Monday, April 30, 2018

000041. நிரந்தர உறுத்துக்கட்டளை - வழக்கு



வாதி என்ன சொல்றாருன்னு கேப்போம், வாங்க!

என்னோட பேரு வி.சக்ரவர்த்திங்க. எங்கப்பா பேரு வடிவேலுங்க.  கடலூர் மாவட்டத்தில திருவதிகைன்னு ஒரு ஊரு இருக்குதுங்க. அந்த ஊர்ல இருக்குற சரநாராயணப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ஒரு சொத்த, 40 வருஷத்துக்கு முன்னால, அப்ப இருந்த கோயில் நிர்வாகிங்க, எங்க அப்பாவுக்கு குத்தகைக்கு வுட்டாங்கங்க.   அப்போ குத்தகை வருஷத்துக்கு 15 ரூபாய்ங்க. எங்கப்பா 20 வருஷத்துக்கு முன்னால எறந்து போயிட்டாருங்க. இப்ப அந்த சொத்துக்கு நான் வருஷ குத்தகையா 2000 ரூபா கொடுத்திட்டு அனுபவப்பாத்தியம் செஞ்சிக்கிட்டு வாரேனுங்க. இப்ப இருக்குற கோயில் அதிகாரி (செயல் அலுவலர்) எனக்கு குத்தகைப் பத்திரம் எழுதிக் கொடுத்திருக்காருங்க. குத்தகைப் பணத்த நான் ஒழுங்கா அவருகிட்ட கொடுத்துக்கிட்டு வாரேனுங்க. எல்லாத்துக்கும் எங்கிட்ட ஆதாரம் இருக்குதுங்க..  என்னன்னே தெரியலீங்க? எங்க ஊரு வீ.ஏ.ஓ, பண்ருட்டி தாசில்தாரு, கடலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கூட சேந்துக்கிட்டு, அந்த சொத்த எங்கிட்ட இருந்து, இப்ப அவரு அபகரிக்கப் பாக்குறாருங்க. நீதிபதி ஐயா, நான் அனுபவிச்சிக்கிட்டு இருக்குற கோயில் சொத்துல யாரும் உள்ள வந்து எந்தத் தொந்தரவும் செய்யக்கூடாதுன்னு ஒரு நிரந்தர உறுத்துக்கட்டளை கொடுங்கய்யா. 

வழங்கப்பட்ட தீர்ப்பு :

சான்றாவணங்கள் மூலம் வாதி¸ தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்து வருகிறார் என்றும்¸ வாதி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்றும் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

வாதியானவர் 5 ஆம் பிரதிவாதிக்கு பாத்தியமான தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்தும்¸ வாதி அமைதியான முறையில் அனுபவித்து வரும் தாவா சொத்தில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ எவ்விதத்திலும் அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பித்தும் வாதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்படுகிறது.

**************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 31.03.2018







மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்¸ பண்ருட்டி


முன்னிலை: திருமதி .ஏ.உமாமகேஸ்வரி பி.எஸ்ஸி.¸ பி.எல்.¸

மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ பண்ருட்டி

திருவள்ளுவராண்டு 2046¸ ஜய ஆண்டு¸ தைத்திங்கள் 15ஆம் நாள்

2015 ம் ஆண்டு ஜனவரித்திங்கள் 29 ஆம் நாள்வியாழக்கிழமை

அசல் வழக்கு எண்.170 / 2006

வி.சக்கரவர்த்தி…................................................................................................................ வாதி

/எதிர்/

1. கிராம நிர்வாக அலுவலர்¸ திருவதிகை

2. தாசில்தார்¸ பண்ருட்டி

3. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்¸ கடலூர்

4. மாவட்ட ஆட்சியர்¸ கடலூர் மாவட்டம்

5. செயல் அலுவலர்¸ 

அருள்மிகு சரநாராயணபெருமாள் திருக்கோயில்¸ திருவதிகை…........... பிரதிவாதிகள்

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

'இவ்வழக்கானது¸ வாதியானவர் 5 ஆம் பிரதிவாதிக்கு பாத்தியமான தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்யக்கோரியும்¸ வாதி அமைதியான முறையில் அனுபவித்துவரும் தாவா சொத்தில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ எவ்விதத்திலும் அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பிக்கக் கோரியும் மற்றும் தாவா செலவுத்தொகை கேட்டும் வாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது."

2. வழக்குரையின் சுருக்கம்:

தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணப் பெருமாள் கோயிலுக்கு பாத்தியமானது. தாவா சொத்தை அக்கோயிலின் அறங்காவலர்கள் வாதியின் தகப்பனார் வடிவேலு என்பவருக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விட்டனர். அப்போது வருட குத்தகை ரூ.15 ஆகும். மேற்படி வாதியின் தகப்பனார் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இறந்த பின்னர் தாவா சொத்திற்கான குத்தகையை மேற்படி கோயிலுக்கு செலுத்தி வாதி அனுபவித்து வருகிறார். தற்போது தாவா சொத்திற்கான வருட குத்தகை ரூ.2000 ஆகும். தாவா சொத்துக்கான குத்தகைத் தொகையை 5 ஆம் பிரதிவாதிதான் வருடாவருடம் வசூலித்து வருகிறார். 5 ஆம் பிரதிவாதி தாவா சொத்தைப் பொறுத்து வாதிக்கு குத்தகைப் பத்திரங்கள் எழுதிக் கொடுத்துள்ளார். வாதி தாவா சொத்துக்கான குத்தகையை வருடா வருடம் தவறாமல் 5 ஆம் பிரதிவாதியிடம் செலுத்திவருகிறார். இந்நிலையில் திடீரென 1 முதல் 3 பிரதிவாதிகள் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வாரத்தில் தாவா சொத்தை வாதியிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முயற்சித்து¸ அந்த முயற்சி வாதி கேட்டுக்கொண்டதின் பேரில் தவிர்க்கப்பட்டது. மேற்படி 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டத்திற்கு புறம்பான செய்கைக்கு 5 ஆம் பிரதிவாதி உடந்தையாக இருந்தார். வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர். அவரை தாவா சொத்திலிருந்து வெளியேற்ற பிரதிவாதிகளுக்கு உரிமையில்லை. 4 ஆம் பிரதிவாதியானவர் 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர். அதனால் அவரையும் வாதி இவ்வழக்கில் தரப்பினராக சேர்த்துள்ளார். எனவே வாதி¸ தன்னை தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்யக்கோரி இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்."

3. ஐந்தாம் பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையின் சுருக்கம்:

வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல¸ செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டியதொன்றாகும். தாவா சொத்து இந்த பிரதிவாதி கோயிலுக்கு பாத்தியமானது¸ அவரைத் தவிர மேற்படி தாவா சொத்தில் உரிமைகோர எவருக்கும் அருகதையில்லை. தாவா சொத்தானது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வாதிக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இதுநாள் வரை வாதி குத்தகைத் தொகையை செலுத்தியதில்லை. எனவே இந்த பிரதிவாதி கடலூர் வருவாய் நீதிமன்றத்தின் முன்பு குத்தகை பாக்கியைக் கேட்டு வழக்கு தாக்கல் செய்து¸ செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகு தான் வாதி மேற்படி குத்தகை பாக்கியை செலுத்த முன்வந்தார். ஆனால் வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர் என்பதை மறுக்கவில்லை. 5 ஆம் பிரதிவாதி¸ 1முதல் 3 பிரதிவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறுவது தவறு. 1 முதல் 4 பிரதிவாதிகள் தாவா சொத்தில் எதுவும்செய்யவில்லை. அவர்களுக்கு தாவா சொத்தைப் பொறுத்து எவ்வித உரிமையும் இல்லை. மேலும் இவ்வழக்கிற்கு வழக்குமூலம் இல்லை. எனவே இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டியதாகும்."

4. மேற்படி வழக்குரை மற்றும் எதிர்வழக்குரை ஆகியவற்றை பரிசீலனை செய்த பின்னர் 03.03.2008 ஆம் தேதி கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.

1) வழக்குச்சொத்து வாதியின் சுவாதீன அனுபவத்தில் உள்ளதா?

2) வழக்கில் வாதி கோரியுள்ளவாறு விளம்புகைப் பரிகாரம் வாதிக்கு கிடைக்கத்தக்கதா?

3) நிரந்தர உறுத்துக்கட்டளைப் பரிகாரம் பெறுவதற்கு வாதிக்கு தகுதி உள்ளதா?

4) இவ்வழக்குக்கு வழக்கு மூலம் உண்டா?

5) வாதிக்கு எத்தகைய நிவாரணம் கிடைக்கக் கூடியது?

6) வழக்கெழு வினாக்கள் 1 முதல் 3:

வாதி தரப்பில் தங்களது வழக்கினை நிரூபிக்கும் வகையில்¸வாதியானவர் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். வாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குரையில்¸ தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணப் பெருமாள் கோயிலுக்கு பாத்தியமானது. தாவா சொத்தை அக்கோயிலின் அறங்காவலர்கள் வாதியின் தகப்பனார் வடிவேலு என்பவருக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விட்டனர். அப்போது வருட குத்தகை ரூ.15 ஆகும். மேற்படி வாதியின் தகப்பனார் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இறந்த பின்னர் தாவா சொத்திற்கான குத்தகையை மேற்படி கோயிலுக்கு செலுத்தி வாதி அனுபவித்து வருகிறார். தற்போது தாவா சொத்திற்கான வருட குத்தகை ரூ.2000 ஆகும். தாவா சொத்துக்கான குத்தகைத் தொகையை 5ஆம் பிரதிவாதி தான் வருடா வருடம் வசூலித்து வருகிறார். 5 ஆம் பிரதிவாதி தாவா சொத்தைப் பொறுத்து வாதிக்கு குத்தகைப் பத்திரங்கள் எழுதிக் கொடுத்துள்ளார். வாதி தாவா சொத்துக்கான குத்தகையை வருடா வருடம் தவறாமல் 5 ஆம் பிரதிவாதியிடம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் திடீரென 1 முதல் 3 பிரதிவாதிகள் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வாரத்தில் தாவா சொத்தை வாதியிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முயற்சித்து¸ அந்த முயற்சி வாதி கேட்டுக்கொண்டதின் பேரில் தவிர்க்கப்பட்டது. மேற்படி 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டத்திற்கு புறம்பான செய்கைக்கு 5 ஆம் பிரதிவாதி உடந்தையாக இருந்தார். வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர். அவரை தாவா சொத்திலிருந்து வெளியேற்ற பிரதிவாதிகளுக்கு உரிமையில்லை. 4 ஆம் பிரதிவாதியானவர் 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர். அதனால் அவரையும் வாதி இவ்வழக்கில் தரப்பினராக சேர்த்துள்ளார். எனவே வாதி¸ தன்னை தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்யக்கோரி இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது."

7) இவ்வழக்கில் வாதி¸ வழக்குரையுடன் தாக்கல் செய்திருந்த ஐ.ஏ.793/06 தற்காலிக உறுத்துக்கட்டளை மனுவில்¸ 1 முதல் 5 பிரதிவாதிகளும் எதிருரை தாக்கல் செய்து¸ அம்மனுவில் விசாரணைக்குப் பிறகு வாதி கோரிய வண்ணம் தற்காலிக உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கி 15.9.06 ஆம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து 1 முதல் 4 பிரதிவாதிகள் தரப்பில் பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் சி.எம்.ஏ.7/06 மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு¸ 6.9.07 ஆம் தேதி மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அசல் வழக்கிலும் 1 முதல் 4 பிரதிவாதிகள் எதிர்வழக்குரை தாக்கல் செய்யாத காரணத்தால் 22.9.06 ஆம் தேதி ஒருதலை பட்சமாக்கப்பட்டுள்ளனர்."

'8) 5 ஆம் பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையில்¸ தாவா சொத்து இந்த பிரதிவாதி கோயிலுக்கு பாத்தியமானது¸ அவரைத் தவிர மேற்படி தாவா சொத்தில் உரிமைகோர எவருக்கும் அருகதையில்லை. தாவா சொத்தானது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வாதிக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இதுநாள்வரை வாதி குத்தகைத் தொகையை செலுத்தியதில்லை. எனவே இந்த பிரதிவாதி கடலூர் வருவாய் நீதிமன்றத்தின் முன்பு குத்தகை பாக்கியைக் கேட்டு வழக்கு தாக்கல் செய்து¸ செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகுதான் வாதி மேற்படி குத்தகை பாக்கியை செலுத்த முன்வந்தார். ஆனால் வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர் என்பதை மறுக்கவில்லை. 5 ஆம் பிரதிவாதி¸ 1 முதல் 3 பிரதிவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறுவது தவறு. 1 முதல் 4 பிரதிவாதிகள் தாவா சொத்தில் எதுவும் செய்யவில்லை. அவர்களுக்கு தாவா சொத்தைப் பொறுத்து எவ்வித உரிமையும் இல்லை. மேலும் இவ்வழக்கிற்கு வழக்குமூலம் இல்லை. எனவே இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது."

