையை நமக்கு வழங்குகிறது, அதே நேரத்தில் NDPS சட்டத்தின் பிரிவு 37 (2) அதைக் கட்டுப்படுத்துகிறது. இந்த பிரிவின் கீழ், சில கண்டிப்பான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வரை, குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் விடுவிக்க முடியாது. என்டிபிஎஸ் சட்டத்தின் இந்தப் பிரிவின் கீழ் ஜாமீன் என்பது விதிவிலக்காகும், அதே சமயம் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் ஜாமீன் என்பது ஒரு விதி. 'ஒரு விதிவிலக்காக ஜாமீன்' என்ற இந்த விதி, பிரிவு 19 இன் ஆவிக்கு எதிராக இந்தப் பிரிவைச் செய்கிறது. மாண்புமிகு பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம், அங்குஷ் குமார் எதிராக பஞ்சாப் மாநிலம், (2018) வழக்கில் இந்த பிரிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கேள்வி எழுப்பியது. இந்த கேள்வியை நீதிமன்றம் கையாளவில்லை, ஏனெனில் அவ்வாறு செய்ய அதிகாரம் இல்லை. எனவே, சிஆர்பிசியின் 239வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு முன் என்டிபிஎஸ் சட்டத்தின் 37வது பிரிவின் கீழ் உள்ள விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது . இந்த பிரிவின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது, ஆனால் இன்னும், இதில் ஒருமித்த கருத்து இல்லை.


ஜாமீன் விதிவிலக்காக இருக்கும் பிற சட்டங்கள்

NDPS சட்டத்தின் 37வது பிரிவைத் தவிர, பல குற்றங்கள் அறியக்கூடியவை மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாதவை. ஜாமீன் விதிவிலக்காக இருக்கும் சில சட்டங்கள் பின்வருமாறு-


தேசிய பாதுகாப்பு சட்டம், 1980

இந்தச் சட்டத்தின் கீழ் , தேசத்தின் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காக மத்திய அல்லது மாநில அரசின் உத்தரவின் கீழ் ஒருவரை 12 மாதங்கள் வரை காவலில் வைக்க முடியும். மற்ற குற்றங்களைப் போலல்லாமல், CrPCயின் 50வது பிரிவின் கீழ் ஒருவர் ஜாமீன் பெறும் உரிமையைப் பெற்றிருந்தால் , இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு தண்டனை ஒரு நபரிடமிருந்து அத்தகைய உரிமையைப் பறிக்கிறது.


சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967

சட்டத்தின் பிரிவு 43 D இன் கீழ் , குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அவர் காவலில் வைக்க நியாயமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் கருதினால் அவருக்கு ஜாமீன் வழங்க உரிமை இல்லை. மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் இந்தியர் அல்லாத ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட மாட்டாது என்றும் இந்தச் சட்டம் கூறுகிறது. 


ஐபிசியின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள்

இந்திய தண்டனைச் சட்டம், 1860ன் கீழ் சில ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள் உள்ளன . உதாரணமாக, நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தல் ( பிரிவு 121 ), தேசத்துரோகம் ( 124-A ), போதைப்பொருள் கலப்படம் ( பிரிவு 274 ) போன்றவை.


முடிவுரை

NDPS சட்டத்தின் பிரிவு 37 போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு வரும்போது ஒரு தடுப்பாக செயல்படுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்தால் ஜாமீன் கிடைக்காது என்ற அச்சத்தை மக்களிடையே உருவாக்குவது அவசியம். மறுபுறம், நிரபராதிகள் சிறையில் அடைக்கப்படுவதால் இந்த ஏற்பாடு சில சமயங்களில் கொடூரமாகிறது. எனவே, நீதியை உறுதிப்படுத்த நீதித்துறை ஒரு எச்சரிக்கைக் கோட்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.