Thursday, October 28, 2021

000076. Rights of Advocates under Advocates Act

 குடும்ப நீதிமன்ற சட்ட பிரிவு 13 படி வழக்கறிஞர்கள் நீதிமன்ற அனுமதி பெற்று வழக்குக்கு உதவலாம் என உள்ளதை ஏதோ வழக்கறிஞர்கள் குடும்ப நீதிமன்றத்திற்கு வரவே கூடாது என்பது போல நடைபெறும் விவகாரங்களுக்கான ஒரு சட்ட விளக்கம். 


வழக்கறிஞர் சட்டம் பிரிவு 30 ன் படி (Rights of Advocates to Practise) இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள் சட்ட உரிமையோடு வழக்காடலாம். அதை வேறு எந்த சட்டமும் தடைசெய்ய முடியாது. நீதிமன்றங்களுக்கும் வழக்கறிஞர்களை நீதிமன்றத்தில் ஆஜராக கூடாது  என சொல்லும் அந்த அதிகாரம் இல்லை. 


ஷ சட்ட பிரிவு கடந்த 15/6/2011 முதல் நடைமுறைக்கு வருவதாக அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த பிரிவு 30 நடைமுறைக்கு வந்த பிறகு வேறு சட்டத்தில் உள்ள வழக்கறிஞர் ஆஜராக உள்ள தடை பிரிவுகள் சட்டப்படி செல்லாது. 


இதே சூழல் வழக்கை விசாரித்த மாண்புமிகு கேரளா உயர்நீதிமன்றம் குடும்ப நீதிமன்ற பிரிவு 13   வழக்கறிஞர் சட்ட பிரிவு 30க்கு repugnant என cp Shaji Vs Union of India வழக்கில் 2011லும் 


Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007ன் பரிவு 17 வழக்கறிஞர் சட்ட பிரிவு 30க்கு புறம்பானது என கேரள உயர்நீதிமன்ற மாண்புமிகு தலைமை நீதியரசர் மணிக்குமார் அவர்கள் தலைமையிலான அமர்வு kG suresh Kumar Vs Union of India 30.3.21லும் 


மாண்புமிகு டில்லி உயர்நீதிமன்றமும் Tarun Saxena vs Union of India 16.4.21ல் ஷ பிரிவு 17 வழக்கறிஞர் சட்ட பிரிவு 30க்கு விரோதம் என தீர்ப்பு அளித்துள்ளது. 


வேறு மாநில உயர்நீதிமன்றங்கள் மத்திய சட்டத்தை செல்லாது என அறிவித்தால் அது இந்தியா முழுதும் செல்லும் என மெட்ராஸ் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் M/S. Kusum Ingots & Alloys Ltd vs Union Of India And Anr  ( 2004- 6-scc -254) “An order passed on writ petition questioning the constitutionality of a Parliamentary Act whether interim or final keeping in view the provisions contained in Clause (2) of Article 226 of the Constitution of India, will have effect throughout the territory of India subject of course to the applicability of the Act.” என்ற உத்திரவு உள்ளது. 


செல்லாத குடும்பநீதிமன்ற பிரிவு 13 & மூத்த குடிமக்கள் சட்ட பிரிவு 17 ஆகியவற்றை வைத்துக்கொண்டு வழக்கறிஞர்கள் வரக்கூடாது என சொல்ல நீதிபதிக்கும் மாவட்ட கோட்டாச்சியருக்கும் அதிகாரம் இல்லை.

No comments:

Post a Comment