9) வாதி தரப்பில் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.18 வரையிலான ஆவணங்களும்¸ நீ.ம.சா.ஆ.1 முதல் நீ.ம.சா.ஆ.3 வரையிலான ஆவணங்களும் குறியீடு செய்யப்பட்டுள்ளன. வா.சா.ஆ.1 மற்றும் வா.சா.ஆ.2 ஆகியவை முறையே 07.07.2001 மற்றும் 04.07.2005 ஆகிய தேதிகளில் 5 ஆம் பிரதிவாதி¸ வாதிக்கு எழுதிக் கொடுத்த தாவா சொத்துக்கான அசல் குத்தகைப் பத்திரங்களாகும். வா.சா.ஆ.3 முதல் வா.சா.ஆ.12¸ வா.சா.ஆ.14¸ வா.சா.ஆ.17 மற்றும் வா.சா.ஆ.18 ஆகியவை வாதி¸ தாவா சொத்துக்கு 5 ஆம் பிரதிவாதிக்கு செலுத்திய குத்தகை ரசீதுகளாகும். வா.சா.ஆ.13 என்பது 11.07.2001 ஆம் தேதி 5 ஆம் பிரதிவாதி¸ வாதிக்கு குத்தகை பாக்கி கேட்டு அனுப்பிய நோட்டீஸ் ஆகும். வா.சா.ஆ.15 என்பது 22.10.2013 ஆம் தேதி வாதியை வருவாய் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி அனுப்பப்பட்ட கடிதம் ஆகும். வா.சா.ஆ.16 என்பது 21.11.2013 ஆம் தேதி வாதிக்கு கடலூர் வருவாய் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு நகல் ஆகும். வா.சா.1 தனது முதல் விசாரணையில் வழக்குரையை ஒட்டி சாட்சியம் அளித்துள்ளார். தனது குறுக்கு விசாரணையில்¸ தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணர் கோயிருக்கு பாத்தியமானது என்றும்¸ தன் தகப்பனார் பெயர் சுமார் 60 வருடங்களுக்கு முன்பாகவே அப்போதைய கோயில் நிர்வாகத்தார்களிடமிருந்து குத்தகை எடுத்துக் கொண்டதாகவும்¸ அவருக்கு பின்னிட்டுதான் குத்தகைக்கு பயிர் செய்து வருவதாகவும்¸ ஆரம்பத்தில் தன் தகப்பனார் ரூ.90ம்¸ தற்காலம் தான் ரூ.2000 வருட குத்தகை செலுத்தி வருவதாகவும்¸ குத்தகை பாக்கி ஏதுமில்லை என்றும்¸தன் பேரில் கோயில் நிர்வாகத்தால் கடலூர் ரெவின்யூ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து¸ அதன்படி தான் குத்தகை செலுத்தி வருவதாகவும்¸ தான் கோயிலுக்கு பாத்தியமான சொத்தைதான் அனுபவித்து வருவதாகவும்¸ அரசாங்கத்திற்கு இதில் சம்மந்தம் இல்லை என்றும்¸ தன்னை குத்தகைதாரர் அல்ல என்று கோயில் தரப்பில் எந்த காலத்திலும் சொல்லவில்லை என்றும்¸ வழக்கு போடுவதற்கு முன்பு அரசாங்கத்திலிருந்து வந்து தாவா சொத்தில் கட்டுமானம் செய்யப்போவதாக சொல்லி பிரச்சனை செய்ததாகவும்¸ வழக்குக்கு பின்னிட்டு 1 முதல் 4 பிரதிவாதிகளான அரசாங்கத்திலிருந்து தனக்கு எந்த பிரச்சனையும் தரவில்லை என்றும்¸ 5 ஆம் பிரதிவாதியால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சாட்சியம் அளித்துள்ளார்."

10) இவ்வழக்கில் பிரதிவாதிகள் தரப்பில் எவ்வித சாட்சிகளும் முன்னிலைப்படுத்தப்படவில்லை¸ சான்றாவணங்களும் குறியீடு செய்யப்படவில்லை.

11) மேற்படி வாதிதரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களையும்¸ வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் பரிசீலனை செய்து பார்க்கும்பொழுது¸ தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணப்பெருமாள் கோயிலுக்கு பாத்தியமானது என்பதும்¸ அதனை வாதியின் தகப்பனாரும்¸ அவருக்குப் பின்னிட்டு வாதியும் குத்தகைதாரர் என்ற முறையில் அனுபவித்து வருவதும் வாதியின் சாட்சியம் மற்றும் வாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.18 வரையிலான சான்றாவணங்கள் மூலம் தெளிவாகிறது. மேலும்¸ வாதியும்¸ கோயில் நிர்வாகமும் குத்தகைப் பத்திரங்கள் எழுதிக் கொண்டதும் வாதிதரப்பில்நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் வாதி தொடர்ந்து குத்தகை தொகையை கோயில் நிர்வாகத்திடம் செலுத்தி வந்திருப்பதும் தெரியவருகிறது. மேலும் வாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா.ஆ.16 ஆவணத்தை பரிசீலனை செய்து பார்க்கும் போது¸ 21.11.2013 ஆம் தேதி வாதிக்கு கடலூர் வருவாய் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு நகல் ஆகும். இதில் வாதி¸ கோயில் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய குத்தகை பாக்கியை செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம்¸ தாவா சொத்தில் வாதி குத்தகைதாரர் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவ்வழக்கில் 1 முதல் 4 பிரதிவாதிகள் ஒருதலைபட்சமாகியுள்ளனர். 5 ஆம் பிரதிவாதியான கோயில் நிர்வாகத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையிலும்¸ வாதி¸ மேற்படி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் வாதி¸ தனது சாட்சியத்தில் வருவாய் நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பின்படி தான் குத்தகை பாக்கியை செலுத்தி வருவதாகவும் சாட்சியம் அளித்துள்ளார். மேலும் வாதி தரப்பில் திடீரென 1 முதல் 3 பிரதிவாதிகள் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வாரத்தில் தாவா சொத்தை வாதியிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முயற்சித்து¸ அந்த முயற்சி வாதி கேட்டுக்கொண்டதின்பேரில் தவிர்க்கப்பட்டதாகவும்¸ மேற்படி 1முதல் 3 பிரதிவாதிகளின் சட்டத்திற்கு புறம்பான செய்கைக்கு 5 ஆம்பிரதிவாதி உடந்தையாக இருந்ததாகவும்¸ 4 ஆம்பிரதிவாதியானவர் 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் என்பதால் அவரையும் வாதி இவ்வழக்கில் தரப்பினராக சேர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே வா.சா.1-ன் சாட்சியம் மற்றும் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.18 வரையிலான சான்றாவணங்கள் மூலமும் வாதி¸ தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்து வருகிறார் என்றும்¸ வாதி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்றும் வாதி தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தாவா சொத்தைப் பொறுத்து வாதி கோரியுள்ள விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் அவருக்கு கிடைக்கத்தக்கது என்றும் முடிவு செய்து எழுவினா 1¸2 மற்றும் 3 ஆகியவற்றிற்கு வாதிக்குஆதரவாக தீர்வு காணப்படுகிறது.

'14) முடிவாக¸ இவ்வழக்கானது அனுமதிக்கப்பட்டு¸ வாதியானர் 5ஆம் பிரதிவாதிக்கு பாத்தியமான தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்தும்¸ வாதி அமைதியான முறையில்அனுபவித்து வரும் தாவா சொத்தில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ எவ்விதத்திலும் அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பித்தும் வாதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்படுகிறது. அவரவர்கள் செலவுத்தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்படுகிறது

Tuesday, April 24, 2018

000040. பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா?

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்க ல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய  அளவு கோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. எனவே தான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.

கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு  பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறி வந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள 574 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே  சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள்  ஏற்ப ட்டுள்ளன.

பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவண ங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்திவரும் வாசகங்களில் இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன் னமும் புரியாதவையாகவே உள்ளன .

இதில், ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும் பின்வருமாறு:

பட்டா:

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா:

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்:

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்:

ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்:

கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

தேவதானம்:

கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்:

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்:

நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது. 

ஷரத்து: 

பிரிவு. 

இலாகா:

துறை.

கிரயம்:

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணப்படுத்துதல்.

வில்லங்க சான்று:

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்துகொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்:

நில அளவை எண்.

இறங்குரிமை:

வாரிசுரிமை.

தாய்பத்திரம்:

ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம்  இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்:

குறித்த வகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை:

நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு:

நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி:

வருவாய் தீர்வாயம்.

நன்செய் நிலம்:

அதிக பாசன வசதிகொண்ட நிலம்.

புன்செய் நிலம்:

பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை:

ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில  நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது. இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர். 23 வகை மாதிரி ஆவணங்கள் ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வதுதொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதை ஏற்ற, சொத்து விற்பனை , அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23வ கையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

,

பதிவுதுறையின் www.tnreginet.netஎன்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

Monday, April 23, 2018

000039. குடிபோதையில் செய்த தவறுக்கு தண்டனை உண்டா?

தன் விருப்பத்திற்கு மாறாகவோ அல்லது மற்றவரின் சூழ்ச்சியாலோ பலவந்தமாக குடிபோதையூட்டப்பெற்றவர்கள், அக்குடிபோதையின் காரணமாக, தான் செய்யும் செயலின் தன்மையையும் தரத்தையும் அறியும் திறனற்ற நிலையில் செய்யும் செயல்களுக்கு தான் சட்டம் குற்றப்பொறுப்பிலிருந்து விலக்களிக்கிறது. 
[இந்திய தண்டனைச் சட்டம் section 85]





மற்றபடி மது குடித்து மதிமயங்கிப் புரியும் குற்றச்செயல்களை சட்டம் மன்னிப்பதில்லை. அதற்கு மது அருந்தியவர் பொறுப்பகின்றார். அவருக்கு குடிபோதை ஏற்படுத்தாமலிருந்தால் எந்த அறிவை அவர் பெற்றிருந்திருப்பாரோ அதே அறிவை அவர் பெற்றிருந்தாற் போன்றே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு அவர் உள்ளாவார். 
[ இந்திய தண்டனைச் சட்டம் section 86]

000038. LEGAL NOTICE அறிவிப்பு என்றால் என்ன? எப்படி அனுப்புவது?

ஒரு செயலை செய்யக் கோரி அல்லது ஒரு செயலை செய்யாமல் இருக்கக் கோரி அல்லது செய்யப்படவிருக்கும் சில செயல்களால் ஏற்படப்போகும் விளைவுகளை குறித்து அறிவுறுத்தி, ஒரு நபர் மற்றொரு நபருக்கு எழுத்து மூலமாக கொடுக்கும் எச்சரிக்கை அல்லது தகவல் தான் "அறிவிப்பு" எனப்படுகிறது.

நாம் தாக்கல் செய்யப்போகும் வழக்கு எந்த வகையான வழக்காக இருந்தாலும், அதற்கு முன்பு மறு தரப்பினருக்கு வழக்கு மூலம் (Cause of Action) குறித்த அறிவிப்பு ஒன்றை கொடுப்பது நல்லது. ஏனென்றால் அறிவிப்பு கிடைக்க பெற்றவுடன் மறு தரப்பினர் சமாதானத்திற்கு வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. பணிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளது. சுருக்கமாக கூற வேண்டும் என்றால் மறு தரப்பினர் தனது நிலையை உணர்ந்து, அதை மாற்றிக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அளிப்பதே அறிவிப்பின் நோக்கமாகும்.

அறிவிப்பு ஒன்றை சம்பந்தப்பட்ட தரப்பினர் அல்லது அவரது முகவர் (Agent) அல்லது அவரது வழக்கறிஞர் கொடுக்கலாம்.


  •  அறிவிப்பு இரண்டு விதம் உள்ளது.


1. சட்டப்படி கொடுக்க வேண்டிய அறிவிப்பு (Statutory Notice (or) Mandatory Notice)

2. கடப்பாட்டிற்குரிய அறிவிப்பு
(Obligatory Notice)

இதில் சட்டப்படியிலான அறிவிப்பை கொடுக்க தவறினால், சம்மந்தப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதற்கு அது காரணமாக அமையலாம். ஆனால் கடப்பாட்டிற்குரிய அறிவிப்பை கொடுக்காமலும் வழக்கு தொடரலாம். இதில் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்ற அபாயம் இல்லை. அதாவது கடப்பாட்டிற்குரிய அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்பது தரப்பினரின் விருப்பத்தை பொறுத்தது. இந்த அறிவிப்பை தரப்பினர் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்கலாம்.

  • சட்டப்படியான அறிவிப்பிற்கு எடுத்துக்காட்டாக கீழ்க்கண்டவற்றை கூறலாம்.


1. அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடரும் முன் உ. ந. மு. ச பிரிவு 80 ன் கீழ் கொடுக்க வேண்டிய அறிவிப்பு

2. சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 106 வது பிரிவின்படி கொடுக்க வேண்டிய அறிவிப்பு

3. இரயில்வே சட்டத்தின் பிரிவு 106 ன் கீழ் கொடுக்க வேண்டிய அறிவிப்பு

ஆகியன சட்டப்படி கட்டாயம் கொடுக்க வேண்டிய அறிவிப்புகள் ஆகும். இந்த அறிவிப்பு கொடுக்கப்படவில்லை என்றால் வழக்கே இல்லை என்று சட்டம் கூறுகிறது.

  • கடப்பாட்டிற்குரிய அறிவிப்புக்கு எடுத்துக்காட்டாக கீழ்க்கண்டவற்றை கூறலாம்.


1. கடனுறுதிச் சீட்டின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட கடன் தொகையை திரும்ப பெறுவதற்காக கொடுக்கப்படும் அறிவிப்பு

2. சரக்குகளின் விலைக்காக கொடுக்கப்படும் அறிவிப்பு

  • அறிவிப்பின் உள்ளடக்கம் எப்படி இருக்க வேண்டும்? Contents of Notice :


இப்படித்தான் அறிவிப்பு இருக்க வேண்டும் என்று கடுமையான விதிகளோ, படிவமோ ஏதுமில்லை. பொதுவாக நாம் தாக்கல் செய்ய இருக்கும் வழக்கின் பொருண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் ஒரு அறிவிப்பை தயாரிக்கலாம். எனினும் குறைந்தபட்சம் பின்வரும் விவரங்கள் ஒரு அறிவிப்பில் இருக்க வேண்டும்.

1. அறிவிப்பு தேதி

2. அறிவிப்பை யார் கொடுக்கிறாரோ அவரது பெயர் மற்றும் முகவரி

3. அறிவிப்பு யாருக்கு கொடுக்கப்படுகிறதோ அவரது பெயர் மற்றும் முகவரி

4. பிரச்சினை குறித்த விபரம் (சுருக்கமாக)

5. அறிவிப்பிற்கான வழக்கு மூலம்

6. கோரப்படும் பரிகாரம்

7. பரிகாரத்தை நிறைவேற்ற தவறினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விபரம்

8. எவ்வளவு நாட்களுக்குள் பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற விபரம்

9. அறிவிப்பு ஒரு வழக்கறிஞர் மூலமாக கொடுக்கப்பட்டால் அவரது கையொப்பம்

10. அறிவிப்பின் தலைப்பில் தேதி குறிப்பிடப்படாவிட்டால், கடைசியில் இடமும், தேதி விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.

  • அறிவிப்பு அனுப்பும் முறை (Service of Notice) :


யாருக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டுமோ, அவர் வசம் அதனை நேர்முகமாக கொடுக்கலாம். இல்லையென்றால் பதிவுத் தபாலில் அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

000037. வருவாய் கோட்டாட்ச்சியருக்கான அதிகாரங்கள்

1. வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்ட அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சிறப்புத் திட்ட பணியாளர்கள் ஆகியோரது பல்வேறு பணிகளை மேற்பார்வை செய்தல்.

2. வட்ட அலுவலகங்களை தணிக்கை செய்தல்.

3. கோட்டத்திலுள்ள களப்பணியாளர்களது நாட்குறிப்புகளை ஆய்வு செய்தல்.

4. வட்ட அலுவலகங்களில் கடன் பிரிவுகளை அரையாண்டுக்கு ஒருமுறை தணிக்கையிடல்.

5. முதல் வகுப்பு நிருவாக நீதிபதியாக செயல்பட்டு கோட்டத்தில், சட்டம் ஒழுங்கினை நிருவகித்தல்.

6. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 107 முதல் 110 வரையுள்ள பிரிவுகளின்படி விசாரணை நடத்தி ஆணை பிறப்பித்தல்.

7. காவல் நிலை ஆணை எண் பிரிவு 145-ன்படி விசாரணை செய்தல்.

8. குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 142 மற்றும் 145-ன்படி விசாரணை செய்து ஆணைகள் பிறப்பித்தல்.

9. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நியமனம், மாறுதல் மற்றும் தண்டனை வழங்குதல்.

10. கிராம உதவியாளர்கள் நியமனம் மற்றும் தண்டனை தொடர்பான வட்டாட்சியரின் ஆணையின் மீதான மேல் முறையீட்டு மனுக்களில் விசாரணை செய்தல்.

11. நூலக வரி, அரசுக் கடன்கள், நில அளவைக் கட்டணங்கள், பிற அரசுத் துறைகளுக்கு சேரவேண்டிய பாக்கிகள், வேளாண் வருமான வரி, நகர்ப்புற நிலவரி, நீதிமன்ற வழக்குக் கட்டணம், வறியவர் வழக்கு கட்டணம் உள்ளிட்ட அரசுக்குச் சேரவேண்டிய பாக்கிகளை வசூலித்திட வசூல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வசூல் பணியைத் துரிதப்படுத்துதல், வருவாய் வசூல் சட்டத்தின் மூலம் அரசுக்கு சேர வேண்டிய பாக்கியை வசூலித்தல்.

12. நில ஒப்படைப்பு மற்றும் பராதீனம் ஆகிய இனங்களைத் தணிக்கை செய்தல்.

13. ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மேல்முறையீடுகள் ஆகியவைகளில் நடவடிக்கை மேற்கொண்டு பொது இடங்களை ஆக்கிரமிப்பு தாரர்களிடமிருந்து மீட்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.

14. நிலமாற்ற முன்மொழிவுகளின் மீது தணிக்கை செய்தல்.

15. ஆதீன ஒழிப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட இனங்களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தல்.

16. 1960-ம் ஆண்டு நிலப்பயன்பாட்டு ஆணையினை செயல்படுத்துதல்.

17. நிலச் சீர்திருத்த சட்டங்கள் மற்றும் குத்தகைச் சட்டங்கள் ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்துதல்.

18. மேம்பாட்டு வரி விதிப்பின் மீது வரும் மேல்முறையீடுகளை முடிவு செய்தல்.

19. சிறப்பு சிறுபாசனத் திட்ட பணிகளை பார்வையிடுவதுடன் தண்ணீர் தீர்வை எவ்வளவு விதிக்க வேண்டும் என்பதை நிர்ணயித்திடுதல்.

20. ரூ.25000-க்கும் அதிகமாக இழப்பீடு தர வேண்டிய நில எடுப்பு அலுவலராக பணியாற்றல்.

21. வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது நிலவரி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று வட்டாட்சியரால் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் தொடர்புடைய இடங்களை பார்வையிட்டு நிலவரி தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுத்தல்.

22. இந்திய முத்திரைச் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்துதல்.

23. கிராமக் கணக்குகளைத் தணிக்கை செய்தல் மற்றும் பயிர் மேலாய்வு செய்தல்.

24. தமிழ்நாடு இனம் (நியாயவாரம்) சட்டம் 1963 -ன்படி மேல் முறையீடுகளை விசாரித்தல்.

25. குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் வரும் முறையீடுகளை பரிசீலித்தல், குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் வரும் முறையீடுகளை பரிசீலித்தல்.

26. முழைமானிகள், சர்வே கற்கள், கல் டெப்போக்கள் ஆகியவற்றை தணிக்கை செய்தல்.

27. கிராமக் கணக்குகளின் ஆண்டு தணிக்கை (வருவாய்த் தீர்வாயம்) முடித்து சரியான கேட்பினை முடிவு செய்தல்.

28. தமிழ்நாடு விவசாயகுத்தகைச் சட்டம் 1969-ன்படி மேல் முறையீடுகளை விசாரித்தல்.

29. மரப்பட்டா- வழங்குதல் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரித்தல்.

30. அரசு நிலங்கள் குத்தகை இனங்களைப் பார்வையிடுதல்.

31. முறையான தண்ணீர் தீர்வை நிர்ணயம் குறித்து ஆய்வு செய்தல். 31. முதியோர் உதவித் தொகை மற்றும் இதர உதவித் தொகை வழங்கும் பணியைக் கண்காணித்தல், வட்டஅலுவலக முதியோர் உதவித் தொகை பிரிவினை காலாண்டு தோறும் தணிக்கை செய்தல்.

32. பர்மா மற்றும் சிலோன் அகதிகள் நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்துதல்.

33. வெள்ளம், தீ விபத்து, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளின் போது காப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடல்.

34. ஆதிதிராவிடர் குடியிருப்புகளைப் பார்வையிடுதல் மற்றும் ஆதிதிராவிடர் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.

35. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.

36. விபத்து மற்றும் சாலை விபத்து நிவாரண நிதி வழங்குதல்.

37. காப்புறுதித் திட்டங்களை ஆய்வு செய்தல்.

38. மனுநீதி திட்ட முகாம் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடத்திடல்.

39. நியாயவிலைக் கடைகள், அரிசி ஆலைகள் தணிக்கை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் தொடர்பாக ஆய்வு செய்தல்.

40. கொள்முதல் மையங்கள் மற்றும் கிடங்குகள் தணிக்கை அரசு உணவு தானியக் கிடங்குகள் ஆய்வு மற்றும் இருப்புகள் தணிக்கை.

41. (சில பகுதிகளில்) குடியிருப்பு கட்டுப்பாடு அலுவலராக செயல்படுதல்.

42. 1960ம் ஆண்டு தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை ஒழுங்கு) சட்டத்தினை செயல்படுத்தல்.

43. நிரந்தர மற்றும் தற்காலிக திரை அரங்குகளைத் தணிக்கை செய்தல்.

44. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவு பதிவேடுகளைத் தணிக்கை செய்தல்.

45. வெடி மருந்துச் சட்டம், படைக்கலச் சட்டம், பெட்ரோலியம் சட்டம் ஆகியவை தொடர்பான பணிகளைச் செய்தல்.

46. அரசு அலுவலர்கள் பிறப்பு தேதி குறித்து விசாரணை செய்தல். 

47. எரிசாராயம் மற்றும் கரும்புப்பாகு (மொலாசஸ்) உரிய கணக்குகள் தணிக்கையிடல்.

48. அடகுக் கடைகள் தணிக்கை மற்றும் அடகு கடைக்காரர் சட்டம் அமுல் செய்தல்.

49. முக்கியப் பிரமுகர்கள் வருகையைக் கவனித்தல்.

50. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளைச் செய்தல்.

51. ஆறிவொளி இயக்கம் முதலிய அரசுத் திட்டங்களைச் செயல்படுத்த ஒத்துழைப்பு நல்குதல்.

52 கிராமச் சாவடிகள் மற்றும் கால்நடைப் பட்டிகளைத் தணிக்கை செய்தல்.

53. வருவாய் நிலையாணைகளில் கூறப்பட்டுள்ள பிற பணிகளைச் செய்தல்

Sunday, April 22, 2018

000036. ONLINE PATTA TRANSFER

தமிழ்நாடு வருவாய்த் துறையின் மூலம் மாநிலம் முழுவதும் பட்டா மாறுதல் (நேரடி பட்டா மாறுதல் / உட்பிரிவு பட்டா மாறுதல்) பணிகள் வருவாய்த் துறை மற்றும் நில அளவைத் துறையினரால் வட்ட அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் கடந்த 2003 முதல் கையினால் எழுதி வழங்கப்பட்ட (Manual) பட்டா நிலப் பதிவுருக்களை நிறுத்தி தடை செய்துவிட்டு அரசு கணினி வழி பட்டா வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கணினியில் பதிவு செய்யப்பட்ட நிலப்  பதிவுருக்களைக் கொண்டு பொதுமக்களுக்கு கணினி வழி பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியை பொதுமக்கள் பயனுரும் வகையில் மேம்படுத்தி இணைய வழி வசதிகள் மூலம் செயல்படுத்திட ஏதுவாக பட்டா மாறுதல்களுக்கான தமிழ் நிலம் மென்பொருள் இணையதள வசதியுடன் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்நில இணையதள மென்பொருளை கையாளுகையில் கீழ்க்கண்டவாறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. எனவே அதற்கான நடைமுறைகள் இதன்மூலம் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.


I. பொதுசேவை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்:


1. பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் மேற்கொள்ள இரண்டு இணையதள முகவரி வழங்கப்படும். ஒன்று பொது சேவை மையங்களில் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கும், www.tamilnilam.tn.gov.in/CSC மற்றொன்று வருவாய்த் துறை அலுவலர்கள் பயன்படுத்துவதற்கான www.tamil nilam.tn. gov.in/Revenue ஆகும்.


2. பட்டா மாறுதல் வேண்டும் மனுதார்கள்,பொது சேவை மையங்களை அணுகி தங்களது பட்டா மாறுதல் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, அதற்குரிய மின் ஆளுமைத் துறை இயக்குநர் நிர்ணயம் செய்துள்ள கட்டணமான ரூ.50/- செலுத்தி தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்துகொள்ள வேண்டும் (மாதிரிவிண்ணப்பப்படிவம் இணைக்கப்பட்டுள்ளது.) இப்படிவம் CSC களில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.


3. ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒருகுடிமக்கள் அடையாள எண். (Citizen Access Number)பதிவு செய்யப்பட வேண்டும். இணையதள வழி சான்றிதழ் பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் அதே நடைமுறையில் இந்த எண் பதிவு செய்யப்படும். CAN-ID யில் மனுதாரரின் பெயர், தந்தை, தாயார் பெயர், பிறந்த தேதி, பாலினம், சாதி மதம்,அலைபேசி எண், நிரந்தர மற்றும் தற்காலிக முகவரி போன்ற தனிப்பட்ட விவரம் இடம் பெறும்.


4. அந்த அடையாள எண்ணைக் கொண்டு பட்டாமாறுதலுக்கான மனு பதிவு செய்யப்படும். (ஏற்கனவே மனுதார் அம்மாவட்டத்தில் வேறு சான்றிதழ் பெறுவதற்கான CAN-ID அடையாள எண் பெற்றிருப்பாரேயானால், அதே அடையாள எண்ணை இதற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.)


5.மனுதார் மனுவில் பூர்த்தி செய்து கொடுத்துள்ள விபரங்களின் அடிப்படையிலும், அவர் மனுவில் கேட்டுள்ளவாறும் மனு உட்பிரிவு செய்து பட்டாமாறுதல்  அல்லது உட்பிரிவு அல்லாத பட்டாமாறுதல் என பொது சேவை மையத்தில் பரிசீலிக்கப்பட்டு அதற்கான கணினி பதிவு மேற்கொள்ளப்படும்.


6. குடிமக்கள் அடையாள எண்ணை CAN-ID கொண்டு பட்டா மாறுதல் விண்ணப்பத்தினை இணையதள தமிழ் நிலம் மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வழங்கப்பட்டுள்ள இணையதள முகவரியில்www.tamilnilam.tn.gov.in/CSC அடையாள எண் பதிவு செய்யப்பட வேண்டும். தனிப்பட்ட விவரத்தைத் தொடர்ந்து, சொத்து எந்த மாவட்டம், வட்டம், கிராமம், சொத்து பட்டா மாறுதலின் காரணம், புல எண், பரப்பு, நிலத்தின் வகை, பத்திரப்பதிவு எண்,தேதி போன்ற விவரம் இருக்கும். நிலம் தொடர்பாக சந்தேகம் இருப்பின் (View Chitta) click செய்து தெரிந்து கொள்ளலாம். பின்னர் (Add Land Details) click செய்யவும். மேற்கொண்டு புல எண் இருப்பின் இதே முறையில் செய்ய வேண்டும்.

7. மனுதார் சொத்து விவரம் குறித்த அசல் ஆவணங்களை, CSC மையத்திற்குக் கொண்டுவர வேண்டும். (எ.கா.) கிரையம் வாங்கப்பட்ட சொத்தாக இருப்பின் பதிவு செய்யப்பட்ட பத்திரம் மற்றும் வில்லங்கச் சான்று, வாரிசு உரிமை சொத்தாக இருப்பின், வாரிசுச் சான்று போன்றவை நீதிமன்ற உத்தரவின்படி பெற்ற சொத்தாக இருப்பின் நீதிமன்ற ஆணையின் உண்மை நகல் ஆகியவைகளை கொண்டுவரவேண்டும். இந்த ஆவணங்களில் உள்ள விற்பனை செய்தவர்கள் மற்றும் நிலம் வாங்கியவர்கள் விவரங்கள் அடங்கிய பக்கங்கள், சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் அடங்கிய பக்கங்கள் மற்றும் மேற்படி ஆவணத்தில் உள்ள சொத்து விவரப் பக்கங்களையும் பொது சேவை மைய அலுவலகத்தில் உள்ள ஸ்கேனர் (Scanner) மூலம் ஸ்கேன் (Scanning)செய்யப்பட்டு விண்ணப்பத்துடன் பதிவேற்றம் (upload) செய்யப்பட வேண்டும். இவ்வாறு ஸ்கேன் (Scanning) செய்யப்படும் ஒரு கோப்பின் (File)அதிகபட்ச அளவு 400 KB ஆக இருக்க வேண்டும்.மேலும் (Scanning) செய்யப்படும் கோப்பு PDF வடிவத்தில் சேமித்து வைக்க வேண்டும். (Scanning) முடிவுற்றதும் அசல் ஆவணங்கள் மீள மனுதாரருக்கு உடடினயாக திரும்ப வழங்கப்பட்டுவிடும்.


பின்னார் Scan செய்த விவரங்களான வில்லங்கச் சான்று, கிரையப்பத்திரத்தின் விற்பவர், வாங்குபவர் விவரப்பக்கம், பத்திரப்பதிவு விவரம், சொத்து விவரம், தொடர்பு பத்திரம், நகல் சமர்ப்பிக்கப்பட்டதா? வாரிசுச்சான்று, இறப்புச்சான்று (அவசியம் ஏற்படின்) attach செய்து, அடையாள ஆவணங்களான வாக்காளர் அடையாள அட்டை,ஓட்டுநர், உரிமம், கடவுச் சீட்டு, பான் கார்டு, ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து, சம்பந்தப்பட்ட நிலம், நில உச்சவரம்பு, பஞ்சமி நிலம், நீதி வழக்கு ஆகியவற்றில் இல்லை என்பதை மனுதார் ஒப்புதல் சான்று அளித்து submit click செய்ய மனுதாரரின் மனு ஏற்கப்பட்டு, ஒப்புதல் சீட்டு தயாராகிறது. மனுவில் மனுதாரரின் கையொப்பம் பெற்று ஒப்புதல் சீட்டு மனுதாரருக்கு வழங்கப்படுகிறது.


மூல பத்திரங்கள் தேவைப்படும்  நேரங்களில், மூலப்பத்திரம் நகல்களை பெற்று பொது சேவைமையத்திலேயே வைத்திருக்க வேண்டும்.உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் மனு எனில்,உட்பிரிவுக் கட்டனம் செலுத்திய செலுத்து சீட்டு (Challan) scan செய்து இணைக்கப்பட வேண்டும்அல்லது சார்பதிவாளர் அலுவலகத்தில் உட்பிரிவு கட்டணம் செலுத்திய  ரசீது Scanning செய்யப்பட வேண்டும்.

9. பட்டா மாறுதல் தொடர்பான விபரங்கள் மற்றும்ஆவணங்கள் பதிவேற்றம் செய்தவுடன் மனு சமர்ப்பித்ததும் (Submit) இந்த மனுவிற்கான விண்ணப்ப எண் மற்றும் ஒப்புகையுடன் கூடிய விண்ணப்ப படிவம் உருவாக்கப்படும். இதனை நகல் எடுத்து, ஒப்புகை சீட்டினை (Acknowledgement) பொது சேவை மைய கணினி இயக்குபவர் ஒப்புதல் செய்து மனுதாரருக்கு அளித்திட வேண்டும்.

10. மேற்கண்ட நடைமுறைப்படி பதிவு செய்யப்பட்ட மனுதாரரின் விண்ணப் பங்கள் அதனுடைய தன்மைக்கேற்ப உட்பிரிவு அல்லாத பட்டாமாறுதலாக இருப்பின் (முழு புல எண்ணாகவோ, கூட்டு பட்டாவாகவோ இருந்தால்) கிராம நிர்வாகஅலுவலர்க்கும், உட்பிரிவுடன் கூடிய பட்டாமாறுதலாக இருப்பின் குறு வட்ட அளவர்க்கும் (MFS) இணைய வழி மாற்றம் செய்யப்படும்.

11. வசூல் செய்த சேவைக் கட்டணத்திற்கான ரசீதுமனுதாரருக்கு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.

II. உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் மனு மீதானநடவடிக்கைகள்.
(Not Involving Subdivision)

அ.கிராம நிர்வாக அலுவலரின் செயல்பாடுகள்.

1.கிராம  நிர்வாக அலுவலர்கள் இணைய வழிசான்றிதழுக்கு ஏற்கனவே பயன்படுத்தி வரும் உபயோகக் குறியீடு (User Name) மற்றும் கடவுச் சொல்லை (password) இணையவழி பட்டாமாறுதலுக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கிராம நிர்வாக அலுவலரின் கடவுச் சொல்லை (Password) கொண்டு இணைய தளத்தின் மூலம் அந்த கிராமத்திற்கான பட்டா மாறுதல் மனுக்களை பார்வையிடலாம். மேலும் கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பு வகிக்கும் கிராமத்திற்கான அ-பதிவேடு மற்றும் சிட்டா விவரங்களையும் பார்வை யிடலாம்.

2. பொதுசேவை மையத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட மனுக்கள் அந்தந்த வகையில்  To be scheduled என்ற பகுதிக்குள் மனு எண் (Appliication ID) வாரியாக வரிசைப்படுத்தப்பட்டு அட்டவணையிடப்பட்டு காணப்படும்.

3. மேற்படி அட்டவணையிடப்பட்ட மனுக்களில் கிராம நிர்வாக அலுவலர் எந்த மனுவின்மீது நடவடிக்கை எடுக்க உள்ளாரோ, அதன் அருகில் உள்ள ‘select’ click செய்து, அந்த மனுவை தேர்வு செய்யவேண்டும். மனுதாரரின் விவரம் அவ்வாறு தேர்வு செய்தவுடன், இணைக்கப்பட்ட நில உரிமை ஆவணங்களின் நகல்கள், மற்றும் பட்டா மாறுதல் கோரும் சர்வே புலத்தின் தற்போதுள்ள உரிமையாளர்களின் பட்டா எண், சர்வே எண்,போன்ற விவரங்கள் கிராம நிர்வாக அலுவலரின் பரிசீலனைக்கு கணினியில் (Electronic Version) தெரியவரும். தொடர்பு ஆவணங்களின் நகல் சரிபார்க்கப்பட்டதா என்பதற்கான (tick) தேர்வு செய்ய வேண்டும்.

4. மேற்காணும் விவரங்களை பரிசீலனை செய்த பின்னர் மனு தொடர்பாக தல ஆய்வு செய்ய தேதி குறிப்பிட்டு, தல ஆய்வின்போது ஏதேனும் ஆவணம் தேவைப்படின் அதன் விவரத்தினை குறிப்பு கலத்தில் தெரிவித்து, save click செய்யவும்

5. இதன் பின்னர் மனுவானது SCHEDULED APPLICATIONS என்ற பகுதிக்குள் மனு எண் வாரியாக வரிசைப்படுத்தப்பட்டு காணப்படும்.இந்த மனுவின் மீது, தல ஆய்வு தேதி குறிப்பிட்ட நாள் அன்றோ அல்லது அதற்கு பின்னரோ நடவடிக்கை தொடர இயலும்.

6. மனுதாரின் மனுவில் தெரிவித்துள்ளவிவரங்கள் மற்றும் இணைக்கப் பட்டுள்ள ஆவணங்களை அடிப்படையாக கொண்டு கிராம நிர்வாக அலுவலர் ஏற்கனவே கணினியில் உள்ள வருவாய் ஆவணங்களை (சிட்டா, அ-பதிவேடு) பார்வையிட்டு முழு புலம் மாறுதல் எனில் SELECT ALL என்ற கட்டத்தில் கிளிக் செய்ய வேண்டும். அப்போது முழு புலம் மாற்றம் செய்ய வேண்டுமா (Are you going to do entire land transaction?) என உறுதி செய்யும் Message Box  தோன்றும். ஆம் / இல்லை என்பதை தகுதியின் அடிப்படையில் கிளிக் செய்ய வேண்டும். புதிய பட்டாதார் பெயர் சரியாகஉள்ளதா என உறுதி செய்து கொண்டு, Land Remarks click செய்ய வேண்டும். மனு ஏற்கப்படுகிறதா என்பதை yes or no என்ற Radio Button ஐ தேர்வு செய்து save click செய்யவும். 

7. மனுதார் பெயரை ஏற்கனவே உள்ளஉரிமையாளர்களுடன் கூட்டாக சேர்க்கவேண்டும் எனில் SELECT ALL என்ற கட்டத்தில் கிளிக் ஏதும் செய்யாமல் Do you want to add buyers? என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். உரிமையாளர் சேர்க்க வேண்டிய தேர்வுகளில் yes கிளிக் செய்து உரிமையாளர் பெயரை கிராம நிர்வாக அலுவலர் குறிப்பிட்ட கலத்தில் கணினியில் பதிவு செய்ய வேண்டும். உரிமையாளர்கள் பெயர் பதிவு செய்ததும், save & exit கிளிக் செய்திட வேண்டும். மனுவில் உள்ள ஒவ்வொரு புல எண்ணிற்கும் இவ்வாறு உரிமையாளர் பெயர் பதிவு செய்திட வேண்டும்.

