ஒரு சிறு விளக்கம் ...
1. அலுவலகம் & வீடு வாடகைக்கு விடுவோர் இனி 12% GST கட்ட வேண்டும். இப்போது இருக்கும் 18% லிருந்து இது குறைக்கப்படுகிறது
2. வீட்டு வாடகைக்கு GST வரியா ? ஆமாம் மாதம் 1.65 லட்சத்துக்கு மேல் வாடகை வருவாய் இருந்தால் மட்டுமே வரி. அதாவது ஆண்டுக்கு 20 லட்சத்துக்கு மேல் இருந்தால் மட்டும்.
3. சாதாரண வீட்டு வாடகைக்கு எல்லாம் வரி இல்லை. ஆனால் ஒரே ஹவுஸ் ஓனர் பல வீடுகளை வாடகைக்கு விட்டு அதன் மொத்த வருவாய் ஆண்டுக்கு 20 லட்சம் மேலே வந்தால் வரி உண்டு
4. பொதுவாக Flats, Apartments, Guest House, Villa வாடகை தான் GST வரிக்குள் வரும். சாதாரண குடியிருப்பு அல்ல.
5. பெரும் வருவாய் உள்ளவர்கள் ஊருக்கு ஊர் flat வாங்கி வாடகைக்கு விடுவது இப்போது அதிகரித்து உள்ளது. அவர்களுக்கு இந்த GST வரி பொருந்தும்
6. வீடுகளை investment ஆக வாங்கி அதை பெரிய நிறுவனங்களுக்கு Guest House, Transit Accommodation என வியாபாரம் செய்யும் ஆட்களுக்கு தான் வரி.
7. சாதாரணமாக 5k - 20k வரை வாடகை செலுத்தும் மக்களுக்கு இந்த GST வரி இருக்காது (ஹவுஸ் ஓணருக்கு அதிக வீடுகள் இல்லை என்றால்)
8. அலுவலகமாக வாடகைக்கு விடும் வீடுகளுக்கும் வரி உண்டு.
எனவே இதில் குழம்பி கொள்ள எதுவும் இல்லை. மேலும் வாடகை வரி குறைக்கப் படுகிறது. அவ்வளவு தான்.
No comments:
Post a Comment