கூட்டுப்பட்டா தேர்வுகளில் This patta Number has other holding than Survey No, Does the above set of owners together have a patta number? என்ற வினா கணினியில் தெரியவரும். அதாவது, பட்டா மாறுதல் நிகழவுள்ள புல எண்ணுடைய பட்டாவில், அந்த புல எண் தவிர இதர புல எண்கள் உள்ளதால் தற்போது உள்ள உரிமையாளர்களுக்கு (புதியதாக பதிவு செய்த உரிமையாளர் உட்பட) வேறு ஏதேனும் பட்டா இதே கிராமத்தில் உள்ளது எனில் yes என்றும் அவ்வாறு பட்டா ஏதும் இல்லை எனில் No கிளிக் செய்யவும். Yes என கிளிக் செய்கையில் பட்டா எண் கேட்கும். பட்டா எண் பதிவு செய்தவுடன், உரிமையாளர் பெயர் கணினியில் தெரியவரும்.உரிமையாளர்கள் விவரம் சரியாக உள்ளது எனில் yes, save & exit கிளிக் செய்திடவும். தவறு எனில் No, save & exit கிளிக் செய்திடவும்.

தல ஆய்வின் போது பெற்ற மூல ஆவணங்கள் விவரத்தினை link documents என்ற பகுதி.க்குள் பதிவு செய்ய வேண்டும். இப்பகுதியில் ஒவ்வொரு புல எண் வாரியாக பதிவு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்கள் இருப்பின் அனைத்து ஆவணங்களின் விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்
 (ஆ) மண்டல துணை வட்டாட்சியர் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்.

1. கிராம நிர்வாக அலுவலரால் பரிந்துரை செய்யப்பட்ட விவரங்களுடன் கூடிய மனு மண்டல துணை வட்டாட்சியர் / தலைமையிடத்து துணை வட்டாட்சியருக்கு  இணையதளம் மூலம் பரிமாற்றம் செய்யப்படும்.

2. மண்டல துணை வட்டாட்சியர் / தலைமையிடத்து துணை வட்டாட்சியர்  இணைய வழிசான்றிதழுக்கு ஏற்கனவே பயன்படுத்தி வரும் உபயோகக் குறியீடு (User Name) மற்றும் கடவுச்சொல்லை (password) இணையவழி பட்டா மாறுதலுக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

3. மண்டல துணை வட்டாட்சியரின் முகப்பு பக்கத்தில் (Patta Applications) எதிரில் உள்ள எண்ணை click செய்யவும். இவற்றில் மனு எண் வாரியாக வரிசைப்படுத்தப்பட்டு காணப்படும்.

4. மண்டல துணை வட்டாட்சியர் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மனுதாரரின் மனு, புதிய பட்டாதார் பெயர் விவரம், கிராம அலுவலரின் பரிந்துரை மற்றும் வருவாய் ஆவண சிட்டா பதிவுகளில் உள்ள அனைத்து விவரங்களையும் கணினியில் பார்வையிடுவார். ZDT Remarks clickசெய்து, மனு ஏற்கப்படுகிறதா என்பதை Yes or No தேர்வு செய்து click செய்யவும்.

5. கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரை மற்றும்ஆவணங்கள் ஏற்புடையதாக இருப்பின் பட்டா மாறுதலை. மண்டல துணை வட்டாட்சியர்அங்கீகரிக்கலாம். இவ்வாறு அங்கீகாரம் செய்யப்படும்போது, ‘அ’ பதிவேடு மற்றும் சிட்டாஆகியவற்றின் பதிவுகளில் மண்டல துணை வட்டாட்சியரின் இலக்க முறைச் சான்று (Digital Signature) ஏற்கனவே சான்றிதழ்களில் செய்வது போல ஒப்பம் செய்யப்பட வேண்டும்.

6. மண்டலத் துணை வட்டாட்சியர் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரை மற்றும், ஆவணங்களின்படி மேற்படி பட்டா மாறுதல் தகுதி பெறவில்லை என கருதினால் ZDT Remarks ல் NO click செய்து, பட்டாமாறுதல் மனு நிராகரிக்கலாம். அவ்வாறு நிராகரிக்கப்படும் போது அதற்கான உரிய காரணங்கள் துணை வட்டாட்சியரால் மேற்படி கணினி பதிவுகளில் உரிய காரணத்தினை தர்வு செய்து பதிவு செய்யப்பட வேண்டும்.

7. புதிய பட்டா எண் விபரம் மற்றம் பட்டா மாற்ற ஆணை ஆகியன உருவாக்கப்பட்டு மண்டல துணை வட்டாட்சியர் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் முகப்பு பக்கத்தில் அந்த மனுவிற்கு எதிரே காணப்படும். தேவைப்படின் பட்டா ஆணையினை கணினி முலம் பார்வையிட்டு உறுதி படுத்திக்கொள்ளலாம்.

III. உட்பிரிவு கூடிய பட்டா மாறுதல் மனு மீதான நடவடிக்கைகள்:

(அ) பொது சேவை மைய நடவடிக்கைகள்

1. பொது சேவை மையத்தில் கொடுக்கப்படும் மனுஉட்பிரிவு மனுவாக இருக்கும் பட்சத்தில்,ஏற்கனவே முழு பட்டா மாறுதல் மனுபெறப்படுவதற்கு என்னென்ன நடைமுறைகள்பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறைகளைபின்பற்றி உட்பிரிவு மனுக்கள் பொதுசேவைமையங்களில் பெறப்படும்.

2. உட்பிரிவு மனு பதிவு செய்யப்படும் போதுவிற்பனை செய்யப்பட்டுள்ள பரப்பு (Transacted Area)விவரம் பதிவு செய்யப்பட வேண்டும்.

3. இந்த மனுக்கள் பொது சேவை மையங்களின்மூலம் பதிவு செய்யப்பட்டு, (e-version) இணையவழிமாற்றம் மூலம் குறுவட்ட அளவளருக்கு மாற்றம்செய்யப்படும்.

4. பட்டா மாறுதல் தொடா¢பான விவரங்கள் மற்றும்ஆவணங்கள் பதி வேற்றம் செய்தவுடன் மனு சமா¢ப்பித்ததும் (submit) இந்த மனுவிற்கானவிண்ணப்ப எண் மற்றும் ஓப்புகையுடன் கூடியவிண்ணப்ப படிவம் உருவாக் கப்படும். இதனைநகல் எடுத்து ஒப்புகை சீட்டினை(ACKNOWLEDGEMENT) பொதுசேவை மைய கணினிஇயக்குபவர் ஒப்புதல் செய்து மனுதாரருக்குஅளித்திட வேண்டும்.

ஆ. குறுவட்ட அலுவலர்  நடவடிக்கைகள்

1. குறுவட்ட அளவர் இதற்கென தற்போதுவழங்கப்படும் உபபோகக் குறியீடு மற்றும்கடவுச்சொல்லை (Password) கொண்டுஇணையதளத்தின் மூலம் அந்த குறுவட்டத்தில்பெறப்பட்ட மனுக்களை பார்வையிடலாம்.

2. பொதுசேவை மையத்திலிருந்து மாற்றம்செய்யப்பட்ட மனுக்கள், Sub-division patta transfer, click செய்ய To be scheduled என்ற பகுதிக்குள் மனுஎண் (Application ID) வாரியாக வா¤சைப்படுத்தப்பட்டு அட்டவணை இடப்பட்டுகாணப்படும்.

3. மேற்படி மனுக்களை பார்வையிட்ட குறுவட்டஅளவர் முதுநிலை அடிப்படையில் முன்னுரிமைகொடுத்து, ஒரே கிராமத்தில் ஒன்றுக்கு மேற்பட்டமனுக்கள் இருக்கும்பட்சத்தில் ஒரே நாளில் அந்தகிராமத்தில் உள்ள மனுக்களை முடிவு செய்யதீர்மானிக்கலாம்.

4. மேற்படி அட்டவணை மனுக்களில் எந்தமனுவின்மீது நடவடிக்கை எடுக்கிறாரோ, அந்தமனுவை தேர்வு செய்தபின், மனுதாரரின் விவரம்,அத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலஆவணங்களின் நகல்கள் மற்றும் மனுதார் பட்டாமாறுதல் கோரும் சர்வே புலத்தின் தற்போதுள்ளஉரிமை யாளா¢களின் பட்டா எண், சர்வே எண்போன்ற விவரங்கள் குறுவட்ட அளவரின்பரிசீலனைக்கு கணினியில் தெரிய வரும். 

5. மேற்காணும் விவரங்களை பா¤சீலனைசெய்தபின்னர், மனு தொடர்பாக தல ஆய்வு செய்யதேதி குறிப்பிட்டு, தல ஆய்வின்போது ஏதேனும்ஆவணம் தேவைப்படின் அதன் விவரத்தினைகுறிப்புக் கலத்தல் தெரிவிக்க வேண்டும். இநதவிவரம் குறுஞ்செய்தியாக மனுதாரருக்குசென்றடையும்.

6. இதன் பின்னர் மனுவானத Scheduled Applicationஎன்ற பகுதிக்குள் மனு எண் வாரியாக வரிசைப்படுத்தப்பட்டு காணப்படும்.

7. தகவல் தெரிவித்த நாளில் குறுவட்ட அளவர்கிராமத்திற்கு சென்று ஒவ்வொரு மனுவாகபுலத்தணிக்கை செய்யப்பட வேண்டும். புலத் தணிக்கையின்போது மனுதாரர்களுடைய அசல்ஆவணங்களையும், மூல ஆவணங்களையும்பார்வையிட்டு, மனுதாரர்களுடைய புல அனுபவஅத்துக் களின்படி அளந்து உட்பிரிவு செய்யவேண்டும். அளவை செய்தபின் உட்பிரிவுபடிவத்திலும் (Sub division statement)மனுதாரர்களிடம் கையொப்பம் பெற்றுக் கொள்ளவேண்டும். ஒரு மனுவில் இரண்டு உட்பிரிவுகள்இருக்கும் பட்சத்தில் இரண்டுபட்டாதாரர்களிடத்திலும் உட்பிரிவு படிவத்தில் (Sub-division statement) கையொப்பம் பெறப்படவேண்டும்.

8. ஆவணங்களின் நகல்கள் அனைத்தும் அசல்ஆவணத்துடன் ஒப்பிட்டு பெற்றுக் கொள்ளவேண்டும்.

9. குறுவட்ட அளவர் மேற்படி ஆவணங்கள் மற்றும்பூமியில் உள்ள அத்துக் களின்படியும், புதியஉட்பிரிவுகளை அளவு செய்த பின்னர்,உட்பிரிவுக்கான புலப் படங்களை தயார் செய்யவேண்டும். குறுவட்ட அளவர் தனது Loginல் உள்ளமனு தேர்வு செய்ய முதலில் Land Remarks clickசெய்து Approve செய்ய Yes click செய்து Save செய்யவேண்டும்.

10. தற்போது கணினியில் குறுவட்ட அளவர்பக்கத்தில், மனுவினை திறந்து (open) புல எண்உட்பிரிவு மீது (Click here to add sub division details)என அழுத்தியவுடன்  எத்தனை புதிய உட்பிரிவுகள்தோற்றுவிக்கப்பட வேண்டும் என பதிவு செய்து tab click செய்ய வேண்டும்.          

11. புதிய உட்பிரிவுகளுக்கு தற்காலிக எண் (T1, T2 etc.,) கணினியால் வழங் கப்படும். T1ன் பரப்புபதிவு செய்து, வேறு புல எண்ணுடன் சேர்க்கவேண்டுமா, (Grouping) இல்லையெனில்  No என்றுclick செய்ய, பழைய பட்டாதாரரின் பட்டா எண்ணைபதிவு செய்து tab click செய்தவுடன் (Add sub-division details) click செய்யவேண்டும். பின்னர் T2ன் பரப்பு,தீர்வை பதிந்து Grouping பட்டாவிற்கு No click செய்தவுடன் புதிய பட்டா எண் என தேர்வு செய்து add, click செய்தால் புதிய உட்பிரிவிற்கு உண்டான பெயர் பதிவு செய்து, add owner detail click செய்ய வேண்டும். இதில் புலத்தில் அளவீடு செய்தவாறு ஒவ்வொரு உட்பிரிவுக்கு மான பரப்பு மற்றும் தீர்வை பதிவுசெய்ய வேண்டும். Move to application page, click  செய்ய வேண்டும். 

12. பின்னர் முல ஆவண விவரம் (Link/Parent Deed)பதிவு செய்து add செய்யவும். விடுபட்ட ஆவணம்இணைக்கப்பட்டதா என click செய்து, உட்பிரிவுஆவணம் தயாரித்த தேதி, LRD-இடம்  மனுவைஅனுப்பும் தேதி தோ¢வு செய்து, மேற்படி நிலம், நிலஉச்சவரம்பு, பஞ்சமி, நீதிவழக்கில் உட்படவில்லைஎன சான்று அளித்து click செய்ய confirmation viewதோன்றும். உறுதிபடுத்தி confirm செய்தால் LRDக்குforward செய்யப்படுகிறது.

13. தொடர்புடைய பட்டா மாறுதல் சா¤யாகஇருக்குமேயானால் அதனை பரிந்துரை செய்தும்,அல்லது பட்டா மாறுதல் கோரும் மனுஏற்புடையதாக இல்லை எனில், அதற்கானகாரணத்தை குறிப்பிட்டும் தனது பரிந்துரையினைகுறிப்புக் கலத்தில் தெரிவித்து நில ஆவணவரைவாளர் (LRD) / முதுநிலை வரைவாளர் (Senior Draughtsman)-க்கு forward செய்யவேண்டும்.

14. கையினால் தயாரிக்கப்பட்ட புலப்பட நகலை(sketch) வட்ட அலுவலகத் திலுள்ள நில ஆவணவரைவாளர் (LRD) அல்லது முதுநிலை வரைவாளர்(Senior Draughtsman) இடம் ஒப்படைக்க வேண்டும்.

இ). நில ஆவண வரைவாளர் / முதுநிலை வரைவாளர்  (LRD / Senior Draught man) மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்

1. முதுநிலை வரைவாளர் அவருடையகடவுச்சொல்லை பயன்படுத்தி குறுவட்ட அளவர்சமர்ப்பித்த ஆவணங்களைக் கொண்டு, கணினிபதிவு களையும் சரிபார்த்த பின்னர், குறுவட்டஅளவரால் பரிந்துரை செய்யப்பட்ட புதியஉட்பிரிவுகள், ஏற்கனவே குறுவட்ட அளவர்தன்னிடம் அளித்த வரை படத்துடன் கூராய்வுசெய்ய வேண்டும். Land Remarks என்ற குறிப்புதேர்வு செய்து மனு ஏற்கப்படுகிறதா, தள்ளுபடிசெய்யப்படுகிறதா என்ற மனுவின் நிலையைமுடிவு செய்து, Yes click செய்து, save click செய்யவும்.

2. புதிய உட்பிரிவுகள் ஏற்கத்தக்கது என்றால்,அதன் வரைபடத்தினை எடுத்து (scan) செய்து JPEGவடிவில் பதிவேற்றம் (upload) செய்யவேண்டும்.

3. இவ்வாறு வரைபடத்தினை வருடுதல் (scanning)செய்யும்போது, (*JPEG) வடிவத்தில் கோப்பினைsave செய்யவேண்டும். கோப்பின் அளவு 400 KB மிகாமல் இருக்க வேண்டும்.

4. குறுவட்ட அளவர் பதிவு செய்த பரப்பில் ஏதேனும்மாற்றம் இருப்பின், நில அளவை கையேட்டில்(survey manual) உள்ள வழிகாட்டுதலின்படி திருத்தம்செய்யலாம்.

5. பின்னர் குறிப்பு கலத்தில் தனது பா¤ந்துரைபதிவு செய்து வட்ட துணை ஆய்வாளருக்குமாற்றம் செய்து confirm click செய்தால், ஆவணம்பெறப்பட்ட தேதி, கூராய்வு தேதி, புலப்படம்பெறப்பட்ட தேதி, ஆகிய குறிப்புகள் பதிவு செய்துForwarded to DIS click செய்ய, கோப்பு DISக்கு forwardசெய்யப்படும்.

(ஈ) வட்டத்துணை ஆய்வாளர் மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகள்.

1. நிலஆவண வரைவாளர்/முதுநிலைவரைவாளரால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவினைவட்டத்துணை ஆய்வாளர் தனது கணினி மூலம்தனது கடவு சொல்லை (Password)  உபயோகித்துபார்வையிடலாம். Land Remarks click செய்து approve வில் Yes தேர்வு செய்து save click செய்ய வேண்டும்.

2. உட்பிரிவு ஆவணங்கள் மற்றும் மனுதாரரால்சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை கவனமாகபரிசீலனை செய்து, புதிய பட்டாதார் பெயர், புதியஉட்பிரிவுக்கான அளவீடுகள் ஆகியன சரியாகபதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதனை ஆய்வுசெய்ய வேண்டும்.

3. பின்னர் குறுவட்ட அளவரால் வழங்கப்பட்டுள்ளதற்காலிக உட்பிரிவு எண்களுக்கு புதியஎண்மாணம் (Notation) நில அளவை கையேட்டில்(Survey Manual) தெரிவிக்கப்பட்டுள்ளவழிகாட்டுதலின்படி நிர்ணயம் செய்து confirm clickசெய்ய வேண்டும்.

4. உட்பிரிவு கட்டணம் செலுத்திய தொகை, நாள்,மற்றும் வங்கி விவரம் இருப்பின் பதிவு செய்துஆய்வு செய்த தேதி, குறிப்பு பதிவு செய்து, Forward to Tahsildar click செய்ய வேண்டும்.

5. அதன் பின்னர் பட்டா மாறுதல் சரியாகஇருக்குமேயானால் ஏற்பு செய்தும், தவறாகஇருப்பின் Land Remarksல் No தோ¢வு செய்து,காரணத்துடன் பரிந்துரையை தனது குறிப்புடன்இணையவழி மூலம் வட்டாட்சியருக்கு மாற்றம்செய்யப்பட வேண்டும். 

6. எண்கள் மற்றும் பரப்பளவு ஆகியவைகளைபதிவு செய்து கூராய்வை முடித்து வட்டத்துணைஆய்வாளர் கணினியில் தன்னுடைய கடவுச் சொல்லை பயன் படுத்தி மேற்படி உட்பிரிவுகோப்பை இணையவழி மூலம் வட்டாட்சியருக்குமாற்றம் செய்யப்படவேண்டும்

(உ) வட்டாட்சியர் மேற்கொள்ள வேண்டியநடைமுறைகள்.

1. இணையவழி சான்றிதழுக்கு ஏற்கனவேபயன்படுத்தி வரும் உபயோகக் குறியீடு (User Name) மற்றும் கடவுச்சொல்லை (password)இணையவழி பட்டா மாறுதலுக்கும்பயன்படுத்திக்கொள்ளலாம்.     

2. THL Remarks என்ற குறிப்பினை தேர்வு செய்துமனு ஏற்கப்படுகிறதா, தள்ளுபடிசெய்யப்படுகிறதா என்ற மனுவின் நிலையைமுடிவு செய்து கோப்பு பெறப்பட்ட மற்றும் கூராய்வுசெய்த தேதியினை தோ¢வு செய்து, save clickசெய்யவும்.

3. பத்திர ஆவணம், வில்லங்கச்சான்று, மூலஆவண விவரம் ஆகியன பா¤சீலனை செய்துகுறுவட்ட அளவரால் பதிவு செய்யப்பட்டுள்ள பட்டா தாரரின் பெயர், பரப்பளவு, மற்றும் உட்பிரிவுவிவரங்கள் வரைபடத்தில் உள்ளவாறும்,ஆவணங்களின் படியும் சரியாக இருந்தால், பட்டாமாறுதல் ஆணையை பிறப்பிக்க வேண்டும்.

4. இவ்வாறு அங்கீகாரம் செய்யப்படும்போது, ‘அ’பதிவேடு மற்றும் சிட்டா ஆகிய இரண்டுபதிவுகளில் வருவாய் வட்டாட்சியரியன்இலக்கமுறை சான்று (Digital Signature) ஏற்கனவேசான்றிதழ்களில் உள்ளதுபோல ஏற்படுத்தப் படும்.

5. வட்டாட்சியரால் அங்கீகரிக்கப்பட்டகோப்புகளுக்கு தானாகவே (Automatic Generation)கணினியில் 8A எண் வழங்க Generate form 8A number-ஐ click செய்து confirm செய்தால், மனுஏற்கப்படும்.

6. வட்ட துணை ஆய்வாளரின் பரிந்துரை மற்றும்ஆவணங்களின்படி மேற்படி பட்டா மாறுதல் தகுதிபெறவில்லை எனக் கருதினால் THL Remarks-ல் No-ஐ click செய்து, தக்க காரணத்துடன் பட்டா மாறுதல்மனு நிராகரிக்கப்படும். 

7. மனு ஏற்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்டவிவரம் மனுதாரருக்கு குறுஞ் செய்தியாக (SMS)தெரிவிக்கப்படும்.

8. Manual உட்பிரிவு கோப்புகளையும், கணினியில்பெறப்படும் உத்தரவு களையும் ஒன்றாகஇணைத்து 8A எண் வாரியாக ஒவ்வொருகோப்பாக பதிவறையில் ஒப்படைத்து ஒப்புதல்பெறப்பட வேண்டும்.

IV. கிராம கணக்குகளில் மாறுதல்கள்மேற்கொள்ள வேண்டிய முறைகள்.

1. ஒவ்வொரு வாரமும் துணை வட்டாட்சியா¢மற்றும் வட்டாட்சியரால் பிறப்பிக்கப்பட்டஆணைகளின் நகல்களை ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாகஅலுவலருக்கு கிராம கணக்குகளில் மாற்றம்செய்திட அனுப்பி வைக்கவேண்டும்.

2. உட்பிரிவுடன் கூடிய மாறுதல்கள் எனில்,கணினியில் வழங்கப்பட்ட 8A எண் விவரத்தினைகுறுவட்ட அளவரால் (Manual copy) தயாரிக்கப்பட்டஉட்பிரிவு ஆவணங்கள் மற்றும் 8A பதிவேட்டில்பதிந்து, பட்டா மாற்றம் ஆணை நகலுடன் மீண்டும்குறுவட்ட அளவருக்கு அனுப்பி கிராமத்தில்பராமரிக் கப்படும் அ பதிவேடு, சிட்டா மற்றும்புலப்பட சுவடியில் மாறுதல் செய்யப் படவேண்டும்.

3. ஒவ்வொரு வாரமும் கிராம நிர்வாக அலுவலா¢கள் கிராம கணக்குகளில்மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல்களை மண்டலதுணை வட்டாட்சியரிடம் காண்பித்து ஓப்புதல்பெற்றுக்கொள்ள வேண்டும்.

4. கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளவிவரத்தினை மண்டல துணை வட்டாட்சியர் /வட்டத்துணை ஆய்வாளா¢கள் கண்காணித்திடவேண்டும்

V. பொது குறிப்புகள்

1. மனுவின் தற்போதைய நிலையினை அந்தந்தபொது சேவை மையத் திலேயே மனுதார் தெரிந்துகொள்ளலாம்.

2. மண்டல துணை வட்டாட்சியர் அல்லதுவட்டாட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் பொதுசேவை மையங்களில் கணினி வழியில் பட்டாநகல் மனுதாரருக்கு வழங்கப்படவேண்டும்.

3. பட்டா நகல் மற்றும் பட்டா மாற்றம் ஆணையில்இணைய வழி சான்றித ழில் உள்ளதுபோல் QR CODE அச்சிடப்பட்டிருக்கும். ஆகவே, பட்டா நகல்வழங்கும் போது துணைவட்டாட்சியர் கையொப்பம்இடவேண்டிய அவசியம் இல்லை. அதே போல்பட்டா மாற்றம் ஆணையிலும் கையொப்பமிடவேண்டிய அவசியமில்லை.

4. பதிவுத்துறையின் அனைத்து செயல்பாடுகளும்கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. பட்டாமாறுதலுக்கான ஆவணங்கள் புதியதாக பதிவுசெய்யாமல் ஏற்கனவே இருக்கும் IGR மற்றும்வருவாய்த்துறை பதிவுகளில் இருந்து கணினிமூலம் நேரடியாக பெறப்பட வழிவகை செய்யப்படஉள்ளது. பதிவுத் துறையின் மூலம் கணினியில்ஒருங்கிணைப்பு பதிவு செய்யப்படும் வரைதற்காலிக ஏற்பாடாக கீழ்க்கண்ட நடைமுறைபின்பற்றப்படும்.

சார் பதிவாளர் அலுவலகங்களிருந்து பெறப்படும் மனுக்கள் (STR)

(i). சார் பதிவாளர் அலுவலகங்களிலிருந்து பெறப்படும் பட்டா மாறுதல் மனுக்கள் (STR)அனைத்தும் கூடுதல் தலைமைச் செயலாளர் / நில நிர்வாக ஆணையர் அவர்களின் அறிவுரைப்படி பராமரிக்கப்படும் தனிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். 

(ii). ஒவ்வொரு STR மனுக்களில் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மனுதாரருக்கும் ஒரு CAN-ID பதிவு செய்யப்பட வேண்டும். பின்னர், விண்ணப்பங்களை இணையதள பட்டா மாறுதல் மென்பொருளில் நில அளவைத் துறையின் மூலம் வட்ட அலுவலகத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள கணினி இயக்குபவர்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். (பொது சேவை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் மேலே சொல்லப்பட்டவாறு கடைபிடிக்க வேண்டும். அதேபோல் வருவாய்த்துறை அலுவலர்களும் விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கையினை மேலே சொல்லியவாறு செய்ய வேண்டும்)

(iii). ஒவ்வொரு மனுவிற்கான விண்ணப்ப எண்ணை (Application ID) தனி பதிவேட்டில் அந்தந்த மனுவிற்கு எதிரே குறிப்பிட வேண்டும். 

(iv). மனு ஏற்பு அல்லது நிராகரிப்பு செய்யப்பட்ட விவரம் தனிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். 

(v). பட்டா மாறுதல் கோப்பு பராமரிக்கும் உதவியாளருக்கு வழங்கப்பட்டுள்ள உபயோகக் குறியீடு மூலம் பட்டா மாறுதல் ஆணைகளை அச்சு செய்து, அதில் வழங்கப்பட்டுள்ள 8A விவரத்தினை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். 

(vi). பின்னர் பட்டா மாறுதல் ஆணை மற்றும் உட்பிரிவு ஆவணங்கள் ஆகிய வற்றினை ஒன்றாக இணைத்து 8A எண் வாரியாக பதிவறையில் ஒப்படைக்க வேண்டும். 

(vii) உட்பிரிவு அல்லாத இனங்களுக்கு பட்டாமாறுதல் ஆணையில் உள்ளவாறு பட்டா எண் விவரத்தினை தனிப் பதிவேட்டில் அந்தந்த மனுவிற்கு எதிரே குறிப்பிட வேண்டும். 

(viii). மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பின் அதற்கான ஆணை நகலினையும் அச்சு செய்து, அதன் விவரத்தினை தனிப் பதிவேட்டில் அந்தந்த மனுவிற்கு எதிரே குறிப்பிட வேண்டும்.

Saturday, April 21, 2018

000035. தமிழக அரசு அலுவலர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன்...

நடத்தை விதிகள் என்றால் என்ன?

அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ள நடைமுறைகள் மற்றும் விதிகளை அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சொத்து வாங்குதல், விற்றல், நிதி ஆதாரங்கள் உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசுக்கு முறைப்படி தெரிவித்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை பணிபுரிபவர்கள் கடைபிடிப்பதற்காக தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1976 உருவாக்கப்பட்டது.

இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) &  (6) ன் கீழ்க்கண்டவர்கள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்.

தந்தை / வளர்ப்பு தந்தை

தாய் / வளர்ப்பு தாய்

கணவன்

மனைவி

மகன் / வளர்ப்பு மகன்

மகள் / வளர்ப்பு மகள்

சகோதரன்

சகோதரி

மனைவியின் தாய் மற்றும் தந்தை

கணவரின் தாய் மற்றும் தந்தை

சகோதரனின் மனைவி

சகோதரியின் கணவர்

மகளின் கணவர்

மகனின் மனைவி

இந்த உறவுமுறைகள் அனைத்தும் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்படுவர்.

உயர்கல்வி பெறுவது தொடர்பான அரசாணை :

தொலை தூரக் கல்வி, மாலை நேரக் கல்லூரி மற்றும் தனியாக படிக்க அரசு ஊழியர், தன் துறை தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி விண்ணப்பம் கிடைத்த 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அந்த விவரங்கள் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படவில்லை என்றால் கல்வி பயில்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசு ஊழியர் கருதிக் கொள்ளலாம்.

அரசாணை எண்  Ms. No - 200, P & A. R, dt - 19.401996 ன்படி அரசுப் பணியை தவிர எந்த பணியையும் அரசு ஊழியர் ஏற்கக் கூடாது.

அரசு ஊழியர் எவரும் பகுதி நேர வேலை எதையும் செய்யக்கூடாது. ( G. O. Ms - 893,P &  A. R, dt - 22.9.1983 மற்றும்  Rule 8(1)(aa)).ஆனால் Provision 6 under Rule 8(1)(a) ல் கண்டுள்ள விலக்களிப்பின்படி அரசு ஊழியர் ஒருவர் கல்வி நிலையங்களில் விரிவுரையாற்றி அதற்கென மதிப்பூதியம் பெறலாம்.

தனியாக வகுப்பு நடத்துதல் :

எந்த ஆசிரியரும் தனிவகுப்பு(Tution) நடத்தக்கூடாது. Tution  நடத்தும் எண்ணத்துடன் மாணவரிடமோ, அவருடைய பெற்றோரிடமோ அல்லது பாதுகாவலரிடமோ எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இருப்பினும் பணம் எதுவும் பெறாமல் மாணவர்களுக்கு Tution எடுக்க தடை ஏதும் இல்லை. (Rule 6(17).

விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்பு :

அலுவலக வேலைக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒருவர் விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்கலாம். ஆனால் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அலுவலகத் தலைவர் அறிவுறுத்தினால் அதுபோன்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது. (Provision 1 under rule 8(1)(a)).

அசையாச் சொத்து தொடர்பான விதிகள் :

அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் சொந்த வருவாயிலிருந்து ஒரு சொத்தை கையகப்படுத்துவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ எவருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால் அரசு ஊழியரே குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஒரு சொத்தை கிரையமாக பெற்றால் அதற்கு துறைத் தலைவரின் அனுமதியை பெற வேண்டும். ( G. O. Ms - 3158, Public (service - A) Dept, dt - 27.9.1974).

அரசு வேலையில் இருக்கின்ற கணவன், மனைவி இரு சேர்ந்து ஒரு சொத்தை கிரையம் வாங்கினால் அதன் விவரத்தை துறைத் தலைவருக்கு இருவரும் தனித்தனியாக தெரிவிக்க வேண்டும். ( Govt. Lr. No. 29546/80-4 P & A. R, dt - 22.10.1980).

மூதாதையர் சொத்து ஒன்று வாரிசுரிமையின் படி இறங்குரிமையின் மூலம் கிடைக்கும் தருவாயில் அந்த நிகழ்வை துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டாம். சொத்து அறிக்கையில் மட்டும் காட்ட வேண்டும். (Rule 7(3).

அரசு ஊழியர் பணிபுரியும் மாவட்டத்தில் எந்த சொத்தையும் கையகப்படுத்தக்கூடாது. முன்னர் பணிபுரிந்த மாவட்டமாக இருந்தால் இடம் மாறுதல் பெற்று 2 ஆண்டுகள் கடந்த பின்னர் தான் சொத்து ஒன்றினை கையகப்படுத்த வேண்டும் . ( Rule 7(14).

இருப்பினும் வீடு அல்லது வீட்டுமனை ஒன்றினை பணிபுரியும் அல்லது பணிபுரிந்த மாவட்டத்தில் வாங்கவோ அல்லது விற்கவோ தடையில்லை. (Provision under rule 7(14)(a).

வருவாய்த்துறை அல்லது நிதித்துறையில் பணிபுரிபவர்கள் அத்துறையில் நடத்தப்படும் அசையும் அல்லது அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையகப்படுத்தக்கூடாது. (Rule 7(16).

Record Sheet அல்லது Personal File - ஐ பராமரித்து வரும் அதிகாரி ஊழியர்களின் சொத்து விவரங்களையும் ஒரு பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். ( Rule 7(9).

கீழே குறிப்பிட்டுள்ள தொகைக்கும் அதிகமாக சொத்து வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த Rule 7(2) as amended in G. O. Ms. No - 39, P & A. R. dt - 9.3.2010.

A Group Employees may Purchase upto Rs. 80,000/-

B Group Employees may Purchase upto Rs. 60,000/-

C Group Employees may Purchase upto Rs. 40,000/-

D Group Employees may Purchase upto Rs. 20,000/-

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை, 5 ஆண்டுகள் முடிவில் சொத்து அறிக்கை ஒன்றை துறைத் தலைவரிடம் தாக்கல் செய்ய வேண்டும். (Rule 7(3)).

அரசு ஊழியரின் அரசியல் செல்வாக்கு :

அரசு ஊழியர்கள் பொதுவாக அரசியல் செல்வாக்கு கொண்டு வருதல் அல்லது அமைச்சர்களிடம் முறையிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர் எவரேனும் அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அவரை அலுவலகத் தலைவர் கூப்பிட்டு தவறு என்று அறிவுறுத்த வேண்டும். அந்த அறிவுரையை பொருட்படுத்தாமல் இரண்டாவது முறையாக ஒரு அரசு ஊழியர் திரும்பவும் அரசியல் செல்வாக்கை கொண்டு வந்தால் அவரை துறைத் தலைவர் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதற்கு பின்னரும் அரசு ஊழியர் தொடர்ந்து அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அந்த அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். (Govt. Letter No  9637/A/95-1,P & A. R. (A) Dept, dt - 24.4.1995).

அலுவலக பிரச்சினை தொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்யலாம். பின்னர் அந்த முறையீடு விவரத்தை அலுவலகத் தலைவர் வழியாக துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். (G. O. Ms. No - 9, P & A. R (A) Dept, dt - 2.10.1985).

000034. காசோலையைப் பற்றி

காசோலை என்றால் என்ன?

காசோலை என்பதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காசோலை என்றால் என்ன? என்பதைத் தெரியாத பாமர மக்கள்கூட இன்று காசோலைகளை சர்வ சாதாரணமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களிடம் காசோலையை செக் என்று சொன்னால்தான்  அவர்களுக்குத் தெரியும். 

ஒரு வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ அல்லது ஒருநிறுவனத்திற்கோ ரொக்கமாக அதே நேரத்தில் பாதுகாப்பாக பணத்தைச் செலுத்துவதற்கு, அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படுவது காசோலை ஆகும். இன்றைய சூழலில் ஆன்லைன் மூலமாகவும், கிரடிட் கார்டு மூலமாகவும் பணப்பரிமாற்றம் நடந்து வந்தாலும் காசோலைகளின் பயன்பாடு குறையவில்லை. அந்த காசோலை பற்றிய தகவல்களை இங்கு காண்போம்.

மாற்றத்தக்க ஆவணச் சட்டம் (Negotiable Instruments Act)

காசோலை பற்றி  மாற்றத்தக்க ஆவணச் சட்டம் பிரிவு 6-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.  காசோலையை பொறுத்த வரையில் அது 

(1) (Drawer) காசோலை எழுதிக் கொடுப்பவர்,
(2) (Payee) காசோலையை பெற்றவர்,
(3) (Drawee) காசோலைக்கு பணம் அளிப்பவர் 

என்ற மூன்று நபர்கள் சம்பந்தப்பட்டதாகும். மேற்கண்ட மூவருக்குமே இதில் முக்கிய பொறுப்புகள் உண்டு.

காசோலை அளிப்பவருக்குள்ள (Drawer) பொறுப்புகள் என்ன?

1 ஒருவருக்கு காசோலை அளிப்பதற்கு முன், வங்கியில் உள்ள தனது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விபரத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

2. காசோலையில் நிரப்புகின்ற தொகை இருப்புத் தொகையைவிட குறைவாக இருக்க வேண்டும்.

3.  காசோலையில் தேதி கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

4. பணம் பெறுகின்றவரது பெயர் அல்லது நிறுவனத்தின் பெயர்,  ஊர் கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும். 

5. தனி நபர் ஒருவருக்கு காசோலை மூலமாக பணம் அளிப்பதாக இருந்தால் அந்தக் காசோலையின் இடது பக்க மேல் மூலையில் மறக்காமல் குறுக்குக் கோடு (crossed cheque) இட வேண்டும்.

6. அளிக்க இருக்கின்ற தொகையினை அதற்குரிய இடத்தில் எண்ணாலும் எழுத்தாலும் எழுத வேண்டும்.

7. கண்டிப்பாக காசோலையில் மறக்காமல் கையெழுத்து இட வேண்டும். 

8. காசோலைகளின் எந்த இடத்திலும் அடித்தல், திருத்தல் இருக்கக்கூடாது.

9. காசோலைகளில் எழுதப்படுகின்ற எழுத்துக்கள் தெளிவாகவும் அழுத்தமாகவும் இருக்க வேண்டும்.

10. ஒரு காசோலையில் வேறு வேறு பேனாக்களின் மூலமாகவோ, வேறு வேறு வண்ண மைகளைக் கொண்டோ எழுதக்கூடாது.

11. நீங்கள் கொடுத்த காசோலை தொலைந்துவிட்ட தகவல் உங்களுக்கு கிடைத்தவுடன் அந்த காசோலைக்கு பணம் அளிக்க வேண்டாம் (Stop Payment) என்று வங்கிக்கு எழுத்து மூலமாகவும் அறிவிக்க வேண்டும்.

காசோலை பெற்றவருக்குள்ள (Payee) பொறுப்புகள் என்ன?

1.  காசோலை பெற்றவுடன் அதனைப் பெற்ற நாள், அதனை வழங்கிய நபர், காசோலையின் எண், வங்கியின் பெயர்,  அதில் எழுதப்பட்டுள்ள தொகை ஆகியவற்றை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். 

2. பெற்ற காசோலையில் உள்ள தேதியை முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்தத் தேதிக்குப் பின்னரே அதனை அந்த வங்கியில் அளித்து தொகையைப் பெற முடியும்.

3. காசோலையில் குறிப்பிட்டுள்ள தேதியில் இருந்து மூன்று மாத காலத்திற்குள் அதனை பயன்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் அது செல்லாதது ஆகிவிடும்.

4. காசோலையின் பின்புறம் கையெழுத்து இட வேண்டும். குறுக்குக் கோடிட்ட காசோலையாக இருந்தால் அந்தக் காசோலையின் பின்புறத்தில் அந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருந்தால், உங்கள் வங்கிக் கணக்கின் எண்ணையும் எழுத வேண்டும். 

5. காசோலை அளிக்கப்பட்ட வங்கியில் உங்களுக்கு கணக்கு இல்லை என்றால், உங்களுக்கு எந்த வங்கியில் அக்கவுண்ட் உள்ளதோ அந்த வங்கியில் அந்தக் காசோலையை செலுத்தி பணம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், சில நாட்கள் கழித்தே பணம் உங்கள் அக்கவுண்டிற்கு வந்து சேரும்.

6. பெற்ற காசோலை தொலைந்துவிட்டால், அதனை உடனடியாக காசோலை வழங்கியவருக்கும், வங்கிக்கும் தெரியப்படுத்த வேண்டும்

காசோலைக்கு பணம் அளிப்பவருக்குள்ள (Drawee) பொறுப்புகள் என்ன?  

1. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்குக் குறைவாக அதனை கொடுத்தவர் அக்கவுண்டில் பணம் இருந்தால், அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

2. பெறப்பட்ட காசோலை சந்தேகத்திற்குரியதாக இருந்தால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

3. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு முன்னர் வங்கியில் செலுத்தப்பட்டால் அதற்கு பணம் வழங்க வேண்டியதில்லை.

4. வங்கியின் நேரம் முடிந்த பிறகு கொடுக்கப்படுகின்ற காசோலைக்கு பணம் வழங்க வேண்டியதில்லை.

5. காசோலையில் அடித்தல், திருத்தல் இருந்தால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

6. காசோலையினை வழங்கிய நபர் இறந்திருந்து அந்த செய்தி வங்கி ஊழியருக்கு தெரிந்திருந்தால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

7. காசோலையினை வழங்கிய நபர் அந்த காசோலைக்கு பணம் அளிக்க வேண்டாம் (Stop Payment) என்று வங்கிக்கு அறிவித்து இருந்தாலும் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

8. காசோலையினை வழங்கிய நபர் கணக்கிலிருந்து யாருக்கும் பணம் அளிக்க வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவு போட்டு இருந்தாலும், அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

9. காசோலையினை வழங்கிய நபர் வங்கிக்கு ஏதேனும் பணம் கொடுக்க வேண்டியது இருந்தால், அந்த பற்றுத்தொகைக்கு மட்டுமே அவரது அக்கவுண்டில் பணம் இருந்தால், அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

10. குறுக்குக் கோடு (crossed cheque) இடப்பட்ட காசோலையை கொண்டு வருபவருக்கு அந்த வங்கியில் அக்கவுண்ட் இல்லை என்றால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

11. கையெழுத்து இல்லாத காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.  

12. வேறு வேறு வண்ணங்களில் எழுதப்பட்ட காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

13. முழுமையாக நிரப்பப்படாத காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

14. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மூன்று மாதங்களுக்கு முந்தியது என்றால்,   அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

000033. கலப்பு திருமணம் பற்றி சட்டம் சொல்வது என்ன?

கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண் அல்லது ஆணின் ஜாதி மாறுபடுமா?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு உள்ள அரசு சலுகைகளை அவரை மணந்து கொண்ட, பிற ஜாதியை சேர்ந்தவர் அனுபவிக்க முடியுமா?

கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எந்த ஜாதியை சேர்ந்தவர்களாக கருதப்படுவார்கள்?

கலப்பு திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, குடும்ப சொத்தில் உள்ள உரிமைகள் பாதிக்கப்படுமா?

இவற்றை பற்றியெல்லாம் சட்டம் என்ன சொல்கிறது?

.....................................................................

எந்த ஜாதி அல்லது எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பெரும்பாலான சட்டங்கள் ஒன்றாகவே இருக்கும். 

உதாரணமாக 

குடியுரிமை சட்டம் (Citizenship Act) 
வருமானவரிச் சட்டம் (Income Tax Act) 
சொத்துரிமை மாற்றுச் சட்டம் (Transfer of property Act) 
இந்திய ஒப்பந்தச் சட்டம் (Contract Act) 
இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) 
இந்திய சாட்சிய சட்டம் (Evidence Act) 

மேலும் அவரவர் சார்ந்துள்ள மதம் அல்லது சமையத்திற்கு ஏற்றார் போலும் சில சட்டங்கள் உள்ளது. 

வாரிசுரிமை சட்டம் (Succession Act) 
திருமண சட்டங்கள் (Marriage Act) 

(கவனிக்கவும் - ஜாதி அல்ல, மதம்) 

திருமணத்தை பொறுத்தவரை இந்துக்கள் என்றால் இந்து திருமணச் சட்டமும் (The Hindu Marriage Act) 

கிறிஸ்தவர்கள் என்றால் சிறப்பு திருமணச் சட்டமும் ( Special Marriage Act) 

முஸ்லீம்கள் என்றால் இஸ்லாமிய சட்டங்களும் (Mohammed Law) பொருந்தும். 

அதேபோல் குடும்ப சொத்தில் வாரிசுரிமை கோருவதற்கு 

இந்து என்றால், இந்து வாரிசுரிமை சட்டமும் (The Hindu Succession Act) 

கிறிஸ்தவர்கள் என்றால், இந்திய வாரிசுரிமை சட்டமும் (Indian Succession Act) 

 முஸ்லீம்கள் என்றால், இஸ்லாமிய சட்டங்களும் பொருந்தும். 

இந்து மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம் என நம் நாட்டு மக்கள் பின்பற்றும் மதங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளன. ஆனால் ஜாதி எனப்படும் குலம், சமுதாயங்கள் ஏராளமாக உள்ளது. ஒரே மதத்திலேயே பல்வகை ஜாதிகள் எனப்படும் பிரிவுகள் உள்ளன. நம்முடைய சட்டங்களில் மக்கள் பின்பற்றும் மதங்களை பற்றித்தான் கூறப்பட்டுள்ளதே தவிர, ஜாதியை பற்றி எதுவும் கூறவில்லை. எனவே பின்பற்றப்படும் மதத்தை பொறுத்து மட்டுமே சட்டங்கள் மாறுமே தவிர, ஜாதியை பொறுத்து எதுவும் மாறாது. 

கலப்பு திருமணத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். 

1. ஒரே மதத்தை சேர்ந்த வேறுபட்ட இரண்டு ஜாதியினர் செய்து கொள்ளும் திருமணம் 

2. ஒரு மதத்தை சார்ந்தவர் மற்றொரு மதத்தை சார்ந்தவரை செய்து கொள்ளும் திருமணம் 

மேலே கூறப்பட்டுள்ள முதல் வகையில் மதம் மாற வேண்டிய அவசியம் ஏற்படாது. மதக் கோட்பாடுகளின்படி திருமணம் செய்து கொள்வார்கள். திருமணத்திற்கு முன்னும், பின்னும் ஒரே மதம் என்பதால் சொத்துரிமை, திருமணம் பற்றிய சட்டங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது. ஆனால் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவருக்கு அரசு கொடுத்துள்ள சலுகைகளை அவரை மணந்து கொண்டவர்களும், அவர்களது குழந்தைகளும் அனுபவிக்க முடியுமா? என்ற கேள்வியும், குழந்தைகள் எந்த ஜாதியை சேர்ந்தவர்களாக கருதப்படுவார்கள் என்ற கேள்வியும் இயல்பாகவே எழும். 

இரண்டாவது வகை கலப்பு திருமணத்தில், ஒரு மதத்தை சார்ந்தவர் வேறு மதத்தை சார்ந்த ஒருவரை கலப்பு திருமணம் செய்து கொள்ளும் போது, யாராவது ஒருவர் இன்னொருவரின் மதத்திற்கு மாறி, அந்த மதக் கோட்பாடுகளுக்கு ஏற்ப திருமணம் செய்து கொள்ளக்கூடும். அப்போதும் இருவரும் ஒரே மதமாக இருப்பதால், அந்த மதத்திற்குரிய சட்டங்களின்படி திருமணம் மற்றும் வாரிசுரிமை சட்டங்கள் பொருந்தும். ஆனால் இங்கேயும் குழந்தைகள் என்ன ஜாதி என்ற கேள்வி எழும். 

இந்த ஜாதி குறித்த கேள்விகள் கொண்ட வழக்கு பம்பாய் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

ராஜேந்திர ஸ்ரீவஸ்தவா Vs மகாராஷ்டிரா மாநில அரசு (2010-112-Com LR - 762) என்ற வழக்கில் கீழ்க்கண்டவாறு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. 

1. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது மலை ஜாதியினரை சேர்ந்த ஒரு பெண், உயர் ஜாதியை சேர்ந்த ஒரு ஆணை திருமணம் செய்து கொள்வதால், அவள் பிறந்த போது இருந்த ஜாதியில் திருமணத்தால் எந்த மாற்றமும் இருக்காது. 

(பம்பாய் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் "ரமேஷ்பாய் தபாய் நாயக் Vs குஜராத் மாநில அரசு மற்றும் பலர் " என்ற வழக்கில் உறுதிப்படுத்தி உள்ளது) 

2. உயர்ந்த அல்லது முற்பட்ட ஜாதியை சேர்ந்த ஒரு பெண், மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த ஒரு ஆணை, திருமணம் செய்து கொண்டால், தாழ்த்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கு (அதாவது அவளது கணவனின் வகுப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளை) கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளை அவள் அனுபவிக்கலாமா என்ற கேள்விக்கு "அவ்வாறு அனுபவிக்க முடியாது" என்று விடை கூறியுள்ளது உச்சநீதிமன்றம். 

( The Hobn'ble SC of india has held that a candidate who had the advantageous start in life being born in a forward community and had much of advantageous life but is transplanted in backward class by adoption, marriage or conversation does not become eligible to the benefits or reservation) 

3. ஒரு கலப்பு திருமணம் அல்லது பழங்குடி இனம் மற்றும் அது அல்லாத பிரிவை சார்ந்த இருவருக்கும் நடைபெற்ற திருமணத்தில், அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தகப்பனாரின் ஜாதியை பெறுவார்கள் என்று அனுமானிக்கப்படுகிறது. 

உயர்ந்த ஜாதி ஆணை திருமணம் செய்து கொண்ட ஒரு பழங்குடி இனப் பெண்ணுக்கு பிறந்த குழந்தைகள் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்ற கேள்வி உச்சநீதிமன்றத்தில் " ரமேஷ்பாய் தபாய் நாயக்" என்ற வழக்கில் எழுந்தபோது, உச்சநீதிமன்றம், அந்த குழந்தைகள் தகப்பனாரின் ஜாதியை பெறுவார்கள் என்று தீர்ப்பு கூறியது. 

அதுபற்றி மேலும் கூறுகையில், உச்சநீதிமன்றம், இந்த அனுமானம் இறுதியானது என்றோ திருத்த முடியாது என்றோ கூற முடியாது. அத்தகைய திருமணத்தில் பிறந்த குழந்தைகள் நினைத்தால், தாங்கள் அவர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தங்கள் தாயாரால் தான் வளர்க்கப்பட்டோம் என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் அவர்களது தந்தை சார்ந்துள்ள உயர் ஜாதியினராக கருதப்படுவதால் அவர்களுக்கு எந்தவித நன்மையுமில்லாததோடு பலவித இழப்புகளுக்கும் ஆளாக நேரிட்டது என்று கருதினால் மேற்கண்டவாறு ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம் 

(But by no means the presumption is conclusive or irrefutable and it is open to the child of such marriage to lead evidence to show that he / she was brought up by the mother who belonged to the Schedule Caste / Schedule Tribe. By virtue of being the son of a forward caste father he did not have any advantageous start in life but on the contrary suffered the deprivations indignities, humilities and handicaps like any other member of the community to which his / her mother belonged) 

ஏற்கனவே கூறியுள்ளபடி குடும்ப சொத்துகளுக்கான வாரிசுரிமையை பொறுத்தவரை அவரவர் சார்ந்துள்ள மதத்தை ஏற்ப இந்து வாரிசுரிமை சட்டமோ அல்லது இந்திய வாரிசுரிமை சட்டமோ பொருந்தும். 

இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் வேறு மதத்தை சேர்ந்தவரை கலப்புத் திருமணம் செய்து கொண்ட பிறகு அவர் இந்து மதத்தில் இல்லாத காரணத்தினால் தாழ்த்தப்பட்ட ஜாதிகளுக்கான ஒதுக்கீடு போன்றவற்றை கோர இயலாது. அவ்வாறு மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் எந்த மதமாக இருந்தாலும், மேற்படி சலுகைகளை பெற அவர்கள் இந்துவாக இருந்தால் மட்டுமே முடியும்.